சென்னையில் மழை பெய்த போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஊழல் செய்த அதிகாரிக்கு தக்க தண்டனையை கொடுத்தது பற்றிய விவரங்கள்.
தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்த எம்ஜிஆர் தமிழ்நாட்டின் முதல்வராக சிம்மாசனத்தில் அமர்ந்து சிறப்பான முறையில் ஆட்சி செய்ததை அடுத்து இந்த மூன்றெழுத்து மந்திரம் தமிழக மக்களை கட்டிப் போட வைத்தது.
அந்த வகையில் எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது ஒரு முறை மழை வெள்ளம் ஏற்பட்டு ராமாபுரம் தோட்டத்தில் தண்ணீர் புகுந்து விட்டது. இதை அடுத்து தலைமை செயலகத்திற்கு செல்ல முடியாத எம்.ஜி.ஆர் படக்கையில் ஏறி வந்து Conne Mara ஹோட்டலில் தங்குகிறார்.
இதைத் தொடர்ந்து இந்த ஹோட்டல் தான் அடுத்த ஒரு மாதத்திற்கு மேலாக அரசு அலுவலக செயல்படுகிறது. அப்போது ஒரு அதிகாரி ஊழல் செய்ததை அடுத்து எம்ஜிஆருக்கு அவப்பெயரும் அவமானமும் ஏற்பட்டுவிட்டது.
இதனால் கடுப்பான எம்ஜிஆர் அவருக்கு சஸ்பெண்ட் ஆர்டரை அடித்து வைத்துக்கொண்டு உடனடியாக அவரை வரச் சொல்லி இருக்கிறார். அப்படி அந்த அதிகாரி வந்தவுடன் அவர் மூஞ்சியில் சஸ்பெண்ட் ஆவதை வீசி எறிய வேண்டும் என்று காத்திருக்கிறார்.
அந்த அதிகாரியும் மதியம் ஒரு மணி வேளையில் அதுவும் எம்ஜிஆர் மதிய உணவு சாப்பிடக்கூடிய நேரம் பார்த்து வந்திருக்கிறார். அப்போது எம்ஜிஆர் அந்த அதிகாரியிடம் நீங்கள் சாப்பிட்டீர்களா என்று கேட்டார்.
அதற்கு அந்த ஊழல் அதிகாரியும் பயத்தோடு ஆம் சாப்பிட்டு விட்டேன் என்று கூறுகிறார். ஆனால் அவர் சொல்வது பொய் என்பதை அவரது முகத்தை பார்த்ததுமே எம்ஜிஆர் புரிந்து கொள்கிறார்.
இதனைத் தொடர்ந்து அந்த ஊழல் அதிகாரியிடம் முதல்ல நீங்க சாப்பிடுங்க அதுக்கப்புறம் எல்லாம் பாத்துக்கலாம் என்று சொல்ல அவர் வேண்டவே வேண்டாம் என்று மறுக்க மிரட்டக்கூடிய தொனியில் சாப்பிட போறீங்களா இல்லையா? என்று கேட்க சரி என்று சொல்லி விடுகிறார்.
இதனை அடுத்து அந்த அதிகாரி சாப்பிடுகிறார் வழக்கம் போல பரிமாறு இடம் அதை இதை வை என்று அதிகாரத்தோடு தோரணையில் அவரை பக்குவமாக விருந்து கொடுத்து உபசரிக்கிறார்.
அந்த ஊழல் அதிகாரி சாப்பிட்டு முடித்து தன் அறைக்கு வந்த பின் சில நிமிடங்கள் கழித்து எம்ஜிஆர் அங்கு சென்று கையில் வைத்திருந்த சஸ்பெண்ட் ஆர்டரை அந்த அதிகாரியின் முகத்தில் வீசி எறிகிறார்.
அது மட்டுமல்லாமல் இனிமேல் தன் முகத்தில் விழிக்க கூடாது என்று கட்டம் ரைட்டாக சொல்லி அதோடு சட்டப்படியும் அதே நேரம் தர்மப்படியும் எந்த ஒரு விஷயத்தையும் அணுகக் கூடிய அற்புத மனிதராக எம்.ஜி.ஆர் விளங்குகிறார் என்பதற்கு இந்த நிகழ்வே சான்றாக அமைந்துவிட்டது.
Summary in English: So, here’s a juicy tidbit from the archives! It’s said that MGR, the legendary actor-turned-politician, once threw a lavish bash at the Connemara Hotel for a corrupt officer. Yep, you heard that right! Picture this: glitzy chandeliers, fancy food, and all the glamour of one of Chennai’s most prestigious venues. But here’s where it gets interesting—shortly after this extravagant treat, MGR reportedly issued a suspension order against the same officer. Talk about a plot twist!