Sunday , 2 February 2025

நயன்தாராவால் சிக்கலில் நெட்பிளிக்ஸ்  சூடான விவாதம்.. கடைசியில் தனுசுக்கு அடித்த லக்!!

நயன்தாரா மற்றும் தனுசுக்கு இடையே ஏற்பட்ட தகராறுகள் உங்களுக்கு நினைவில் இருக்கும் நயன்தாராவின் ஆவணப் படத்தில் நானும் ரவுடிதான் காட்சியை பயன்படுத்தியதற்காக இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷ் ஒண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று நெட்பிளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது அது குறித்து பார்க்கலாம். 

நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் என்ற படத்தின் சில காட்சிகள் தெரியாமல் பயன்படுத்தப்பட்டதை அடுத்து 10 கோடி ரூபாய் அளவில் இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை தொடுத்தது. 

இதில் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நெட் பிளக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை ஆரம்பகட்டத்திலேயே நிகராக இருக்க வேண்டும் என்று நெட் பிளக்ஸ் நிறுவனம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணை நடைபெற்ற போது நெட்பிளிக்ஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பார்த்தசாரதி திரைப்படத்தில் இடம்பெறாத படப்பிடிப்புக் காட்சிகளுக்கு பதிப்புரிமை கோர முடியாது எனவும் படப்பிடிப்புக் காட்சிகள் 2020 ஆம் ஆண்டு வெளியான போதும் தாமதமாக 2024 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருப்பதாக கூறினார். 

மேலும் இந்த வழக்கை காப்பிரைட் சட்டத்தின் கீழ் தொடர முடியாது என்றும் இந்த காட்சிகள் கடந்த 2020 ஆம் ஆண்டு பொதுத்தளத்தில் உள்ளதாகவும் மூன்றாவது நபர் தான் இந்த காட்சிகளை எடுத்ததாகவும் வாதிட்டார். 

இதை அடுத்து ஆவணப்படம் தொடர்பாக 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி தனுஷிடமிருந்து நெட்பிளிக்ஸ் வழக்கறிஞருக்கு நோட்டீஸ் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு அந்த ஆவணப்படம் வெளியான ஒரு வாரம் கழித்து தான் இந்த வழக்கு தொடரப்பட்டு இருப்பதால் ஆரம்ப கட்டத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

ஆனால் இதற்கு தனுஷின் தரப்பில் ஆஜரான மூத்த  வழக்கறிஞர் பி எஸ் ராமன் நானும் ரவுடிதான் படத்தில் பயன்படுத்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் தனக்கு சொந்தம் என்றும் ஆவணப்படத்தின் ட்ரெய்லர் வெளியான போது மூன்று வினாடிகள் காட்சி மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

அந்த காட்சியை பயன்படுத்துவதை தவிர்க்க கூறிய போது நயன்தாரா தரப்பில் வெளிப்படையான பதிப்புரிமைக்கான நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று பொதுவெளியில் கடிதம் எழுதினார் என்று கூறி இருக்கிறார். 

மேலும் இது குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்ற போது அனைத்து தரப்பு விவாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி அப்துல் குத்தூஸ் வொண்டர் பார் நிறுவனத்தின் வழக்கை நிராகரிக்க வேண்டும் என நெட்பிளிக்ஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார். 

மேலும் இந்த வழக்கு குறித்து உரிமையியல் வழக்கின் விசாரணையை பிப்ரவரி 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்ததை அடுத்து சினிமா பிரபலங்களின் மத்தியில் இந்த விஷயம் பேசும் பொருளாக மாறி உள்ளது.

Summary in English: So, here’s the scoop: the Madras High Court has officially dismissed Netflix’s petition in the Dhanush-Nayanthara case. If you’ve been following this story, you know it’s been quite a ride! Netflix was hoping to get some clarity on certain issues surrounding their content featuring these two mega stars, but the court had other plans.

Check Also

ஏஐ படிப்பை முடித்த கையோடு சென்னை வந்த கமலஹாசன்.. விமான நிலையத்தில் உடைத்த செய்தி..!

Kamal Haasan is back in Chennai, and it looks like he’s got some exciting stories to share! After a whirlwind trip to the US, where he dove deep into the fascinating world of AI technology, fans are buzzing with anticipation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *