அண்மை பேட்டி ஒன்றில் தமிழ் திரைப்பட பிரபல இயக்குனர் சுந்தர் சி சந்தானம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு திரை வந்திருக்கும் மதகஜராஜா திரைப்படத்தை சுந்தர் சி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஷால், சந்தானம், மனோபாலா, மணிவண்ணன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
தற்போது இந்த படத்துக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு நீண்ட நாட்களுக்குப் பிறகு சிரித்து மகிழக்கூடிய அளவு அமர்க்களமாக ஒரு அற்புதமான படம் என்று விமர்சனத்தை வைத்திருக்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க இந்த படம் குறித்து சமீபத்திய பேட்டி கொண்டு சுந்தர் சி பேசிய விஷயம் பலரையும் ஆச்சரியத்தில் தள்ளியுள்ளது.
இதற்கு காரணம் இந்த படத்தில் நடித்த நடிகர் மணிவண்ணன், மனோபாலா போன்றோர் மறைந்து விட்டார்கள் என்பதை வேதனை பொங்க பதிவு செய்திருக்க கூடிய இவர் மீண்டும் பெரிய திரையில் அவர்களை பார்க்கும் போது நெகிளச்சியாக இருந்தது என்று கூறினார்.
மேலும் இதைத் தொடர்ந்து சில விஷயங்களை பேசி அவர் நடிகர் சந்தானம் குறித்து சில விஷயங்களை பதிவு செய்ததை அடுத்து சந்தானம் குறித்து கேள்வி எழுப்பிய போது இதை சொன்னால் கட்டாயம் அவர் கோவிச்சுக்கு வாரு இருந்தாலும் சொல்லுகிறேன் என்ற பீடிகையை போட்டார்.
இதற்கு காரணம் நடிகர் சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிக்க வேண்டும் ஒரு காமெடியனாக சந்தானத்தை மிகவும் மிஸ் பண்ணி விட்டதாக சொல்லி இருக்கக் கூடிய அவர் வி மிஸ் யூ சந்தானம் என்ற வார்த்தையை பதிவு செய்தார்.
எனவே விரைவில் காமெடியனாக சில கதாபாத்திரங்களை அவரை காண ஆவலாக இருப்பதாக சொல்லி இருப்பதை அடுத்து அதே கோரிக்கையை ரசிகர்கள் முன் வைத்திருக்கிறார்கள்.
Summary in English: :In a recent interview about the much-anticipated movie “Madhagajaraja,” director Sundhar C had a heartfelt request for actor Santhanam that definitely brought some laughs. With a twinkle in his eye, Sundhar playfully urged Santhanam to keep his signature humor intact throughout the film. He knows that fans love Santhanam’s unique comedic style, and he wants to ensure that it shines through in every scene.