Wednesday , 22 January 2025

மருமகனோடு மட்டுமல்லாமல் மாமனாரிடமும் சிக்கிய நயன்தாரா..! வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

நடிகை நயன்தாரா ஏற்கனவே தனது ஆவண படத்தை வெளியிட்ட விவகாரத்தில் தனுஷிடம் சிக்கிய நிலையில் தற்போது சந்திரமுகி படத்தின் சில காட்சிகளை பயன்படுத்தியதாக சொல்லி அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அந்த தயாரிப்பு நிறுவனம் அது குறித்து பார்க்கலாம். 

இதுவரை திரைகளில் யாரும் செய்யாத திருமண நிகழ்வை ஒரு ஆவண படமாக வெளியிட்டு அதன் மூலம் பல கோடிகளை பெற்றிருக்கிறார் நடிகை நயன்தாரா.

இதைத் தொடர்ந்து இது குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் வெளிவந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். மேலும் திருமணத்திற்கு எந்த ஒரு பத்திரிக்கையாளரும் அனுமதிக்கப்படவில்லை. 

மருமகனோடு மட்டுமல்லாமல் மாமனாரிடமும் சிக்கிய நயன்தாரா..

நெட்பிளக்ஸ் சாராத எந்த ஒரு புகைப்படக் கலைஞனும் உள்ளே செல்ல முடியாத நிலையில் யாரும் செல்ஃபோன் கொண்டு வரக்கூடாது என்பது போன்ற கட்டுப்பாட்டுகளோடு இவரது திருமணம் இனிதே நடைபெற்றது. 

இது பற்றியும் கடுமையான விமர்சனங்கள் எழுந்ததோடு ஊரில் இல்லாத அதிசய கல்யாணம் என்பது போல பலரும் பல வகையில் விமர்சனங்கள் செய்தார்கள். 

திருமணமாகி பல ஆண்டுகள் ஆன நிலையில் இந்த திருமணத்தில் ஆவண திரைப்படம் வெளிவராமல் இருந்தது இதற்கு காரணம் நடிகர் தனுஷ் என்று சமீபத்தில் கோபமாக அறிக்கையை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டிக் கொண்டார். 

இதைத்தொடர்ந்து தனுஷ் தன்னுடைய பணத்தை போட்டு தயாரித்த படத்திற்கு உரிமை கூறுகிறார் அந்த உரிமையை கொடுப்பதற்கு அவர் வைப்பது தான் விலை அதை கொடுக்க முடிந்தால் கொடுங்கள் இல்லை என்றால் விட்டுவிடுங்கள். அதை விட்டுவிட்டு ஏன் வீண் விவாதம் செய்கிறீர்கள் என்ற கேள்விகள் இருந்தது. 

மேலும் வம்படியாக தனுஷை பற்றி பேசுவது நெப்போல்டிசம் போல இருந்ததாகவும் சொல்லியிருந்தார்கள் இதைத் தொடர்ந்து கடுமையான விமர்சனங்கள் நயன்தாராவின் மீது எழுந்தது. 

வச்சு செய்யும் நெட்டிசன்கள்..

சென்னையில் தற்போது அந்த ஆவணப்படத்தில் சந்திரமுகி படத்தின் சில காட்சிகள் இடம் பிடித்திருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அதையும் அனுமதி பெறாமல் தான் போட்டிருக்கிறார்கள்.

 எனவே அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சிவாஜி புரொடக்ஷன் நிறுவனம் நயன்தாராவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதைத்தொடர்ந்து ஏற்கனவே மருமகன் தனுஷ் படத்தில் சிக்கிய நடிகை நயன்தாரா தற்போது மாமனார் ரஜினிகாந்த் படத்திலும் சிக்கி சீக்கி அடிப்பதாக சொல்லி வருகிறார்கள். 

மேலும் தன்னுடைய கல்யாண கேசட்டை ஒரு விற்பனை பொருளாக மாற்ற நினைத்த நயன்தாராவிற்கு இது அவசியம் தேவை என்று பல ரசிகர்கள் பல்வேறு வகையான கருத்துக்களை முன்வைத்து வருவதோடு அவரை விளாசி தள்ளி இருக்கிறார்கள். 

Summary in English: Recently, there’s been quite a buzz surrounding actress Nayanthara and her marriage documentary video. Fans have been eagerly soaking up all the details, but it seems not everyone is thrilled about it. The producers of the Chandramukhi movie have sent her a notice, claiming she didn’t give them proper acknowledgment in her documentary.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.