நயன்தாரா மதுரையில் சானிட்டரி நாப்கின் நிறுவனத்தின் விளம்பர நிகழ்ச்சியை நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது அது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
இந்த நிகழ்ச்சியை திட்டமிட்ட நேரத்தில் துவங்காமல் தாமதமாக தொடங்கியதை அடுத்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சரியாக செய்யப்படவில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது.
மேலும் இந்த நிகழ்ச்சியை விமர்சித்து instagram பிரபலம் வெளியிட்ட வீடியோ நீக்கப்பட்டதற்கு காரணமே பணம் தருவதாக நயன்தாரா கூறியதால் தான் அந்த வீடியோ நீக்கப்பட்டதாக பேச்சுக்கள் வெகுவளவு பரவியது.
நயன்தாராவின் சானிட்டரி நாப்கின் விளம்பர நிகழ்ச்சி மதுரையில் காலை 9.00 மணிக்கு துவங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மதியம் 3.00 மணி அளவில் தான் இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.
இதனால் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் instagram பிரபலங்கள் கடும் அவதிக்கு உள்ளானதோடு உணவு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் திணறினார்கள்.
மேலும் நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளை வெட்ட வெளிச்சமாக கூறிய வகையில் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவில் நிகழ்ச்சியில் நடந்த அத்தனை விஷயங்களும் தெளிவாக வெளிவந்தது.
இதனை அடுத்து அந்த வீடியோவானது நயன்தாரா தரப்பால் ரிப்போர்ட் செய்யப்பட்டது. இதனால் அந்த வீடியோ நீக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் வீடியோ நீக்கப்பட்டதற்கு அந்த பிரபலத்தோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேரம் பேசி இருக்கிறார்கள்.
அந்த வேகத்தில் இரண்டு வாரங்களில் அவர் எவ்வளவு சம்பாதிப்பாரோ அந்த பணத்தை தருவதாக கூறியுள்ளனர். இந்த தகவலை இன்ஸ்டாகிராம் பதிவை அந்த பிரபலம் புதிய வீடியோவில் பதிவிட்டு இருக்கிறார்.
இந்த சம்பவங்கள் அனைத்தும் விரைவில் நயன்தாரா அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னோட்டமாக கருதப்படுவதோடு குறிப்பாக பணம் கொடுத்து விமர்சனங்களை அடக்க முயற்சி இருப்பது அரசியல் அணுகுமுறையை காட்டுவதாக சொல்லப்படுகிறது.
இதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அரசியல் பண்ணுவதில் விஜயை ஓவர் டேக் பண்ணியிருக்கிறார் நயன்தாரா என்ற கருத்துக்களை தெரிவித்து வருவதோடு விஜய் தனது அரசியல் நடவடிக்கைகளில் இது போன்ற அணுகு முறையை கையாளுவதில்லை என்றும் இந்த செயலானது நயன்தாராவின் அரசியல் தந்திரத்தை காட்டுவதாக உள்ளதாக விமர்சனங்கள் செய்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து இவரது அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி இருக்கக்கூடிய இந்த விஷயம் இணையத்தில் தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது.
Summary in English:The Nayanthara sanitary napkin advertisement has stirred quite the conversation lately! If you haven’t heard, the ad featuring the beloved actress sparked controversy for its bold approach to a topic that’s often shrouded in stigma. Many fans were excited to see someone as influential as Nayanthara tackling menstrual health openly, while others raised eyebrows at how it was presented.