ஜெயம் ரவி என்ற தனது பெயரை ரவி மோகன் என்று மாற்றி வைத்துக் கொண்ட நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தி பிரிவது குறித்து விவாகரத்து வழக்கு தொடுத்துள்ள நிலையில் விவாகரத்துக்கான காரணங்கள் பல சொல்லப்பட்டுள்ளது. அவற்றின் தொகுப்பை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
காதலிக்க திருமணம் செய்து கொண்ட நட்சத்திர தம்பதிகள் சிலர் திடீரென விவாகரத்தில் பெறுகின்ற விஷயங்கள் தற்போது அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய காரணம் என்ன என்பது பற்றி கூறியிருக்கிறார்.
ஜெயம் திரைப்படத்தின் மூலம் பேமஸான நடிகராக மாறிய ரவி மோகன் அண்மையில் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கும் விஷயம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.
அந்த வகையில் நீதிமன்றத்திற்கு சென்ற வழக்கு இருவரையும் சமரசமாக போக அறிவுறுத்தியும் ரவி மோகன் தனது முடிவில் உறுதியாக இருப்பதால் விவாகரத்துக்கான பின்னணி காரணங்கள் என்னென்ன என்று அதிர்ச்சிகரமான சில தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதில் ரபி மோகனின் மாமியார் அவருக்கு தெரியாமலேயே சில படங்களில் ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுவதோடு கதை இயக்குனர் தயாரிப்பாளர் போன்ற எந்த விவரத்தையும் ரவி மோகனுக்கு தெரிவிக்காமல் மாமியாரை அந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இருக்கிறார்.
மனைவியின் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக ரவி மோகன் அந்த படங்களில் நடித்துக் கொடுத்ததை அடுத்து அவரது திரை வாழ்க்கையை புரட்டிப் போடக் கூடிய அளவு ஒரு பெரும் சரிவை இது ஏற்படுத்தி விட்டது.
அந்த வகையில் தனக்கு தெரியாமல் ஒப்பந்தம் போடுவது மட்டுமல்லாமல் அதற்கான முன்பணத்தையும் மாமியார் பெற்றுக் கொண்டதை ரவிமோகன் அறிந்து கொண்டு கோபத்துக்கு ஆளானார்.
இதைத் தொடர்ந்து ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி மோகன் மீது சந்தேகம் கொள்ள ஆரம்பித்ததை அடுத்து படப்பிடிப்பு தளத்தில் ரவி மோகன் யாரோடு பழகுகிறார் என்பதை கண்காணிக்க ஆட்களை நியமித்ததாகவும் அவரை பின்தொடர்ந்ததாகவும் தகவல்கள் வெளிவந்தது.
ரவி மோகனுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மனைவி மற்றும் மாமியாரின் மூலம் மனம் உடைந்து போனவர் ஒரு காலகட்டத்தில் அந்த கொடுமைகளை பொறுத்துக் கொள்ளாமல் விவாகரத்து முடிவை எடுத்துள்ளார்.
இதனை அடுத்து தற்போது கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த விவாகரத்துக்கான உண்மையான காரணங்களை நீதிமன்ற விசாரணையின் முடிவில் தெரிந்து கொள்ளலாம்.
Summer in English: Ravi Mohan and Aarthi’s divorce has been quite the talk of the town lately. It seems like every day, there’s a new update or rumor swirling around. For those who might not be in the loop, Ravi and Aarthi were once seen as a power couple, often sharing glimpses of their life together on social media. But recently, things took a turn, and fans have been left wondering what went wrong.