Sunday , 2 February 2025

நடிகர் தனுஷ் அப்படி பாக்கணும்.. இதுதான் கடைசி ஆசை.. பிரபல நடிகை பேச்சு..!

தமிழ் திரையுலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகர் தனுஷ் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் பற்றி சில விஷயங்களை நடிகை சாயா சிங் பகிர்ந்து இருக்கிறார். அது பற்றி எந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஓர் நிலையான இடத்தை பிடித்திருக்கும் நடிகர் தனுஷ் பன்முக திறமையை கொண்ட நடிகர் என்பதோடு நிற்காமல் ஒரு சிறந்த இயக்குனராகவும், பாடகராகவும், பாடல் ஆசிரியராகவும், தயாரிப்பாளராகவும் விளங்குகிறார். 

இந்நிலையில் இவரது ஐம்பதாவது திரைப்படமான ராயன் திரைப்படத்தை இவரை இயக்கி இருந்தது உங்களுக்கு மிக நன்றாக தெரிந்து இருக்கும். இந்த படத்தில் இவர் தனது அற்புதமான நடிப்புத் திறனையும் இயக்கும் ஆற்றலையும் வெளிப்படுத்தி இருந்தார்.

இதை அடுத்து தற்போது குபேரா, இட்லி கடை போன்ற படங்களில் நடித்து வரக்கூடிய இவரை பற்றி நடிகை சாயா சிங் சில விஷயங்களை பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது. 

அந்த வகையில் சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்திருக்க கூடிய தனுஷோடு இணைந்து ராஷ்மிகா மந்தனா நாகார்ஜுனா ஆகியோர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

அத்தோடு இட்லி கடை படத்தில் நடித்து வரும் தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். மாரி செல்வராஜ், ராஜ்குமார் பெரியசாமி மற்றும் போர் தொழில் இயக்குனர் ஆகியோரோடு புதிய படங்களின் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். 

இந்நிலையில் திருடா திருடி படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடித்த சாயா சிங் அண்மை பேட்டையில் திருடா திருடி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டால் தனக்கு மகிழ்ச்சி என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறார். 

மேலும் தனுஷின் அதே கேரக்டரில் பார்க்க விரும்புவதாகவும் ரசிகர்கள் அந்த படத்தை டாம் அண்ட் ஜெர்ரி போல் இருந்ததாக குறிப்பிட்டதை சுட்டுக்காட்டியதோடு 2003 ஆம் ஆண்டு வெளிவந்த அந்த படத்தை பற்றி பேசி இருக்கிறார். 

திருடா திருடி படமானது 2003 ஆம் ஆண்டு சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய அளவு வெற்றி பெற்றது. குறிப்பாக இதில் மன்மத ராசா பாடல் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பு பெற்றது. 

இதைஅடுத்து தனுஷின் அடுத்தடுத்து படங்கள் பற்றி சாயா சிங் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் ரசிகர்களின் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளதோடு திருடா திருடி படத்தின் பகுதி இரண்டு உருவாகுமா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது. 

Summary in English: In a recent open talk, Chaya Singh dove into her experiences working alongside Dhanush in the cult classic film “Thiruda Thirudi.” She shared some fun behind-the-scenes stories and her thoughts on Dhanush’s character, who brought a unique blend of charm and mischief to the screen. Chaya reminisced about how their on-screen chemistry made the film so memorable for fans.

Check Also

ஏஐ படிப்பை முடித்த கையோடு சென்னை வந்த கமலஹாசன்.. விமான நிலையத்தில் உடைத்த செய்தி..!

Kamal Haasan is back in Chennai, and it looks like he’s got some exciting stories to share! After a whirlwind trip to the US, where he dove deep into the fascinating world of AI technology, fans are buzzing with anticipation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *