சீரியல் நடிகையான நடிகை ராதிகா பிரீத்தி அண்மை பேட்டி ஒன்றில் சீரியல் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கக்கூடிய பழக்கம் உள்ளதா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த பதில் குறித்து இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவங்கள் குறித்து அவர் பல விஷயங்களை பக்குவமாக பகிர்ந்து அனைவருக்கும் ஷாக் அளித்தார்.
அந்த வகையில் பூவே உனக்காக சீரியலில் ஒப்பந்தமான போது ஹீரோயின் என்று சொல்லித்தான் ஒப்பந்தம் செய்தார்கள். கிட்டத்தட்ட பாதி சீரியலில் நான் ஹீரோயினி போல தான் தொடர்ந்து நடித்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் எனக்கு பல்வேறு அசைவுரியங்கள் நடந்தது.
இதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சீரியலில் ஒப்பந்தமான பிறகு படப்பிடிப்பு தளத்தில் தனியாக வாடகை வீடு எடுத்து அதில் என்னை தங்க வைப்பதாக கூறினார்கள்.
ஆனால் அதை செய்யாமல் இரண்டு வருடங்கள் என்னை ஹோட்டலில் தங்க வைத்ததோடு ஹோட்டல் உணவையே தினமும் உண்ணும் போது என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பது உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
இதனால் உடல் நலம் பல்வேறு வகைகளில் பாதிப்படைந்ததை அடுத்து அதை எப்படியும் சமாளித்து விடலாம் என்று நான் நினைத்திருந்த சமயத்தில் படப்பிடிப்புத் தளத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.
அதிலும் ஒரே ஒரு கழிவறை மட்டும் இருந்ததால் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் அதைத்தான் நாங்கள் பயன்படுத்தக்கூடிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம். இதனால் படப்பிடிப்பு தளத்தில் பலரும் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டு அவதிப்பட்டார்கள்.
மேலும் ஹீரோயினியாக நடித்து வந்த நான் ஒரு கட்டத்தில் வில்லி போல சித்தரித்து காட்ட ஆரம்பித்து விட்டார்கள். ஹீரோயினியாக இருந்த நடிகையை வில்லியாக ஏன் காட்டுகிறீர்கள் என்று நான் கேட்டேன்.
இதற்கு அவர்கள் ரசிகர்களின் மத்தியில் எதிர்மறை கருத்துக்கள் வர ஆரம்பித்ததை அடுத்து இது போல செய்கிறார்கள் என்பது அப்போது தான் எனக்கு புரிந்தது.
இதை தொடர்ந்து ஹீரோயினியாக புக் செய்த என்னிடம் அது பற்றி ஏதும் கூறாமல் வில்லியாக நடிக்க வைத்து விட்டார்களே என்று நான் நொறுங்கிப் போனேன் இதனால் தான் பூவே உனக்காக சீரியல் இருந்து நான் விலகினேன்.
மேலும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பது போல சின்னத்திரை வாய்ப்புகளுக்கும் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடிய பழக்கம் இருப்பது உண்மை தான் என்று உடைத்தார்.
எனினும் இந்த விஷயம் குறித்து சுற்றி வளைத்தெல்லாம் கேட்க மாட்டார்கள். நம்முடைய மேனேஜர்களின் உங்களுக்கு கமிட்மெண்ட் ஓகேவா? என்று உறுதி செய்து விடுவார்கள்.
அந்த வகையில் நடிகைகள் கொடுக்கும் பதிலுக்கு ஏற்ப அந்தந்த நடிகைகளுக்கு ஏற்றது போல் அவர்கள் நடந்து கொள்வார்கள் என்று ராதிகா பிரீத்தி சொன்ன விஷயம் காட்டு தீ போல பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருள் ஆகிவிட்டது.
Summary in English: Actress Radhika Preethi recently spilled the beans about her time on the hit serial “Poove Unakkaga,” and wow, what a journey it has been! She shared some behind-the-scenes moments that will definitely make you appreciate the show even more. From the challenges of getting into character to those hilarious bloopers that never made it to air, Radhika’s stories are both relatable and entertaining.