லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான் ஏன் பிரபுதேவாவை காதலித்து விலகினார் என்பதை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
தமிழ் திரை உலகில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இவர் கடைசியாக அன்னபூரணி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.
தென்னிந்திய மொழி படங்கள் மட்டுமல்லாமல் ஹிந்தியில் ஷாருக்கான் உடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்ததை அடுத்து இவருக்கு அதிகளவு ரசிகர் வட்டாரம் உருவானது.
ஓகேன்னு நெனச்சு தான் பிரபுதேவாவை காதலிச்சேன்..
இதற்கு காரணம் அட்லி கூட்டணியில் உருவாகியிருந்த ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலில் சாதனை புரிந்து அனைவரையும் கவரக்கூடிய வகையில் அமைந்து விட்டது.
தற்போது நயன்தாரா ராக்காயி, மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் பிரபல ஆங்கில youtube சேனலுக்கு பேட்டி ஒன்றினை அளித்திருக்கிறார்.
அதில் நயன் பேசியிருக்கும் விஷயம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த பேட்டியில் அவருக்கு சில முக்கியமான விஷயங்கள் என சொன்னது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த விஷயம் என்னவென்றால் சினிமா துறையில் இரண்டு திருமணங்களை நிறைய பார்த்திருப்பதாக சொல்லி இருக்கிறார்.
மேலும் அது குறித்து தான் தவறு என்று சொல்லவில்லை என்றும் சினிமாத்துறை என்று என்றாலே அது அப்படித்தான் உள்ளது. ஆனால் அப்படிப்பட்ட உறவுகள் எல்லாம் சரியானவையாக இருக்குமா? என்று நான் அப்போது நினைத்திருக்கிறேன்.
ஓபனாக பேசிய நயன்தாரா..
அதுமட்டுமல்லாமல் என்னுடைய நிலைப்பாடு ஆகவும் அது இருந்தது. ஆனால் தற்போது என் பார்வை சற்று மாறி உள்ளது என்று நயன்தாரா பேசியிருக்கிறார். தொடர்ந்து அவர் பேசிய போது திருமணத்திற்கு பிறகு எந்த பிரச்சனையிலும் சிக்காமல் இருந்தேன்.
ஆனால் என்னுடைய ஆவணப்படம் எனக்கும் தனுஷுக்கும் ஏற்பட்ட சிக்கலால் மீண்டும் என்னை சுற்றி பல பிரச்சனைகளும் சர்ச்சைகளும் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை தற்போது நீதிமன்றத்தில் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் தான் காதலித்து கைவிட்ட பிரபுதேவாவை மறைமுகமாக தாக்கி பேசிய நயன்தாரா ஒரு கட்டத்தில் நான் சினிமாவில் இருந்து ஒதுங்க வேண்டும் என்று ஒருவரால் நிர்ப்பந்திக்கப்பட்ட சமயத்தில் எனக்கு அது சரி என்று பட்டதால் சினிமாவில் இருந்து விலக ஒப்புக்கொண்டேன்.
ஆனால் அடுத்தடுத்து வந்த நாட்களில் எனக்கு உண்மை என்னவென்று தெரிய வந்தது மற்றொருவரின் வற்புறுத்தலின் பேரில் நமக்கு பிடித்த விஷயத்தை ஏன் நாம் செய்யத் தவற வேண்டும் என்று யோசித்ததால் தான் பிரேக் கப்பில் முடிந்தது எனக் கூறியிருக்கிறார்.
Summary in English: Recently, Nayanthara opened up about her decision to part ways with Prabhu Deva, and let me tell you, it’s been quite the talk of the town! In a candid interview, she shared her thoughts and feelings surrounding the split, giving fans an inside look at what led to this big change in her life.