நேற்று நடிகர் மற்றும் இயக்குனரான பார்த்திபன் அலுவலகத்தில் 12 சவரன் தங்க நகை காணாமல் போனதை அடுத்து அவரது உதவியாளர் மீது சந்தேகம் இருப்பதாக புகார் கொடுத்த விவகாரம்.
குண்டக்க மண்டக்க காமெடியின் மூலம் இன்றைய தலைமுறையையும் தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கும் இயக்குனர் மற்றும் நடிகரான பார்த்திபன் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியமே இல்லை.
இவர் தமிழ் திரை உலகில் புதிய பாதை என்ற திரைப்படத்தில் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானதை அடுத்து இந்த படம் மாபெரும் வசூலை கொடுத்து இவரை திரை உலகில் பிரபலம் ஆக்கியது.
நகை திருட்டு புகார்.. அடுத்த நாளில் பார்த்திபன் செய்த சம்பவம்..
இவர் திரைப்படங்களை இயக்குவது நடிப்பதோடு நின்று விடாமல் சில படங்களை தயாரித்து தன்னை அடுத்தடுத்த பரிணாமங்களில் ரசிகர்களின் மத்தியில் வெளிப்படுத்தி தனக்கு என்று ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டவர்.
நடிகர் பார்த்திபன் பன்முகத் திறமையை கொண்டிருப்பதால் இவருக்கு என்று ரசிகர் பட்டாளம் உள்ளதோடு அவர் பேசுகின்ற பேச்சைக் கேட்பதற்கே பலர் காத்திருப்பார்கள் என்று சொல்லலாம்.
இவர் அடுத்தடுத்து வித்தியாசமான படங்களை கொடுத்து வருவதோடு இவர் படங்கள் வெற்றி பெற்றதா? தோல்வியை சந்திக்கிறதா? என்றெல்லாம் கவலைப்படாமல் அவருடைய முயற்சியை எப்போதும் கைவிட மாட்டார்.
ஏதாவது ஒரு வித்தியாசத்தை காட்டிக்கொண்டு இருக்க வேண்டும் என்று விரும்பக்கூடிய இவர் இவர் படங்கள் தோல்வியை சந்தித்தாலும் துவளாமல் அடுத்தடுத்து முயற்சிகளில் இறங்கி விடுவார்.
அப்படி என்னதான் நடக்குது?
அந்த வகையில் அண்மையில் இவர் இயக்கத்தில் வெளியான டீன்ஸ் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்றதை அடுத்து வித்தியாசமான அடுத்த கதைகளை தேடி அந்த படத்தை இயக்குகின்ற மும்முரமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
சென்னை நந்தனத்தில் வசித்து வரக்கூடிய இவருடைய அலுவலகம் அந்த வீட்டிலேயே செயல்படுகிறது. மேலும் அலுவலகம் கீழ் தளத்திலும், வீடு மேல் தளத்திலும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
நேற்று இவருடைய அளவுகளாகத்தில் இருந்து 12 சவரன் தங்க நகை காணாமல் போனதை அடுத்து தனது உதவியாளர் கிருஷ்ணா காந்தி என்பவரின் மீது சந்தேகம் இருப்பதாக சென்னை நந்தனம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறார்.
இதைத்தொடர்ந்து இன்றைய தினம் அந்த நகைகளை தனது உதவியாளர் திருப்பி கொடுத்து விட்டதார் புகாரை வாபஸ் வாங்கிக் கொள்வதாக காவல் நிலையத்தில் தெரிவித்திருக்கிறார்.
இதைத்தொடர்ந்து இந்த திடீர் டிவிஸ்ட்டை கேள்விப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் தற்போது குழப்பத்தில் இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் முதல் நாள் புகார் கொடுத்து அடுத்த நாள் அதை வாபஸ் வாங்கி இருப்பதை அடுத்து பல்வேறு கேள்கள் எழும்பி வருகிறது.
இது சில ஆண்டுகளுக்கு முன்பு இது போலவே பார்த்திபன் தன்னுடைய வீட்டில் இருந்த நகைகள் திருட்டுப் போனதாக புகார் கொடுத்திருப்பது பற்றி ஞாபகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Summary in English : In a surprising turn of events, actor Parthiban recently found himself in a bit of a jewelry drama. Initially, he lodged a complaint with the police after some of his precious jewelry went missing. It’s never fun to deal with theft, especially when it involves items that hold sentimental value.