நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் கல்யாண கேசட் இன்று வெளிவந்துள்ளது. இதை அடுத்து ஒட்டு மொத்த வீடியோவிலும் அவர்களுடைய காதல் புராணம் தான் உள்ளது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் கல்யாண வீடியோ வெளி வந்ததை அடுத்து அவருடைய முன்னாள் காதலர்கள் பற்றிய பேசிய விஷயம் தற்போது பரபரப்பாக இணையம் இயங்கும் பேசப்பட்டு வருகிறது.
இந்த விஷயங்களைப் பற்றி வீடியோவில் நயன்தாரா தவிர்த்து இருக்கலாம் என்று பேசி இருக்கிறார். ஒரு வேளை குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனம் நயன்தாராவை கூட பேச சொல்லி இருக்கலாம்.
சிம்பு மோசம் செய்தவன் பிரபுதேவா அதைவிட.. இத சொல்லத்தான் டாக்குமென்டரி?
இதற்கு காரணம் ஏதாவது ஒன்றை சர்ச்சையாக பேசினால் தான் படம் ஓடும் என்று நிர்பந்திக்கிறார்கள். அதற்கு நடிகை நயன் சம்மதம் தெரிவித்து இதை பேசி இருக்கலாம் என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
இது குறிப்பிடும் படியாக நடிகர் பிரபுதேவா மற்றும் சிம்பு குறித்து அவர் அவருடைய பெயரை நேரடியாக சொல்லாமல் சில விஷயங்களை பதிவு செய்து இருக்கிறார்.
இதில் அவர் கூறிய போது நான் தெலுங்கு படம் ஒன்றில் சீதா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். ராமராக நடிகர் பாலையா நடித்துக் கொண்டிருந்தார். அந்த படம் தான் என்னுடைய கடைசி படமாக இருக்க வேண்டி இருந்தது.
அடுத்து அந்த படத்தின் இறுதி நாள் ஷூட்டிங்கில் என்னுடைய மனம் மிகவும் கஷ்டமாக இருந்தது. இனி மேல் திரைப்படங்களில் நடிக்க முடியாது என்று என் எண்ணம் என்னை செயல் இழக்க வைத்தது.
இதைத்தொடர்ந்து அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு கடைசி படம் என்பதால் படக்குழுவில் இருந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து விட்டு வந்தேன்.
அத்தோடு அன்று நான் எடுத்த முடிவு சரியா என யோசித்தேன். ஏனென்றால் சினிமாவில் நடிப்பதை நிறுத்த வேண்டும் என்பதை என்னுடைய முடிவல்ல என்னுடைய காதலரது விருப்பமாக்கும்.
இதெல்லாம் ஒரு சாதனையா நயன்..
அடுத்து இவருடைய முடிவுக்காக நான் ஏன் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்த வேண்டும் என்று இது குறித்து அவரிடம் பலமுறை விவாதித்தேன். இதை தொடர்ந்து தான் அவர் எனக்கு சரியான நபர் அல்ல என்பதை உணர்ந்தேன்.
அப்போதுதான் அவரது மோசமான விஷயங்கள் பலவற்றை தெரிந்து கொண்டு அவருடன் இருந்த காதலை முறித்துக் கொண்டேன் என்று கூறி இருக்கிறார் நடிகை நயன்தாரா.
மேலும் தான் மிகவும் ஆழமாக நம்பிய ஒருவர் ஒரு காலகட்டத்தில் அவருடைய உண்மையான முகத்தை காட்டியதை அடுத்து அவரைப் பிரிந்து விட்டதாகவும் நான் பிரிந்த போது என்னை இடம் எல்லோரும் கேள்வி எழுப்பினார்களே தவிர அவரிடம் அதைப் பற்றி யாரும் கேட்கவில்லை .
நான் ஒரு பெண் என்பதால் என்னிடம் துருவி துருவி கேட்டவர்கள் தற்போது வரை அந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் கேட்டு வருகிறார்கள். இதுவும் எனக்கு வேதனையாக தான் இன்று வரை இருந்துள்ளது.
தற்போது என்னுடைய திருமண வைபவம் ஒரு ஆல்பம் படமாக உருவாகி இருக்கிறது. இதில் என் முன்னாள் காதலர்கள் பற்றி எல்லாம் நயன்தாரா பேச வேண்டுமா? என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் கிளம்பி இருக்கிறது.
மேலும் ஒரு படத்தை ஓட வைப்பதற்காக இந்த புராணங்களை பாடலாமா? என்ற கேள்வியை கேட்டிருக்கக் கூடிய ரசிகர்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். உங்களுடைய பார்வையில் இது எப்படி இருக்கும் என்பதை கூட நீங்கள் பதிவு செய்யலாம்.
Summary in English: In “Nayanthara Beyond the Fairy Tale,” our favorite actress is ready to spill some serious tea about her love life that fans are totally not prepared for! This isn’t just your run-of-the-mill rom-com; it’s a heartfelt exploration of the rollercoaster that relationships can be.