Wednesday , 22 January 2025

இப்போ கூட இது பிடிக்கல.. நித்யா மேனன் தெனாவெட்டு பேச்சு .. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!

நடிகை நித்யா மேனன் தனக்கு திரையுலகில் நடிக்கக்கூடிய ஆர்வம் இல்லை என்றும் சிறுவயதில் இருந்தே மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கூட்டமாக இருந்தது என்றும் அண்மை பேட்டி ஒன்றில் விரிவாக பேசியிருப்பது பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

தென்னிந்திய திரை உலகில் முக்கிய நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை நித்யா மேனன் தனக்கு சினிமாவில் ஆர்வம் இல்லை என்று கூறியதோடு தன் தாயின் வற்புறுத்தலால் தான் சினிமாத்துறைக்கு வந்ததாகவும் கூறியிருக்கிறார். 

அதுமட்டுமில்லாமல் சினிமாவில் தனது விருப்புபடி இருக்க முடியாது இயக்குனர்களின் சிந்தனைகளுக்கு ஏற்பத்தான் நாம் செயல்பட முடியும் என்பதை வெளிப்படையாக தேசிய விருது பெற்ற நடிகை பேசியிருப்பது ரசிகர்களின் மத்தியில் சலனத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தனக்கு சினிமா சுத்தமாக பிடிக்காது இப்போது கேட்டாலும் அதே பதில் தான் சொல்லுவேன் என்றும் சாதாரண வாழ்க்கையை வாழ விரும்பக்கூடிய நடிகை நித்யா மேனன் நடிகையாக இருப்பதால் தனக்கு சந்தோஷம் கிடைக்கவில்லை என்று கூறி இருக்கிறார். 

இவர் சின்ன வயதில் இருந்தே நடனம் பாட்டு கேமரா முன் நடிப்பு போன்றவற்றை தன் அம்மா தான் வற்புறுத்தி செய்ய வைத்ததாகவும் மேடை ஏறவே கூச்சப்படும் எனக்கு ஆரம்பகால அனுபவம் இப்படித்தான் இருந்தது என்பதை பகிர்ந்தார். 

அதுமட்டுமல்லாமல் சினிமா துறையில் இஷ்டப்படி ஒருவர் இருக்க முடியாது. இயக்குனர் ஒருவர் நம்மை எப்போதுமே இயக்குகிறார். அவரது சிந்தனைக்கு ஏற்பவே நாம் செயல்பட முடியும். எனவே கட்டுப்பாடுள்ள துறை இந்த சினிமா துறை தான் என்பதை உடைத்து இருக்கிறார். 

தேசிய விருதினை பெற்று விட்ட நிலையில் தெனாவெட்டாக சினிமா பிடிக்காது என்று பேசியது ரசிகர்களின் மத்தியில் கோப அனலை ஏற்படுத்தி இருப்பதோடு இவர் பேசுவது சரியா? இல்லையா? என்ற விவாதத்தை எழுப்பியுள்ளது. 

இன்னும் சிலரோ நித்யா மேனன் புகழுக்காக தான் இப்படி பேசுகிறார் என்று விமர்சனம் செய்து வரும் நிலையில் சினிமா பிடிக்கவில்லை என்றால் ஏன் இத்தனை வருடங்கள் நடிக்கிறார் என்ற கேள்வியையும் எழுப்பி விட்டார்கள். 

வேறு சிலர் வெளிப்படையாக அவர் கூறி இருக்கக்கூடிய கருத்துக்களை பாராட்டி இருப்பதோடு பிடிக்காததை வெளிப்படையாக சொல்லும் தைரியம் ஒரு சிலருக்கு மட்டும் தான் இருக்கும் அந்த தைரியம் இவருக்கு இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள். 

மேலும் சினிமா துறையில் இருக்கக்கூடிய கட்டுப்பாடுகள் தனிப்பட்ட விருப்பம் இன்மை போன்றவற்றை பகிர்ந்தது ஒரு பக்கம் இருந்தாலும் அவரது துணிச்சலை பலரும் பாராட்டி வருகிறார்கள். 

இதற்கு காரணம் நாம் ஆய்வு செய்து பார்க்கும் போது சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி இங்கு இயக்குனரின் பார்வைக்கு ஏற்ப தான் ஒவ்வொரு நடிகர்களும் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. 

எனவே அவர்கள் தனிப்பட்ட முறையில் எதையும் செய்ய முடியாது என்பதால் தான் நித்யா மேனன் இது போன்ற கருத்துக்களை எதார்த்தமாக எல்லோருக்கும் புரியும் படி கூறியிருக்கிறார் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். 

சினிமா துறை பற்றிய இந்த பேட்டியானது இந்த துறையில் ஒரு விவாதத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அவர்களது விருப்பத்தை வெளிப்படுத்துவது தவறா? என்ற கோணத்தில் கேள்விகள் எழுந்துள்ளதோடு நித்யா மேனனின் வெளிப்படையான பேச்சு ரசிகர்களின் மனதில் சலசலப்பை ஏற்படுத்திவிட்டது.

Summary in English: In a recent interview, Nithya Menen opened up about her journey in the film industry and how her mother played a pivotal role in shaping her career. It’s always fascinating to hear about the behind-the-scenes stories that influence our favorite stars, and Nithya’s experience is no exception.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.