நடிகை ராதிகா ஆப்தே திரைப்படங்கள் ஆடை அணியாமல் நடிப்பதற்காக பல்வேறு வகையான விமர்சனங்களை எதிர்கொண்டார். அது குறித்து அவரது கருத்துக்களை அண்மையில் பேசி இருக்கிறார் அது பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
நடிகை ராதிகா ஆப்தே சினிமா வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் வறுமையின் கொடுமையை அனுபவித்ததாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஒரு காலத்தில் அவர் வீட்டில் சமைப்பதற்கு கூட விறகு வாங்க பணம் இல்லை என்ற கருத்தை ஓபன் ஆக சொல்லி இருக்கிறார்.
வீட்டில் வெறும் ரவையை சமைக்க காடுகளில் இருக்கும் சுள்ளிகளை பொறுக்கி வந்து எறித்து உப்பை போட்டு சமைத்து சாப்பிட்ட நாட்களை நினைவு கூர்ந்து அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளினார்.
இது மாதிரியான கஷ்டமான சூழ்நிலையில் இன்று விமர்சிப்பவர்கள் யாரும் எனது குடும்பத்திற்கு ஒரு வேலை உணவு கூட தர முன்வரவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியவர். வாழ்க்கையை மாற்றிய சினிமாவிற்கு நன்றி கடன் பட்டு இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.
எனவேதான் சினிமாவிற்காக எதையும் செய்ய தயாராக இருப்பதாக ராதிகா ஆப்தே கூறியதோடு ஒரு குடும்பத்திற்கு தேவையான நல்ல உணவு, நல்ல வீடு, நிம்மதியை சினிமா தான் தனக்கு கொடுத்தது என்று கூறி இருக்கிறார்.
தனக்கு இருந்த கடன்களை அடைத்து குடும்பத்தில் நல்ல நிலைக்கு கொண்டு வர சினிமா தனக்கு பேர் உதவியாக இருந்ததாக சொன்னதோடு சினிமா என்ன கேட்டாலும் அதை கொடுத்து என் நன்றி உணர்வை வெளிப்படுத்துவேன் என்பதை ஆணித்தரமாக சொல்லி இருக்கிறார்.
இதை அடுத்து படப்பிடிப்பு தளத்தில் 50 பேர் முன்பு ஆடை இல்லாமல் நிற்கும் போது விமர்சனங்களை பற்றியோ மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ? என்ற கவலை தனக்கு இல்லை என்று ராதிகா ஆப்தே கூறிய விஷயம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
வறுமையின் பிடியில் சிக்கி இருந்த இவரை சினிமா தான் மீட்டு வந்துள்ளது. எனவே சினிமா தனக்கு கொடுத்திருக்கும் வாழ்க்கையை என்றும் மறக்க முடியாது என்ற ரீதியில் அவர் தெள்ளத் தெளிவாக பேசி இருப்பது பலர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி உணர்வோடு சினிமா மீது கொண்டிருக்கும் அர்ப்பணிப்பு தன்மையை இது வெளிப்படுத்தக் கூடிய வகையில் இருப்பதாக ரசிகர்கள் பலரும் தொடர்ந்து கருத்துக்களை சொல்லி வருவதால் இணையத்தில் பேசும் பொருளாக மாறிவிட்டது.
Summary in English: Radhika Apte has always been known for her fearless approach to acting, and her bold scenes in films are a testament to that. When it comes to portraying complex characters, she doesn’t hold back. In interviews, Radhika has shared how she believes in pushing boundaries and exploring the depths of human emotions, even if it means stepping outside her comfort zone.