தல அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி ட்ரெய்லர் வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
16ஆம் தேதியன்று வெளிவந்த அஜித்குமாரின் விடாமுயற்சி ட்ரெய்லர் வெளி வந்து சில நிமிடங்களிலேயே சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்தது.
மேலும் இது அஜித் குமாரின் ஸ்டைலான தோற்றம், அதிரடி சண்டை காட்சிகள் மற்றும் பரபரப்பான திரைக்கதை ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததை அடுத்து படத்தை காணும் ஆவலில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
குறிப்பாக அனிருத் இசையமைத்துள்ள பின்னணி இசை ட்ரெய்லருக்கு மேலும் பக்க பலமாக இருப்பதோடு ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள்.
இதில் நடிகர் அஜித்தின் நடிப்பு மற்றும் மகிழ்திருமேனியின் இயக்கத்தை பலரும் பாராட்டி இருப்பதோடு விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்ற அறிவிப்பு வெளிவந்து மகிழ்ச்சியில் இருந்த ரசிகர்கள் படம் தள்ளி போனதை நினைத்து ஏமாற்றம் அடைந்தார்கள்.
எனினும் படம் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகும் என்று வெளிவந்திருக்கும் அறிவிப்பால் மகிழ்ச்சியோடு இருக்கும் இவர்கள் இந்த ட்ரெய்லர் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து உள்ளதாக சொல்லி விட்டார்கள்.
எனவே அஜித்தின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் மற்ற தரப்பினரும் இந்த விடாமுயற்சி திரைப்படத்தை காண ஆவலோடு இருக்கிறார்கள் என்று சொன்னால் மிகை ஆகாது.
Summary in English: Hey there, movie buffs! If you’re a fan of Ajith Kumar, you’ll want to mark your calendars because the trailer for “Vida Muyarchi” dropped on January 16th, and it’s creating quite the buzz! This much-anticipated film is already making waves with its intense storyline and stunning visuals.