தற்போது கதாநாயகிகளை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதாகவும் படத்தின் பட்ஜெட் மற்றும் விநியோகத்தில் சிக்கல்கள் இருப்பதாகவும் நடிகை நயன்தாரா கூறியது ஒரு விவாத பொருளாக மாறி உள்ளது. அது பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை நயன்தாரா ஹீரோயின் சென்ட்ரிக் படங்களை எடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதாகவும் படத்தின் பட்ஜெட் மற்றும் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.
இதை அடுத்து இது தற்போது ஒரு விவாத பொருளாக மாறி உள்ளதோடு நடிகை திரிஷாவிடம் இது குறித்து பேட்டி ஒன்றை கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு திரிஷா என்ன பதில் அளித்திருக்கிறார் என்பதை அறிந்தால் அசந்து போவீர்கள்.
இவர் அளித்துள்ள பதில் நயன்தாரா சொல்வதை தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அவர் கூறியதை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார் நடிகை திரிஷா.
மேலும் அவர் ராங்கி திரைப்படத்தில் நடித்த போது இந்த படத்தின் படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தானில் நடைபெற்றதாக கூறியிருக்கிறார்.
பொதுவாக வெளிநாடுகளில் படப்பிடிப்பு என்றால் படக்குழு ஒருமுறை மட்டும் தான் சென்று வரும் அந்த சமயத்திலேயே அங்கு எடுக்க வேண்டிய காட்சிகளை எடுத்து முடித்து விடுவார்கள்.
ஆனால் ராங்கி படத்தின் எடிட்டிங் முடிந்த பிறகு சில காட்சிகளை சேர்க்க வேண்டும் என்று நினைத்து தயாரிப்பாளரிடம் கேட்ட போது எந்தவிதமான கட்டுப்பாடும் விதிக்காமல் மீண்டும் காட்சிகளை படமாக்க ஒப்புதல் அளித்ததை அடுத்து மீண்டும் படப்பிடிப்பு நடந்து அந்த காட்சிகளை இணைத்ததாக கூறியிருக்கிறார்.
எனது ஹீரோயினி சென்ட்ரிக் படங்களுக்கு எந்த விதமான கட்டுப்பாடும் கிடையாது என உறுதியாக தெரிவித்ததை அடுத்து பொதுவாக பெண்கள் படம் என்றால் அது அப்படித்தான் இருக்கும் ஹீரோயின் படம் என்றால் அது ஹீரோ படம் என்று எந்த வித்தியாசமும் கிடையாது.
எனவே படத்தின் இயக்குனர் தான் அந்த படத்தின் உண்மையான ஹீரோ படத்தில் ஹீரோவாக நடித்தாலும் இயக்குனரின் கையில் தான் அனைத்தும் இருக்கிறது என்று திரிஷா தனது கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து திரிஷா நயன்தாராவின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாமல் ராங்கி பட அனுபவத்தை முன்னுதாரணமாக காட்டி பெண்கள் சார்ந்த படங்களுக்கு கட்டுப்பாடு இல்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதைத் தொடர்ந்து திரிஷாவின் இந்த கருத்துக்கள் நயன்தாராவின் கருத்துக்கு எதிராக இருப்பதால் திரை உலகத்தின் மீண்டும் ஒரு விவாதத்தை ஏற்படுத்தி அனைவரையும் பேச வைத்துள்ளது.
Summary in English: Nayanthara has always been a powerhouse in the film industry, and her recent speech about her role in “Heroie” just proves it! She shared some behind-the-scenes insights that really highlighted how much passion she pours into her characters. It’s not just about acting for her; it’s about bringing stories to life and connecting with the audience on a deeper level.