Wednesday , 22 January 2025

பெயரை மாற்றிக் கொண்ட ஜெயம் ரவி @ ரவி மோகன்..! அறிக்கையில் இதை கவனித்தீர்களா..?

நடிகர் ஜெயம் ரவி, ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் தெரிவதற்கு அறிமுகமானதை அடுத்து இவர் தன்னுடைய பெயரில் அடைமொழியாய் முதல் படத்தை இணைத்துக் கொண்டார். இந்நிலையில் தற்போது தன் பெயரை மாற்றி இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார் அது குறித்து பார்க்கலாம். 

ஜெயம் ரவி தன்னுடைய பெயரை ரவி மோகன் என்று மாற்றிவிட்டதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டதை அடுத்து இத்தனை நாட்களாக ஜெயம் ரவி என்று அழைத்த அனைவரும் இனி அவரை அன்போடு ரவி மோகன் என்று அழைக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைத்திருக்கிறார். 

மேலும் இது நிமித்தமாக அவர் பேசும்போது ஊடகங்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் தன்னை ஜெயம் ரவி என்று இது வரை குறிப்பிட்டதை அடுத்து இந்த புதிய பெயரில் அழைக்க சற்று சிரமம் ஏற்படலாம் அதற்கு மன்னிப்பும் கோரி இருக்கிறார். 

தன்னுடைய வாழ்க்கையில் இனி துவக்க இருக்கும் புதிய அத்தியாயத்தை தொடங்குவதற்கு அஸ்திவாரமாக இந்த பெயர் மாற்றத்தை அவர் கருதுவதாக சொல்லிவிட்டார். 

மேலும் அதற்குரிய ஆதரவுவை அனைவரும் கொடுக்க வேண்டும். என்னுடைய பெயரை ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் இனி ரவி மோகன் என்று குறிப்பிட வேண்டும் என்பதை வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டார். 

அதுமட்டுமல்லாமல் இவர் ரசிகர் மன்றத்தை பெயரையும் மாற்றுவதாக தன்னுடைய ஜெயம் ரவி ரசிகர் மன்றம், இனிமேல் ரவி மோகன் அறக்கட்டளை என்ற பெயரில் இயங்கும் என்று கூறியதோடு பிறருக்கு உதவும் நோக்கத்தில் என்னுடைய ரசிகர் மன்றத்தை அறக்கட்டளையாக மாற்ற ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக சொல்லி இருக்கிறார். 

மேலும் இந்த பெயர் மாற்றத்திற்கு முக்கிய காரணமே அவர் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை துவங்குவது தான்.

 சில விஷயங்களை தன் வாழ்க்கையில் மாற்றிக் கொள்ள விரும்புவதாகவும் அதற்கு ஒரு வலுவான அடையாளம் தேவை என்பதால் இந்த பெயர் மாற்றத்தை செய்ததாகவும் சொல்லியிருக்கிறார். 

எனது ரசிகர்கள் அனைவரும் இதுகுறித்து எந்தவித கருத்துக்களையும் சொல்லாமல் ரவி மோகனுக்கு இனி ஜெயம் ரவிக்கு கொடுத்த அதே ஆதரவு நம்பிக்கை, ஊக்கம் ஆகியவற்றை தர தாழ்மையோடு கேட்டுக் கொள்வதாக பதிவு செய்திருக்கிறார். 

இதை எடுத்து இணையத்தில் இந்த பெயர் மாற்றம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருவதோடு அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் அன்பான ரசிகர்கள் செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள்..

அசாத்திய நம்பிக்கை அளவற்ற கனவோடு புத்தாண்டில் கால் பதிக்கும் இந்த தருணத்தில் என் வாழ்க்கையில் புதிய பயணத்தை குறிக்கும் மாற்றத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக கூறி இருக்கிறார். 

மேலும் தன் வாழ்க்கையில் சினிமா மீதான பற்று கடந்த காலத்திலும் தற்போதும் எந்த விதமான மாற்றம் இன்றி அப்படியே உள்ளதாகவும் இன்று இந்த நிலையில் இருக்க அடித்தளம் அதுதான் அமைத்துக் கொடுத்ததாகவும் சொன்னார். 

தனது சினிமா பயணத்தை திரும்பிப் பார்க்கும் இந்த நேரத்தில் சினிமாவிற்காக எனக்கு வழங்கிய வாய்ப்புகள் அன்பு ஆதரவு அனைத்துக்கும் கடமைப்பட்டதாக சொன்ன அவர் வாழ்க்கை, அன்பு மற்றும் எல்லாவற்றிற்கும் சினிமா துறை எனக்கு பக்கபலமாக இருந்தது போல் உங்கள் ஆதரவை என்றும் நாடுவதாக சொல்லி இருக்கிறார். 

மேலும் இந்த நாள் தொடங்கி நான் ரவி , ரவி மோகன் என்று அழைக்க விரும்புகிறேன். இந்த பெயரை என் தனிப்பட்ட வாழ்க்கையை திரைத்துறை கனவுகளை முன்னோக்கி எடுத்துச் செல்லும். 

என் கனவு மற்றும் புதிய பயணத்தை தொடங்க ரவி மோகன் பெயரை அனைவரையும் அழைக்குமாறு விரும்பி கொள்கிறேன். இனிவரும் காலங்களில் என்னை யாரும் ஜெயம் ரவி என்று அழைக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொண்டார். 

மேலும் ரவிமோகன் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதில் மகிழ்ச்சி அடைவதாகவும் இந்த நிறுவனம் உலக அளவில் ரசிகர்களால் கொண்டாடும் சினிமாவை திரைக்கு கொண்டு வந்து சேர்க்கக் கூடிய நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சொன்னார். 

அது மட்டுமல்லாமல் இந்த நிறுவனம் நல்ல திறமையாளர்களுக்கும், நல்ல கதைகளுக்கும் முக்கியத்துவம் தருவதோடு அர்த்தமுள்ள கதைகளை திரைக்கு கொண்டுவர முயற்சி செய்யும். 

அன்பான ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி சிறந்த சமுதாயத்தை உருவாக்க ரசிகர் எனக்கு பலமாகவும் ஊக்கமும் அளிக்க வேண்டும். சமூகத்திற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய என் ரசிகர் மன்றத்தை அறக்கட்டளையாக மாற்றி இருப்பதை அடுத்து உங்கள் அன்பும், ஆதரவும் எனக்கு எப்போதும் தேவை. 

தமிழ் மக்கள் ஆசியுடன்  ஊடகத் துறையைச் சார்ந்த அனைவரும் என்னை இனி ரவி மோகன் என்று அழைத்து ஆதரவை அளிக்குமாறு பணிவோடு வேண்டிக் கொள்கிறேன். உங்களது ஊக்கம் தான் என்னை இன்னும் ஊந்துதலோடு ஒரு புதிய பயணத்தில் கரை சேர்க்கும். 

அத்தோடு அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் கூறிக் கொள்வதோடு நேர்மறை மற்றும் முன்னேற்றம் நிரம்பிய ஆண்டாக இந்த ஆண்டை மாற்றுவோம் என்று சொல்லி இருக்கிறார். 

Summary in English: Imagine the possibilities—new roles, different vibes, and maybe even some unexpected projects on the horizon. This could be an exciting new chapter in his career! Whether you’ve been a fan since his debut or just discovered his work recently, there’s no denying that this name change adds an intriguing twist to the tale of Jayam Ravi. We can’t wait to see what’s next for Ravi Mohan!

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.