Wednesday , 22 January 2025

குழந்தை இருக்குன்னு சொல்லியும் டார்ச்சர் செய்தாங்க.. மலையாள நடிகர் பற்றி நடிகை மீனா பேச்சு..!

நடிகை மீனா மலையாளத்தில் தனக்கு நடந்த டார்ச்சர் குறித்து அண்மை பேரில் பேசிய விவரங்கள் பற்றி இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். 

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த நடிகை மீனா ரஜினிகாந்த், சத்யராஜ், கமலஹாசன், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்தவர். 

கண்ணழகியாக சித்தரிக்கப்படும் நடிகை மீனா ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்த இவர் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகுக்கு அறிமுகமானார். 

குழந்தை இருக்குன்னு சொல்லியும் டார்ச்சர் செய்தாங்க..

இந்நிலையில் பிரபல நடிகையான இவர் நடிகர் மோகன்லால் குறித்தும் அவரோடு இணைந்து நடித்த திரிஷ்யம் படத்தில் நடந்த அனுபவங்கள் குறித்தும் அண்மை பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அப்படி அவர் அந்த பேட்டியில் அந்த படம் குறித்து சில அனுபவங்களை சொல்லும்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் தன்னுடைய மகள் நைனிகா பிறந்ததாக சொன்னார். 

மேலும் கை குழந்தையோடு இருந்த சமயத்தில் படக்குழுவினர் தன்னை தொடர்பு கொண்டு நீங்கள் தான் திரிஷ்யம் படத்தில் ஹீரோயினியாக நடிக்க வேண்டும் அப்படி நடித்த தான் அந்த கதை சிறப்பாக அமையும் என்று கூறினார்கள். 

மேலும் மோகன்லால் என்னிடம் இதைக் கேட்டுக் கொண்டதை அடுத்து வேறு வழியில்லாமல் நான் என்னுடைய சூழ்நிலையை எடுத்துக் கூறினேன். இதற்கு காரணம் படப்பிடிப்பு நடக்கும் இடமும் மிகவும் ரிமோட்டான பகுதியில் இருந்தது. 

உண்மையைச் சொல்லப்போனால் அந்த இடத்தில் தொலைபேசி சிக்னல் கூட கிடைக்க முடியாத அளவு ஒரு குக் கிராமமாக அந்த இடம் இருந்ததால் போதுமான மருத்துவ வசதிகளும் இல்லாத இடத்தில் குழந்தைக்காக ஒரு மருந்தை வாங்க வேண்டும் என்றாலும் நீண்ட தூரம் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. 

மலையாள நடிகர் பற்றி நடிகை மீனா பேச்சு..

கைக்குழந்தையோடு அந்த இடத்தில் தான் எப்படி இருப்பேன் என்பது போன்ற விஷயங்களை கூறித்தான் நான் அந்த படத்தில் நடிக்க ஆரம்பத்தில் மறுத்தேன். எனினும் நான் தான் நடிக்க வேண்டும் என்று தொடர்ந்து நடிகர் மோகன்லால் டார்ச்சர் செய்துவிட்டார். 

மேலும் குழந்தையோடு அந்த இடத்தில் இருக்க முடியாது என்று சொன்னதை அடுத்தும் தொடர்ந்து நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்று டார்ச்சர் செய்து அந்த படத்தில் என்னை நடிக்க வைத்தார்கள். 

இந்நிலையில் படம் வெளிவந்த பிறகு அந்த படத்தில் நான் நடித்தது எவ்வளவு பெரிய நல்ல விஷயம் என்பதை புரிந்து கொண்டேன். 

இதற்குக் காரணம் அந்த படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் படப்பிடிப்பு நடந்த சமயத்தில் என்னுடைய குழந்தைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நடிகர் மோகன்லால் செய்து கொடுத்தார் என நடிகை மீனா பேசி இருக்கிறார். 

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது. 

Summary in English: Actress Meena recently shared some heartwarming memories from her time on the set of the blockbuster movie “Drishyam,” where she had the chance to work alongside the legendary Mohanlal. She reminisced about how his presence brought a unique energy to the filming process.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.