நடிகை ரம்யா பாண்டியன் நீண்ட நாள் காதலர் தவோன் என்பவரை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் ஒரு சில படங்களில் நடித்திருக்கும் நடிகை ரம்யா பாண்டியன் ஆன்மீகம் மற்றும் வாழ்வியல் கலை போன்ற துறையில் இயங்கிக் கொண்டு வரும் தவோன் என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இவரது திருமண புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருவதோடு மட்டுமல்லாமல் கடந்த சில நாட்களாகவே அடுத்தடுத்து பிரபலங்கள் பல தங்களுடைய திருமண அறிவிப்பை வெளியிட்டு வருகிறார்கள்.
அட நம்ம ரம்யா பாண்டியனுக்கு திருமணமா?
அந்த வரிசையில் நேற்றைய தினம் நெப்போலியன் மகன் திருமணம் ஜப்பானில் கோலாகலமாக நடைபெற்றது. அது போல பிக் பாஸ் பிரதீப் தன்னுடைய காதலியை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் தற்போது ரம்யா பாண்டியன் திருமணம் செய்து கொண்டிருக்க கூடிய விபரங்கள் இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ரம்யா பாண்டியன் ஏற்கனவே சில படங்களில் நடித்ததை அடுத்து விஜய் டிவியில் நடைபெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.
எனினும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலம் அடைந்த இவர் தற்போது திருமணம் செய்து கொண்டிருப்பது அனைவரையும் கவரக்கூடிய வகையில் உள்ளது.
இவர் யோகா மாஸ்டர் தவோன் என்பவரை காதலித்து வந்த நிலையில் இந்த செய்தியை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்.
இதை அடுத்து தற்போது ரிஷிகேஷ் அருகில் உள்ள சிவபுரி கங்கை நதிக்கரையில் ரம்யா பாண்டியனின் திருமணம் எளிமையாக நடைபெற்றுள்ளது.
மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆவீங்க..!
இந்த திருமண வைபவத்தில் இவரது குடும்பத்தினர் மட்டுமல்லாமல் நண்பர்கள் பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதில் ரம்யா பாண்டியனின் நெருங்கிய உறவினர் அவள் மகள் கீர்த்தி பாண்டியனும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
இதை அடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரது திருமண புகைப்படங்கள் வெளிவந்து அந்த இந்த புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெருமளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
Summary in English : Actress Ramya Pandian has officially tied the knot, and her recent marriage pictures are making waves across social media! Fans and followers can’t get enough of the stunning visuals that capture the joy and love of her special day.