Wednesday , 22 January 2025

அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த கொடுமை.. முதல் ஆளாய் குரல் கொடுத்த சிவகார்த்திகேயன் யார் அந்த சார்..?

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த கொடுமையை அடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தமிழக பொது மக்களால் கேட்கப்பட்ட ஒரே கேள்வி யார் அந்த சார்? என்பது தான் அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

அப்படி கடந்த ஒரு வாரமாக அந்த சார் யார் என்று தெரியாமல் மக்கள் குழம்பிப் போய் இருப்பதால் அவரைப் பற்றி நிறைய தகவல்கள் இணைய முழுவதும் ஊடுருவி உள்ளது. 

ஆனால் சம்பந்தப்பட்ட துறையினர் இது போலியானது என்று மறுத்து வருகிறார்கள். இப்படி நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் அந்த சார் யார்? என்ற கேள்வி உங்களுக்குள்ளும் எழுந்திருக்கும். 

இதற்கு காரணம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் தன்னுடைய காதலனோடு பேசிக் கொண்டிருந்த சமயத்தில் அங்கு வந்த மர்ம ஆசாமி இருவரையும் ஒன்றாக இருப்பதை வீடியோ எடுத்து பெற்றோர்களிடமும் கல்லூரி நிர்வாகத்திலும் காட்டி விடுவதாக மிரட்டி அந்த பெண்ணை அதே இடத்தில் வைத்து பாலியல் கொடுமை செய்தார்கள். 

இந்நிலையில் இது சம்பந்தமாக ஞானசேகரன் என்ற ஆசாமி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தன்னை மிரட்டிய போது அந்த சாருடன் நீ ஒன்றாக இருக்க வேண்டும். அது தான் உனக்கு பாதுகாப்பு. 

இல்லை என்றால் இந்த காதலனுடன் நீ தனிமையில் இருந்த வீடியோவை உன் பெற்றோரிடம் மட்டுமல்லாமல் கல்லூரி நிர்வாகத்திலும் கொடுத்து விடுவேன் என்று மிரட்டு இருக்கிறார்கள். 

இதனை பாதிக்கப்பட்ட மாணவி தனது புகார் தெளிவாக கூறியுள்ளதை அடுத்து இந்த  சம்பவத்தில் தொடர்புடைய அந்த சார் யாரு? என்ற கேள்விதான் தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக ஒலித்த வண்ணம் உள்ளது. 

இதைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய சட்டையில் யார் அந்த சார்? என்ற பேட்ச் அணிந்து கொண்டு வந்தார்கள்.

இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த நடிகர் சிவகார்த்திகேயன் அங்கு இருந்த சமயத்தில் இது குறித்து இவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு சிவகார்த்திகேயன் பதிலளிக்கும் போது அந்த சார் யாராக இருந்தாலும் நாம் பாதிக்கப்பட்ட மாணவியுடன் நிற்போம் என்ற ஒற்றை வார்த்தையில் பதில் அளித்து அங்கிருந்து நகர்ந்து சென்றார். 

வடநாட்டில் நடக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு எல்லாம் குரல் கொடுக்கும் தமிழ் நாட்டு நடிகர்கள் இங்கு இது வரை நடந்த இந்த பிரச்சனை குறித்து இது வரை வாய் திறக்கவில்லை. 

இந்நிலையில் இது குறித்து முதல் முதலாக ஒரு நடிகர் பேசி இருக்கிறார் என்றால் அது சிவகார்த்திகேயன் மட்டும்தான். இது குறித்து தன்னுடைய தைரியத்தை வெளிப்படையாக பதிவு செய்திருப்பது பொது மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

Summary in English: Sivakarthikeyan, the beloved actor and comedian, recently shared his thoughts on social media about the heartbreaking events that unfolded at Anna University. As someone who has always been in touch with his fans and the community, it’s no surprise that he felt compelled to speak up. 

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.