சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஸ்ருதிஹாசன் பல்வேறு சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டதோடு கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்திருக்கிறார். அந்த வகையில் சிறு வயதில் அப்பாவிடம் அடி வாங்கி இருக்கிறீர்களா? என்று கேட்ட கேள்விக்கு என்ன பதில் அளித்தார் என்பது பற்றி பார்க்கலாம்.
இந்தக் கேள்விக்கு சற்றும் யாரும் எதிர்பார்க்காத பதிலை ஸ்ருதிஹாசன் சொன்னதோடு பள்ளிக்கூடம் செல்லக்கூடிய பருவத்தில் தன்னை தன் அப்பா அடித்ததாக ஞாபகம் இல்லை என்று கூறினார்.
மேலும் அவர் எதற்கும் கோபப்பட மாட்டார். ஆனால் என்னுடைய தங்கை அக்ஷரா பயங்கரமாக சேட்டைகள் செய்வாள். அவள் ஏதாவது ஒன்றை எப்போதும் செய்து கொண்டே இருப்பதால் அவள் தான் அதிக அளவு அடி வாங்கி இருக்கிறாள்.
ஏனெனில் அவள் செய்யக்கூடிய சேட்டைகள் எல்லாம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்பதோடு சின்ன சின்ன சேட்டைகள் செய்யாமல் கொஞ்சம் அமைதியோடு இருப்பதால் அப்பா என்னை அடித்ததில்லை என நினைக்கிறேன்.
மேலும் ஒரு முறை நான் என்ன செய்தேன் என்றால் பள்ளியின் ப்ரோக்ரஸ் ரிப்போர்ட் கொடுத்தார்கள். அதை வாங்கி வந்து யாருக்கும் தெரியாமல் தூக்கி எறிந்து விட்டேன் என கூறினார்.
இதனை அடுத்து ஏன் கம்மியாக மார்க் வாங்கி இருந்தீர்களா? என்று தொகுப்பாளினி கேள்வி கேட்க அதற்கு ஸ்ருதிஹாசன் ஃபைல் மார்க் வாங்கியிருந்தேன் என ஓப்பனாக கூறியிருக்கிறார்.
மேலும் அந்த ப்ரோக்ரஸ் ரிப்போர்ட்டை பார்த்தால் கண்டிப்பாக அடி விழும் எனவேதான் அதை யாருக்கும் தெரியாமல் தூக்கிப்போட்டு விட்டேன் என்று பேசியது பலர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கமலஹாசன் போன்ற மிகப் பெரிய ஆளுமையின் மகள் என்பதால் அனைவரது கவனம் என் மீது கூடுதலாக இருக்கும் எனவே ப்ரோக்ரஸ் ரிப்போர்ட்டை தூக்கி போட்டு மறைக்க அதுவே காரணமாகி விட்டது.
Summary in English: In a recent interview, Shruti Hassan didn’t hold back when it came to discussing his progress report. It was refreshing to see someone so candid about their journey! She shared insights into the ups and downs of her career, highlighting how each experience has shaped her as an artist. Whether it was tackling challenges in the film industry or celebrating successes, Shruti’s openness made for an engaging conversation.