தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வசீகரா. அந்தப் படத்தில் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்யமான கலாட்டா ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அது குறித்த பார்வையை இந்த பதிவில் நீங்கள் பார்க்கலாம்.
தளபதி விஜய் சினேகா நடிப்பில் இயக்குனர் செல்வ பாரதி இயக்கிய வசீகரா திரைப்படம் திரைக்கு வெளிவந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது உங்கள் நினைவில் இருக்கும்.
இதில் நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர் விஜய்யும் சேர்ந்து இயக்குனர் செல்வ பாரதியையும், நடிகை சினேகாவையும் பேய் என்று பயமுறுத்திய சம்பவம் தான் அது.
இதற்கான படப்பிடிப்பு நடந்த ஹோட்டலில் ஆவிகள் நடமாட்டம் இருப்பதாக ஒரு வதந்தி பரவி இருந்ததோடு அதை சாதகமாக பயன்படுத்தி விஜய் மற்றும் தினேஷ் மாஸ்டர் போட்ட திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா.
இவர்கள் ஒரு நாள் இரவு இருவரும் கம்பளியை போர்த்திக்கொண்டு பேயை போல் வேடம் போட்டு கிட்டு இயக்குனர் செல்வபாரதி மற்றும் சினேகாவின் அரை கதவையை தட்டி இருக்கிறார்கள்.
வேகமாக பயங்கர சத்தத்தோடு கதவைத் தட்டி விட்டு அங்கிருந்து வேகமாக ஓடிச் சென்று ஒளிந்துவிட்டார்கள். ஏற்கனவே ஹோட்டலில் ஆவிகளின் வதந்தி பரவி இருந்ததால் இயக்குனர் செல்வ பாரதியும், சினேகாவும் உண்மையிலேயே பயந்துவிட்டார்கள்.
இரவு முழுவதும் தூங்க முடியாமல் தவித்து அவர்கள் மறுநாள் படப்பிடிப்பு தளத்தில் சம்பவம் பற்றி பயத்தோடு கூறியதை அடுத்து நிஜமாகவே யாரோ பேய் மாதிரி கதவை தட்டியது போல் இருந்தது என்று கூறியிருக்கிறார்.
அப்போது தினேஷ் மாஸ்டர் ஒன்றும் தெரியாதது போல அப்படியா? என்று கேட்டுக் கொண்டிருந்ததோடு அதை வெளிப்படுத்த க்கூடாது என்று நினைத்திருந்தாலும் விஜயின் கள்ளத்தனமான சிரிப்பை பார்த்ததும் விஷயம் வெளி வந்துவிட்டது.
பின்னர் இருவரும் சேர்ந்துதான் அந்த வேலையை செய்தோம் என்ற உண்மையை ஒப்புக்கொண்டார்கள். இதைக் கேட்ட பட குழுவினர் அனைவரும் சத்தமாக சிரித்தார்கள்.
படப்பிடிப்பு தளத்தில் இந்த சம்பவம் நடந்ததை அடுத்து அங்கு கலகலப்பான சூழலை நிலவியதாம், விஜய் மற்றும் தினேஷ் மாஸ்டரின் நகைச்சுவை உணர்வு இயக்குனர் மற்றும் சினேகாவின் பயம் இந்த சம்பவத்தை மேலும் சுவாரஸ்யம் ஆக்கியுள்ளது.
இது பற்றிய விஷயம் தான் தற்போது இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. இதை அடுத்து விஜயின் மனதை எண்ணி பலரும் வியந்து போயிருக்கிறார்கள்.
Summary in English: If you’re a fan of the hit series “Vijay Sneha Vaseegara,” you’re probably curious about where all the magic happens! The shooting spot for this beloved show is nothing short of spectacular. Nestled in a picturesque location, it boasts stunning landscapes that perfectly complement the romantic vibe of the series.