Wednesday , 22 January 2025
director talk amaran film

மேஜர் முகுந்த் பிராமண குடும்பம் என்பதை இதனால மறைத்தோம்.. வெளி வந்த ரகசியத்தால் சர்ச்சை..!

அமரன் திரைப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் பெற்றோர்கள் தனது மகன் தன்னை ஒரு இந்தியராகவும் தமிழராகவும் அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பியதால் தான் பிராமணர் என்பதை மறைத்தோம். 

தீபாவளியன்று வெளிவந்த திரைப்படங்களில் அமரன் திரைப்படம் சக்கை போடு போட்டு வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்ற திரைப்படமாக உள்ளது. 

ஒரு பயோபிக் திரைப்படமான இந்த திரைப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தை சிவகார்த்திகேயன் செய்ய அவரது மனைவி ரோலை சாய் பல்லவி செய்திருந்தார். 

மேஜர் முகுந்த் பிராமண குடும்பம் என்பதை ஏன் மறைத்தோம்.. 

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் மேஜர் முகுந்த் மனைவி கிறிஸ்துவ சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதை திரைப்படத்தில் அப்படியே காட்டியிருந்தார்கள். எனினும் மேஜர் முகந்த் வரதராஜ் இன் அடையாளத்தை அப்படியே மறைத்து விட்டார்கள். 

amaran sk

அவர் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை ஏன் மறைத்தார்கள். யாராவது அழுத்தம் கொடுத்தார்களா? என்பது போல பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது உங்கள் நினைவில் இருக்கலாம். 

அது மட்டுமல்லாமல் ஒரு பயோபிக் திரைப்படத்தில் ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக ஆக்கும் போது அவர் பிராமணர் என்று திரையில் காட்டுவதில் என்ன தவறு. 

அதை ஏன் திரையில் காட்டவில்லை. யாருக்காக பயப்படுகிறீர்கள். அப்படி திரையில் காட்டாமல் போனதற்கு என்ன காரணம் என்று அடுக்கடுக்கான கேள்விகளை பிரபல நடிகை மதுவந்தி சமீபத்திய மேடை நிகழ்ச்சி ஒன்றில் கேள்விகளை சூடாக கிளப்பி இருந்தார். 

இந்நிலையில் இந்த விஷயமானது வெகுஜன மத்தியில் பேசும் பொருளாக மாறியதோடு மட்டுமல்லாமல் இதற்கான காரணத்தை அறிந்து கொள்ள அனைவரும் பல்வேறு வகைகளில் முயற்சி செய்தார்கள்.

வெளி வந்த ரகசியத்தால் சர்ச்சை..

இதை அடுத்து இந்தக் கேள்விக்கு உரிய பதிலை அந்த படத்தை இயக்கிய இயக்குனரே தற்போது தந்திருப்பதை அடுத்து அதற்கான காரணம் என்ன என்ற ரகசியம் வெளி வந்துள்ளது. 

அந்த விஷயத்தை பொறுத்த வரை அவர் கூறியது மேஜர் முகுந்த் வரதராஜன் பிராமணர் என்ற அடையாளத்தை மறைப்பதற்கு காரணம் அவருடைய மனைவி இந்து ரெபெக்கா வர்கீஸ் மற்றும் அவருடைய பெற்றோர்கள் கீதா, வரதராஜ் ஆகியோர்தான் காரணம்.

amaran

அவர்கள் என்னிடம் இது குறித்து பேசும் போது முகுந்த் தன்னை ஒரு இந்தியராக தான் முதலில் அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறார். அதற்கு அடுத்தபடியாக தமிழ் மீது அவருக்கு ஆர்வம் அதிகம் இருந்ததால் தன்னை ஒரு தமிழராகவும், இந்தியராகவும் வெளிப்படுத்திக் கொள்வதிலேயே பெருமை கொண்டார் என்ற விஷயத்தை கூறினார்கள். 

அதுமட்டுமல்லாமல் தன்னுடைய சான்றிதழ்களில் கூட மத அடையாளம் வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்ததாக சொன்னதை அடுத்து அவர்களது பேச்சுக்கு மரியாதை கொடுத்து முகுந்த் வரதராஜை ஒரு பிராமணர் என்ற அடையாளம் காட்டாமல் மறைத்தோம். 

இந்நிலையில் இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில் அவர் என்ன ஜாதியைச் சார்ந்தவர் என்பதை காட்டவில்லை என்று விமர்சனம் செய்வது வேதனையாக இருக்கிறது என்று தன் பதிவில் கூறி இருக்கிறார் இயக்குனர். 

இதை அடுத்து மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. அதில் திருமணத்திற்கு முன்பு முகம் வரதராஜ் பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு ஏன் அவர்கள் சேர்ந்து வசிக்கவில்லை. அதற்கு என்ன காரணம் என்பதை படத்தில் தெளிவாக காட்டவில்லை என்கிறார்கள். 

அத்தோடு முழுக்க முழுக்க மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை நகர்வுகளை குறித்த படம் என்பதால் இதில் அவரது மனைவி ஏன் தனியாக வசிக்கிறார் என்பது தேவையில்லாத காட்சி என்பதை யூகிக்க முடிகிறது. 

amaran family

மேலும் முகுந்த் வரதராஜ் ஒரு பிராமணர் என்பதை மறைப்பதால் அவரை தமிழராக மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா? அல்லது இந்தியராக ஏற்றுக்கொள்வார்களா? இதில் எந்த வகையான மனநிலையில் இருப்பார்கள்.

அப்படி என்றால் பிராமணர்கள் தமிழ் சமுதாயத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் இல்லையா? இந்த எண்ணம் எங்கிருந்து தோன்றுகிறது? இதற்கான விதை யார் போட்டது எப்படி வருகிறது. 

இது குறித்து தொடர்ந்து விவாதங்கள் எழுந்து கொள்ளக்கூடிய நேரத்தில் இந்த விவாதங்களை இந்த படத்தின் பிரமோஷன் ஆகவும் மாறிவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.

Summary in English : In the latest episode of “Amaran,” we were treated to some fascinating revelations about Major Mukunth. It turns out that this seemingly straightforward character has layers that go way deeper than we initially thought. His concealed Brahmin identity adds a whole new dimension to his persona, making us rethink everything we thought we knew about him.

Check Also

என் மார்பகத்தை பார்த்து பிரபலம் சொன்ன வார்த்தை.. நான் எதிர்பார்க்கவே இல்லை சீக்ரெட் குடைத்த ஊர்வசி..!

The "karavai-maadu-moongu-kaalai-maadu-onnu" song controversy has been making waves lately, and it’s hard to ignore the buzz surrounding it! This catchy tune, which has captured the hearts of many, has also sparked quite a debate.