நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும் போது தான் தவறவிட்ட மூன்று படங்களை குறித்து அவருடைய வேதனையை பக்குவமாக பதிவு செய்த விஷயம்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்ற நடிகைகள் பலரை கேள்விப்பட்டிருப்பீர்கள் அந்த வரிசையில் நடிகை பிரியா பவானி சங்கர் ஆரம்ப காலத்தில் சின்ன திரையில் கலை கட்டியவர்.
இதை அடுத்து பெரிய திரையில் நடிக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்க அவர் பெரிய திரையில் தற்போது நடித்து வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக மாறி இருக்கிறார்.
“திரைபடம் ரிலீஸ் ஆகுற வரைக்கும் அது நடக்கும்”..
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி பேட்டிகளை அளித்து அனைவரையும் தன் பக்கம் இழுத்துக் கொள்ளக்கூடிய தன்மை கொண்டவர்.
அந்த வகையில் தற்போது அண்மை பேட்டி ஒன்றில் அவர் பேசும்போது ஒரு பிரபல இயக்குனரிடம் மூன்று பட வாய்ப்புகள் கிடைத்ததாக கூறியதை அடுத்து அவர் என்ன கூறினார் என்றால் மூன்று படங்களையும் உங்களை ஹீரோயினியாக ஒப்பந்தம் செய்கிறேன் என்று கூறினார்.
அத்தோடு அவர் சொன்ன மூன்றாவது கதையில் தான் ஹீரோயினிக்கு ஸ்கோப் அதிகமாக இருந்தது மற்ற இரண்டு பெரிய படங்கள் என்றாலும் அதில் ஹீரோயினிக்கு அவ்வளவாக நடிக்க கூடிய பகுதி இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இதனை அடுத்து அந்த இரண்டு படங்களும் வேண்டாம் நான் மூன்றாவது படத்தில் மட்டுமே நடிக்கிறேன் என்று சொன்னேன். ஆனால் அதற்கு அந்த இயக்குனர் இல்லை இல்லை இது வந்து ஒரு காம்போ ஆபர் என்று அதிர்ச்சியை தந்தார்.
அது மட்டுமல்லாமல் நீங்கள் ஹீரோயினியாக நடிப்பதாக இருந்தால் இந்த மூன்று படத்திற்குமே சரி என்று சொல்ல வேண்டும் இல்லையென்றால் ஒரே படத்தில் நடிப்பேன் என்று நீங்கள் சொன்னால் எந்த படத்தின் வாய்ப்பும் உங்களுக்கு கிடையாது என்று கராராக சொல்லி இருக்கிறார்.
இதை அடுத்து அந்த இரண்டு படங்களிலும் ஹீரோயினிக்கு வேலையே இல்லை என்றாலும் படம் வெளியான பிறகு இரண்டு நாட்கள் அது பற்றி பேசுவார்கள்.
பிரபல இயக்குனர் குறித்து பிரியா பவானி சங்கர்..
ஆனால் படம் வெளியாகும் வரை இந்த படத்தின் ஹீரோயினியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார் என்ற செய்தி உங்கள் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஆசை வார்த்தை காட்டினார்.
அது மட்டுமல்லாமல் இது என் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக இருக்கும் என்று சொன்னபோது எனக்கு அது புரியவில்லை. ஆனாலும் அவர் கொடுத்த அந்த மூன்று பட வாய்ப்புகளையும் நான் தவற விட்டேன்.
ஆனால் இப்போது தான் எனக்குப் புரிந்தது அவர் அப்போது சொன்ன விஷயம் எனினும் நான் அதை தவற விட்டு இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன்.
இதற்கு காரணம் என்னவென்றால் அந்த இரண்டு படங்களும் பெரிய படங்கள் என்றாலும் ஹீரோயினிக்கு படத்தில் வேலை இல்லை என்றால் கூட அந்த படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்ற ஓர் அறிமுகம் எனக்கு திருப்புமுனையாக இருந்திருக்கும்.
அதை தற்போது தவற விட்டு வருத்தத்தில் இருக்கிறேன் என்று பிரியா பவானி சங்கர் பேசி இருப்பது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
Summary in English: In a recent chat, actress Priya Bhavani Shankar got real about a decision she wishes she could rewind. Can you believe it? She revealed that she turned down not one, not two, but three movie offers from a big-name director! Talk about a bold move!