தற்போது 50 வயதை கடந்திருக்கும் நடிகை பிரகதி மகாவடி தனக்கு நடந்த சில மோசமான சம்பவங்கள் குறித்து பகிர்ந்து இருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.
நடிகை பிரகதி மகாவடி தமிழைப் பொறுத்தவரை அரண்மனைக்கிளி என்ற சீரியல் நடித்த பிறகு ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீச் கிடைத்தது. இதற்கு முன் இவர் சில சினிமா திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்திருக்க கூடிய இந்த நடிகை 50 வயதை கடந்து விட்டாலும் தற்போது கடுமையாக உடற்பயிற்சியை செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க கூடியவர்.
அதுமட்டுமல்லாமல் இணையதள பக்கங்களில் தன்னை தொடர்ந்து ஃபாலோ செய்து வரும் ரசிகர்களுக்கும் உடற்பயிற்சியின் மீதான ஆர்வத்தை தூண்டக்கூடிய வகையில் செயல்பட்டு வருகிறார் என்று சொன்னால் மிகையாகாது.
இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் படப்பிடிப்பு தளத்தில் நடித்துக் கொண்டிருந்த போது ஒரு காமெடி நடிகர் தன்னை ஜாடை காட்டி படுக்கைக்கு அழைத்த விஷயத்தை பேசி இருப்பதோடு அந்த நடிகரின் பெயரை சொல்ல விரும்பவில்லை என்பதையும் தெரிவித்திருக்கிறார்.
இவர் முன்னணி காமெடி நடிகர் அவருடைய உழைப்பை திரைப்படங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். மிகச்சிறந்த கடின உழைப்புக்கு உதாரணமாக கூட சொல்லலாம். ஆனால் அவர் என்னை படுக்கைக்கு அழைத்ததும் அவர் மீது இருந்த மரியாதை எனக்கு முற்றிலும் போய்விட்டது.
மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்து இருக்கும் அந்த நடிகரின் பெயரை சொல்லி நான் வீணாக விவாதத்தை ஏற்படுத்த விரும்பவில்லை.
இவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததும் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. எனினும் படப்பிடிப்பு முடியும் வரை காத்திருந்தேன்.
இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு முடிந்த பிறகு என்னுடைய கேரவனுக்குள் அவரை அழைத்துச் சென்று உள்ளே போனதும் நீங்கள் படுக்கைக்கு அழைத்தீர்களே.
நான் உங்களிடம் அப்படி நடந்து கொள்ள ஏதாவது தவறான சிக்னல் கொடுத்தேனா? அல்லது என்னுடைய உடல் மொழி அப்படி உங்களுக்கு தோன்றியதா? என்று கேட்டு விட்டேன்.
அதற்கு அவர் அப்படி இல்லை என்று கூறியதும் நீங்கள் செய்தது மிகப்பெரிய தவறு அருவருப்பான விஷயம். இந்த மாதிரி சீப்பான விஷயத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஓப்பனாக பேசி விட்டேன்.
அதுமட்டுமல்லாமல் உங்களைப் படப்பிடிப்பு தளத்திலேயே என்னால் அசிங்கப்படுத்தி இருக்க முடியும். ஆனால் உங்களுடைய இமேஜ், உழைப்பு எதுவும் டேமேஜ் ஆக கூடாது என்பதால் தான் இப்படி இங்கு அழைத்து வந்து பேசுகிறேன்.
மேலும் உங்கள் குடும்பம் உங்களை நம்பி இருக்கிறது. உங்களுடைய உழைப்புக்காகவும் குடும்பம் அதற்காக காத்திருக்கிறது.
இனி மேல் என்னிடம் இது போன்ற வேலையை வைத்துக் கொள்ள வேண்டாம் என்று எச்சரித்து அனுப்பியதாக பேட்டி ஒன்றில் கூறிவிட்டார்.
இதை அடுத்து இந்த காமெடி நடிகர் யாராக இருக்கும் என்ற கேள்வி தற்போது ரசிகர்களின் மத்தியில் பற்றி கொண்டதோடு இணையத்தில் இது விவாத பொருளாக மாறி பட்டிமன்றம் போட்டு அந்த நடிகர் யார் என்பது குறித்து குறித்து தேடி வருகிறார்கள்.
Summary in English: In a recent turn of events, actress Pragathi Mahavadi has made quite the splash in the media after fearlessly tackling an awkward situation involving a popular comedy actor. The whole thing unfolded during a live event where she didn’t shy away from calling out some inappropriate comments that had everyone raising their eyebrows.