96, மெய்யழகன் திரைப்படத்தை அடுத்து இயக்குனர் பிரேம்குமார் எடுக்கும் படம் குறித்த அப்டேட் வெளிவந்துள்ளது. அது குறித்து விரிவாக இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.
ஊரார் ஒதுக்கி வைத்த ஓவியம் என்னை பொறுத்தவரை காவியம் என்ற கேள்வியை யார் முன்னால் வைத்தாலும் டக்கென்று மெய்யழகன் என்ற படத்தின் பெயரை பக்காவாக சொல்லுவார்கள்.
இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரன் என பல முன்னணி நடிகர்கள் நடித்து ரசிகர்களின் மனதை கவரக்கூடிய வகையில் திரைப்படம் அமைந்திருந்தது.
நெக்ஸ்ட் எமோஷனல் ட்ரீட் தயார்..
ஆரம்பத்தில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது மோசமான விமர்சனங்களை பெற்று தோல்வி படமாக மாறியது. ஆனாலும் இந்த படத்தில் இருக்கக்கூடிய உயிரும், உணர்வும் அந்த மோசமான விமர்சனங்களை மழுங்கடித்தது.
இன்றைய சூழ்நிலையில் ஒரு படத்தை பார்த்துவிட்டு அதற்கு எதிர்மறையாக விமர்சனத்தை கூறினால் தான் சினிமா அறிவு இருக்கிறது என்று பல பேர் திரையரங்குகள் நோக்கி வருகிறார்கள். படத்தை விமர்சனம் செய்ய வேண்டும் என்ற கோணத்திலேயே முழு படத்தையும் ரசிகர்கள் பார்க்கிறார்கள்.
அவர்கள் இடையே இருக்கக்கூடிய ரசிக்கும் தன்மை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என பிரபல நடிகர் ராம்கி அண்மை பேட்டி ஒன்றில் பேசி இருந்த விஷயம் உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.
இது எந்தப் படத்துக்கு பொருந்துகிறதோ, இல்லையோ இந்த மெய்யழகன் படத்துக்கு கச்சிதமாக பொருந்தும். இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் பலர் மைக்கை அவர் முன் நீட்டிய போது பலரும் எதிர்மறையான விமர்சனங்களை தான் பதிவு செய்தார்கள்.
இதனால் இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியான பிறகு ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாட ஆரம்பித்தார்கள். அவ்வளவு உணர்வுபூர்வமான உயிரோட கலந்த உண்மைக்கு நெருக்கமான ஒரு அனுபவத்தை திரையரங்கில் தவறவிட்டு விட்டோமோ என்று பதிவுகளை தொடர்ந்து பதிவு செய்தார்கள்.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான பிரேம்குமார் அவர்கள் தன்னுடைய அடுத்த படத்திற்கான பணிகளை ஆரம்பித்து இருப்பதாக கருத்துக்கள் வெளிவந்துள்ளது.
96, மெய்யழகனை அடுத்து பிரேம்குமாரின் புதிய படம்..
தமிழ் பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, எய்தவன், ஒரு பக்க கதை உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய இவர் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த 96 படத்தின் மூலம் இயக்குனர் ஆனார்.
மேலும் இந்த படத்தை ஜானு என்ற தலைப்பில் தெலுங்கில் இயக்கியதை அடுத்து சமீபத்தில் வெளிவந்த படம் தான் மெய்யழகன். இந்த படம் உண்மைக்கு நெருக்கமான கதைக்களத்தோடு வெளிவந்திருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
இதை அடுத்து தற்போது 96 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வேகமாக வெளி வருகிறது. இந்த படத்தை ஐசரி கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
சிங்கப்பூர் மலேசியா போன்ற இடங்களில் நடக்கும் படியான கதைக்களம் இந்த படத்தில் அமைந்திருக்கும்.
மேலும் இந்த படத்தில் முதல் பாகத்தில் வெளிநாட்டில் இருந்து திரிஷா தன்னுடைய பள்ளி கால நண்பர்களை சந்திப்பதற்காக இந்தியா வருவது போல கதைக்களம் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தற்போது வெளிநாட்டில் இந்த படத்தின் கதை எடுக்கப்படுவதால் விஜய் சேதுபதி அங்கு சென்று நடக்க கூடிய விஷயங்கள் பற்றி எடுக்கப்படலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
இதற்கான விடை விரைவில் தெரிந்து விடும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary in English: Meyyazhagan has been making waves in the film industry, and everyone is buzzing about what his next move will be. Known for his unique storytelling and captivating visuals, fans are eagerly waiting to see where he’ll take us next. Will he dive into a gripping thriller or perhaps explore a heartfelt drama?