Wednesday , 22 January 2025

என்னையா சொல்றீங்க.. கேம் ரேஞ்சர் பட கதை தளபதி விஜய் பட கதையா?..

2025 ஆம் ஆண்டு பொங்கல் ரிலீஸ் ஆக வெளிவர இருக்கும் கேம் ரேஞ்சர் படமானது விஜயின் மதுர திரைப்படக் கதையை போல இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

இந்தப் பொங்கலுக்கு ரசிகர்களுக்கு விருந்து வைக்கக்கூடிய வகையில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கதையில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கேம் ரேஞ்சர். 

இந்த திரைப்படமானது வருகின்ற ஜனவரி 10 தேதி திரை அரங்குகளுக்கு வெளிவர உள்ள சூழ்நிலையில் மற்ற அனைத்து படங்களையும் முந்திக்கொண்டு இந்த படம் வெளிவர உள்ளது என்ற தகவல் வந்துள்ளது. 

என்னையா சொல்றீங்க.. கேம் ரேஞ்சர்..

இதை அடுத்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் பக்காவாக பிளான் போட்டு இந்த படத்தை களம் இறக்கி இருப்பதால் வசூல் வேட்டையை கட்டாயம் நடத்தும் என்று பலரும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். 

இயக்குனர் ஷங்கரின் திரைப்படங்கள் பல அண்மைக்காலமாக ரசிகர்களின் மத்தியில் மோசமான விமர்சனங்களை பெற்றதோடு வசூலில் அள்ளி தராத நிலையில் இந்தப் படத்தில் மீண்டும் கம்பேக் கொடுப்பாரா? 

இப்படி ஒவ்வொரு ரசிகர்களும் இவருடைய கம் பேக்கை எதிர்பார்த்து காத்திருக்க கூடிய நிலையில் என்ற படம் வெளி வருகிறது.

கேம் ரேஞ்சர் படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்கள் இது விஜய் நடிப்பில் வெளிவந்த மதுர படம் போலவே உள்ளதாக கதைக்க ஆரம்பித்து விட்டார்கள். 

இதைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் தலையில் கார்த்திக் சுப்புராஜ் மிளகாய் அரைத்து விட்டார் என்று கடுமையான விமர்சனங்கள் கிளம்பியுள்ளது.

இந் நிலையில் இயக்குனர் ஆர் மாதேஷ் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த மதுர படத்தின்  கதை தான் கேம் ரேஞ்சர் என்று கலாய்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

பட கதை தளபதி விஜய் பட கதையா?..

அந்த வகையில் 20 வருடத்திற்கு பிறகு பழைய கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதிக் கொடுக்க அதை அப்படியே டிங்கரிங் செய்து விட்டாரா? ஷங்கர் என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. 

அதிலும் ட்ரைலரில் அந்த ரைஸ் மில்லில் அரிசி மூட்டையை சோதனை செய்யும் காட்சிகள் எல்லாமே மதுர படத்தில் இடம் பிடித்திருப்பது போல் உள்ளது என ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகிறார்கள். 

இதைத்தொடர்ந்து படம் வெளிவந்த பிறகு தான் அது  ஒன்லைன் ஸ்டோரியை உருவி திரைக்கதையை மாற்றி இருக்கிறார்களா? என்ற விஷயம் தெரிய வரும் என்று வேடிக்கை பார்க்கும் ரசிகர்கள் சிலரும் இருக்கிறார்கள். 

அதுமட்டுமல்லாமல் கேம் ரேஞ்சர் கதையில் ஆரம்பத்தில் விஜய் நடிக்க இருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். கடைசியாக அதில் நடிக்க முடியாது என்று சொல்லவே ராம் சரணுக்கு இந்த படம் சென்றதாக சில தகவல்களும் கசிந்து உள்ளது. 

இதை அடுத்து கதை மதுர கதையைப் போல ஒத்து இருப்பதால் இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார் என்ற போதும் அந்த படத்தில் நடிக்க நடிகர் விஜய் மறுத்துவிட்டாரோ என்ற ரீதியில் பேச்சு தற்போது எழுந்துள்ளது.

Summary in English: So, there’s been quite a buzz lately about Ram Charan’s upcoming movie, Game Changer. Fans can’t stop chatting about it, and it’s easy to see why! The excitement is palpable, especially with the rumors swirling around that this flick might just be an unofficial remake of Vijay’s blockbuster hit, Madhura.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.