நடிகை நயன்தாரா தன்னுடைய ஃபெமி 9 நைன் நிறுவனத்தின் விழாக்களை ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறார். அப்போது அவர் பேசிய பேசிய தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தென்னிந்திய திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் நடிகை நயன்தாரா பல்வேறு தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதோடு ஃபெமி 9 என்ற நிறுவனத்தை நடத்தி வருவது பலருக்கும் தெரிந்திருக்கும்.
அந்த வகையில் எந்த நிறுவனத்தின் விழாக்களை ஆண்டுதோறும் கொண்டாடி வரும் இவர் அது போன்று நடைபெற்ற விழாவில் அண்மையில் பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த பேச்சில் அவர் பெண்களுக்கு சில அறிவுரைகளை கூறி இருந்தது தான் ஹைலைட்டான விஷயம்.
அப்படி அவர் பேசும்போது ஒரு பெண்ணாக நம்மை எந்த அளவுக்கு அடக்கினாலும், அந்த அளவுக்கு கீழே இறங்கினாலும் நாம் ஒரு விஷயத்தை மட்டும் விட்டுக் கொடுக்கவே கூடாது என்று கூறி இருக்கிறார்.
அது நம் மீது நாம் வைத்திருக்கக் கூடிய நம்பிக்கை இன்னொன்று நமக்கு நம் மீது இருக்கக்கூடிய மரியாதை இதை இரண்டையும் யார் மத்தியிலும் விட்டு விடக்கூடாது.
மேலும் இந்த இரண்டையும் எந்த ஒரு சூழ்நிலையிலும் நாம் விட்டுவிடக் கூடாது அதற்காக எப்போதும் சில விஷயங்களை செய்ய வேண்டும் என்று அறிவுரை சொல்லி இருக்கிறார்.
மேலும் நம் மீது எந்த அளவு விமர்சனங்கள் வந்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் இருக்கலாம் நம்மை குறை சொல்பவர்கள் கிண்டல் செய்பவர்கள்.எப்போதும் அவை செய்வதை குறிக்கோளாக கொண்டவர்கள்.
எனவே அதை காதில் போட்டுக் கொள்ளாமல் நம்முடைய வேலையை மட்டும் கவனத்தோடு செய்ய வேண்டும்.
நீங்கள் வேறு யாருடைய பேச்சுக்கும் காது கொடுக்காமல் நம்முடைய வேலை என்னவோ அதில் மட்டும் கவனத்தை செலுத்தினால் போதும்.
நம்மீது நமக்கு இருக்கும் நம்பிக்கை அது அதிகரிக்கும், மரியாதை கூடும் என பேசிய பேச்சு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் நயன்தாரா பேசிய பேச்சு பற்றி தற்போது ரசிகர்கள் பலரும் பட்டிமன்றம் போட்டு பேசி வருவதோடு பெண்களுக்கு உத்வேகம் அளிக்க கூடிய வகையில் இவரது பேச்சை இருந்ததாக சொல்லி இருக்கிறார்கள்.
Summary in English: Nayanthara, the queen of Indian cinema, recently opened up about something that really resonates with a lot of us. She shared her thoughts on what she thinks truly drives women’s success, and let me tell you, it’s not just about talent or hard work. According to her, the real game-changers are self-confidence and self-respect.