நடிகர் நட்டி நடராஜன் தனக்கு தளபதி விஜயோடு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவம் ஒன்றை அண்மை பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆன நட்டி நட்ராஜ் சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துக் கொண்டு இருப்பதை அடுத்து சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து அசத்தினார்.
இந்தத் திரைப்படமானது இவருக்கு நாடு முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்ததோடு இதனை அடுத்து பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க கூடிய சந்தர்ப்பத்தை பெற்று தந்தது.
அந்த வகையில் தளபதி விஜய் உடன் இவருக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் ஓபன் ஆக பேசியவர் புலி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தொடர்ந்து 22 நாட்கள் ஒரே இடத்தில் ஷூட்டிங் நடந்ததாக சொல்லி இருக்கிறார்.
அந்த ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டால் ரூமுக்கு செல்ல வேண்டும். ரூமில் இருந்து கிளம்பினால் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு செல்ல வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வேறு எங்கும் செல்ல முடியாத ஒரு நிலை இருந்தது.
ஒரு நாள் மாலை சீக்கிரமே படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் வெளிச்சம் குறைவாகவும் மழை இருந்த காரணத்தால் படப்பிடிப்பை நாலு மணிக்கே முடித்துவிட்டார்கள்.
இதனை அடுத்து தளபதி விஜய் தன்னுடைய அறைக்கு சென்று விட்டார். அங்கு அவரால் பொழுதை கழிக்க முடியவில்லை. உடனே என்னை கூப்பிடச் சொல்லி அழைத்தார் நானும் அங்கு சென்றேன்.
அப்போது அவர் என்னிடம் இந்த நாலு சுவற்றுக்குள் இருக்க கஷ்டமாக இருக்கு சென்னையில் படப்பிடிப்பு இருந்தால் எங்காவது சிட்டியை விட்டு வெளியே சென்று வரலாம். இங்கே எங்கே செல்வது என்று தெரியவில்லை என்ன பண்ணலாம் என்று என்னிடம் கேட்டார்.
உடனே நானும் பிரச்சனை ஒன்றும் இல்லை நீங்கள் லுங்கி கட்டிக்கோங்க தலையில் முண்டாசு கட்டிக்கோங்க. அப்படியே வெளியே போய்விட்டு வரலாம் என்று சொன்னேன்.
மேலும் அவருடைய உதவியாளர்கள் யாரும் தன்னை பின் தொடர்ந்து வர வேண்டாம் என்று சொல்லிவிட்டு தலையில் முண்டாசு கட்டி லுங்கியோடு ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு விஜய் மாறிவிட்டார்.
இதைத்தொடர்ந்து நாங்கள் இருவரும் சாதாரணமாக ஹோட்டலை விட்டு வெளியே சென்று சிறிது தூரம் நடந்தோம். அங்கு சாலையோர டீக்கடை ஒன்றைப் பார்த்த விஜய் எனக்கு டீ வேண்டும் என்று கேட்டார். இங்கு நீங்கள் டீ குடிக்கிறீங்களா? என்று நான் கேட்டேன்.
அதற்கு அவர் ஹோட்டலில் போய் குடிக்க வேண்டாம் எங்கேயே குடித்து விடலாம் என்று சொல்ல நானும் டீ வாங்கிக் கொடுத்தேன். அதை குடித்துவிட்டு சிறிது தூரம் நடந்து சென்றோம். அங்கு ஓர் ஆறு இருந்தது அதில் குளிக்க ஆசையாக இருக்கிறது என்று சொன்னார்.
இதைத் தொடர்ந்து எதுக்கு சார் வெயிட் பண்றீங்க வாங்க குளிக்கலாம் என்று சொல்லி இருவரும் ஆற்றில் இறங்கி குளித்தும் மகிழ்ந்தோம் என விஜய்யோடு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவத்தை பகிர்ந்ததை அடுத்து ரசிகர்கள் அனைவரும் பிரமிப்பில் உறைந்து போனார்கள்.
Summary in English: Actor Natty, or as many know him, Natraj, recently shared some hilarious and wild stories from his time filming “Puli” alongside the one and only Actor Vijay. Imagine stepping onto a set that’s bursting with color—bright costumes, intricate props, and an electric vibe that just screams excitement!