தமிழ் திரை உலகில் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்த உச்சம் தொட்ட நடிகர்களில் ஒருவராக மாறி இருக்கும் சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் பழைய படங்களின் டைட்டிலை பயன்படுத்தி எந்த அளவுக்கு உச்சத்திற்கு சென்றார் என்பது குறித்த அலசலை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
தமிழ் திரை உலகில் தற்போது பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை தவிர்க்க முடியாத விரும்பும் நடிகர்களில் ஒருவர் யார் என்றால் சிவகார்த்திகேயன் என்று சொல்லிவிடுவீர்கள்.
இவர் ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சிகளில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக நுழைந்து நடனப் போட்டியில் டைட்டிலை வென்று தொகுப்பாளராக மாறி அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர்.
இதனை அடுத்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்ததை அடுத்து தனுஷ் தயாரிப்பில் நடித்த எதிர்நீச்சல் படம் இவருக்கு நல்ல ரீட்சை பெற்று தந்தது.
இந்தப் படத்தின் டைட்டில் பழைய படத்தின் டைட்டில் தான் 1968 ஆம் ஆண்டு நாகேஷ் நடிப்பில் வெளிவந்த இந்த டைட்டிலை தான் சிவகார்த்திகேயன் படத்தில் மீண்டும் வைத்தார்கள்.
இதனைத் தொடர்ந்து காக்கிச்சட்டை என்ற படத்தில் கான்ஸ்டபிள் ஆக சிவகார்த்திகேயன் நடித்து இன்ஸ்பெக்டராக பதவி உயர்வை பெறுவார் ஆக்ஷனில் இந்த படத்தில் பின்னி பெடல் எடுத்து இருப்பார். இந்த தலைப்பும் கமலஹாசன் நடிப்பில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படத்தின் பழைய தலைப்புதான்.
இதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு வெளிவந்த வேலைக்காரன் திரைப்படத்தைப் பற்றி சொல்லவே வேண்டிய அவசியம் இல்லை.
சிவகார்த்திகேயனின் சிறப்பான நடிப்பு வசூலை அள்ளித் தந்தது இந்த படத்தின் டைட்டிலும் 1987 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த வேலைக்காரன் படம் தலைப்பு தான்.
இந்நிலையில் 1986 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாவீரன் இந்த படத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
இதே படத்தின் டைட்டிலைத் தான் 2023 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த திரைப்படமான மாவீரன் திரைப்படத்தின் டைட்டிலும் அமைந்திருந்தது.
அதுபோலவே கடந்த ஆண்டு வெளிவந்த அமரன் திரைப்படம் பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. சிவக்கார்த்திகேயன் நடித்த திரைப்படங்களிலேயே அதிகளவு வசூலை பெற்றுத்தந்த படமாக அந்த படம் அமைந்திருந்தது.
இந்தப் படத்தின் டைட்டிலும் நவரச நாயகன் கார்த்தி நடித்து 1992 ஆம் ஆண்டு வெளிவந்த அமரன் திரைப்படத்தின் டைட்டில் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதைத்தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனின் 25 வது திரைப்படத்திற்கு பராசக்தி என்ற பெயரை வைத்திருக்கிறார்கள். இந்த தலைப்பானது தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிகவும் முக்கியமான திரைப்படமாக கருதப்படும். நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அறிமுகப்படுத்திய படத்தின் டைட்டில் தான்.
அப்படி சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த அந்த படம் 1952 ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்தப் படத்தின் டைட்டிலைத்தான் சிவகார்த்திகேயனின் 25 வது படத்திற்கு வைத்திருப்பதை அடுத்து இந்த படமும் ஹிட் அடிக்கும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.
இப்படி பழைய படங்களின் டைட்டில்களை தனது படத்திற்கு வைப்பதின் மூலம் இவர் மார்க்கெட் உச்சத்தை நோக்கி சென்ற வண்ணம் இருக்கிறது.
எனவே இந்த கட்டுரையின் மூலம் பழைய டைட்டில்கள் மிகச் சிறப்பான முறையில் சிவகார்த்திகேயனுக்கு ஒர்க் அவுட் ஆகி உள்ளது என்பதை இந்த அலசலில் உங்களுக்கு புரிந்திருக்கும்.
Summary in English: Sivakarthikeyan has been making waves in the film industry, and his movies are nothing short of a mass success! It’s fascinating to see how he’s carved out a niche for himself, reminiscent of some classic films like “Amaran” and “Parasakthi.”