இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது நடிகை நஸ்ரியா (Nazriya Nazim) வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி உள்ளது.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை நஸ்ரியா 1994 ஆம் ஆண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்தவர். இவருடைய வயது தற்போது 29 தான் தொட்டுள்ளது.
பொதுவாகவே தமிழ் திரையுலகில் அதிகளவு மலையாள நடிகைகளின் ஆதிக்கம் இருக்கும். குறிப்பாக கேரளாவை சேர்ந்த நடிகைகள் பலரும் தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்திருக்கிறார்கள்.
தமிழ் படத்துல தொப்புள காட்டிட்டாங்கன்னு பேசிய நஸ்ரியாவா..?
இவர் தன்னுடைய 19 ஆம் வயதிலேயே கேரளாவின் புகழ் வாய்ந்த இயக்குனர் மகனை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார்.
திருமணத்திற்குப் பிறகு அதிக அளவு திரைப்படங்களில் தலைகாட்டாத இவர் திருமணத்திற்கு முன்பாக திரைப்படங்களில் நடிக்க கூடிய சூழ்நிலையில் முன்னணி நடிகையாக வர வாய்ப்பு நிறைய இருந்தது.
குறிப்பாக தமிழில் இவர் நடித்து வெளி வந்த ராஜா ராணி திரைப்படத்திற்கு பிறகு ரசிகர்களின் மனதில் நல்ல ரீச் ஆன இவருக்கு நல்ல பிரபலமும் கிடைத்தது.
இதை அடுத்து இவர் யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் மலையாள நடிகரும் தயாரிப்பாளருமான பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு அனைவருக்கும் அதிர்ச்சி தந்தார்.
மேலும் ஒரு சில பிரச்சனையின் காரணமாக தமிழ் படங்களில் நடிக்கவே மாட்டேன் என்ற முடிவில் இருந்த நடிகை நஸ்ரியாவா இது? என்று கேட்கக் கூடிய வகையில் இவரது புகைப்பட சூட் அமைந்துள்ளது.
உறைந்து போன ரசிகர்கள்..
அட அப்படி என்ன பிரச்சனை என்று நீங்கள் நினைக்கலாம். இவர் நடிகர் தனுஷ் உடன் நையாண்டி திரைப்படத்தில் நடித்திருந்த போது கவர்ச்சியாக நடிக்க மறுத்துவிட்டார்.
எனினும் இவரை இனிக்க இனிக்க பார்ப்பதென்ன என்ற பாடலில் கிளாமராக நடிக்க வைத்திருந்தார்கள். அதிலும் இந்த பாடலில் வேறு ஒரு நடிகையின் அங்கங்களை குளோசப்பில் படம் பிடித்து அதனை நஸ்ரியாவின் அங்கங்களாக காட்டிவிட்டார் இயக்குனர்.
இதைத் தொடர்ந்து கொதித்து எழுந்த நடிகை நஸ்ரியா இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்ததோடு இந்த பிரச்சனை அப்போது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக பேசப்பட்டது. இதை தொடர்ந்து தான் தமிழ் படங்களில் நடிக்க மாட்டேன் என்ற முடிவை செய்தார்.
மேலும் இவர் வாய்மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா என்ற இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டு பிறகு தமிழ் படங்களில் நடிக்காமல் சற்று விலகியே இருந்தார்.
அத்தோடு திருமணத்திற்குப் பிறகு தன் கணவர் நடிக்கும் அல்லது தயாரிக்கும் படங்களில் மட்டும் தலை காட்டி வந்த இவர் மலையாள படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் விரைவில் துறைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய போட்டோக்கள் சிலவற்றை பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துக் கொள்ளதோடு மட்டுமல்லாமல் அதிகளவு லைக்குகளையும் பெற்றுள்ளது.
Summary in English : Nazriya Nazim has been turning heads and capturing hearts lately, and it’s no surprise why! The talented actress, known for her roles in both Malayalam and Tamil films, has been sharing some stunning photos that showcase her vibrant personality and undeniable charm.