Wednesday , 22 January 2025
cini actors

பிரசாந்த் இப்படித்தான் அப்பாஸா சோலிய முடிச்சாங்க.. நடிகர் ஸ்ரீகாந்த் பேச்சு..!

அண்மை பேட்டியில் நடிகர் ஸ்ரீகாந்த் இயக்குனர்  சுந்தர் சி தன்னை பற்றி கூறிய விஷயம் குறித்தும் அப்படி பேச என்ன காரணம் என்பது பற்றிய விஷயங்கள். 

தமிழ் திரை உலகில் சாக்லேட் பாயாய் திகழ்ந்த பிரசாந்த் பெண்கள் விரும்பிய அப்பாஸ், கரண் போன்ற முன்னணி நடிகர்களின் சோலிய இப்படித்தான் முடித்தார்கள் என்ற கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்ட வண்ணம் இருக்கிறார்கள். 

இதற்கு காரணம் ஒரு பேட்டியில் பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி இடம் நீங்கள் எந்த நடிகருடன் சேர்ந்து பணியாற்ற விரும்ப மாட்டீர்கள் என்ற கேள்வியை முன் வைத்தார்கள். 

sunder c

அதற்கு பதில் அளித்து பேசிய நடிகர் சுந்தர் சி நான் நடிகர் ஸ்ரீகாந்த் உடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்று பட்டென்று உடைத்து பேசினார். 

இதை அடுத்து சமீபத்திய பேட்டி கொண்டு கலந்து கொண்ட நடிகர் ஸ்ரீகாந்த் இடம் சுந்தர் சி உங்களுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று சொல்வதற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்கு ஸ்ரீகாந்த் பதில் அளித்து பேசும் போது இதற்கான பதிலை நீங்கள் சுந்தர் சி இடம் தான் கேட்க வேண்டும். நான் காபி வித் காதல் திரைப்படத்தில் அவருடைய இயக்கத்தில் நடித்திருக்கிறேன். அந்தப் படத்தில் நடித்த போது அது குறித்து அவரிடம் பேசினேன். 

young srikanth

அதற்கு சுந்தர் சி என்ன பதில் சொன்னார் என்றால் அன்பே சிவம் படத்தை இயக்கி முடித்த பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்திருக்கிறார். 

இதைத்தொடர்ந்து ஒரு காதல் கதை பண்ணலாம் என்று யோசித்ததை அடுத்து அதற்கு ஸ்ரீகாந்தை ஹீரோவாக போட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அதற்காக என்னிடம் அணுகி இருக்கிறார். 

எனினும் என்னை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பிறகு உறவினர் ஒருவர் தான் உங்களுடைய சினிமா கால்சீட் மேனேஜர் என்று இருப்பதை தெரிந்து கொண்டேன். 

karan

அதனை அடுத்து அவரை தொடர்பு கொண்டேன். அவர் என்னிடம் முதலில் என்கிட்ட கதை சொல்லுங்க . எனக்கு கதை பிடிச்சிருந்தா? ஸ்ரீகாந்த் கிட்ட சொல்லுவேன் என்று கூறினார். 

ஒரு இயக்குனராக நடிகரிடம் கதை சொல்லுவது ஒவ்வொரு இயக்குனரின் கடமை ஆனால் அவருடைய மேனேஜருக்கும் உறவினர்களுக்கும் கதை சொல்லுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. 

மேலும் இதனை என் தன்மான குறைவாக நான் பார்த்ததால் நான் அது பற்றி அந்த மேனேஜரிடம் பேசவில்லை. மேலும் கதை என்பது ஒரு ரகசியமான விஷயம் அதை மேனேஜர்கள், உறவினர்கள் இவர்களிடம் எல்லாம் கூற முடியாது. 

எனவேதான் நேரடியாக நடிகரிடம் கூறினால் அந்தக் கதையின் தன்மை ஆழம் இவற்றை எளிதில் புரிந்து கொள்வார்கள். எனினும் அதற்கு வாய்ப்பை ஸ்ரீகாந்த் அளிக்காததை அடுத்து ஸ்ரீகாந்த் வேண்டாம் என்று வேறு ஹீரோவை நான் தேர்வு செய்து விட்டேன். 

abbas

அந்த நிமிடத்தில் தான் இனிமேல் ஸ்ரீகாந்தோடு இணைந்து பணியாற்றக் கூடாது என்று முடிவெடுத்ததாக கூறியிருக்கிறார். இதனை ஸ்ரீகாந்த் தற்போது பதிவிட்டு இருக்கிறார். 

இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் இப்படித்தான் முன்னணி நடிகர்களாக நடித்த பிரசாந்த் ,அப்பாஸ், கரண் ஆகியோரிடம் இயக்குனர்கள் கதையை நேரடியாக கூற முடியாமல் மேனேஜர்களின் மூலம் கதை சொல்லி வந்தார்கள். 

அதை எடுத்து இப்போது அவர்கள் ஆள் எங்கே இருக்கிறார்கள் என்று கூறத் தெரியாமல் காணாமல் போய்விட்டார்கள். எனவே ஒரு நடிகரை சினிமாத்துறையில் நிலை நிறுத்துவது அவருடைய படங்கள் தான். மேலும் படங்களுக்கு அச்சாணியாக இருப்பது கதை தான்.

எனவே முக்கியமான கதைகளை அந்தந்த நடிகர்கள் கேட்பதை விடுத்து மேனேஜர்களை வைத்துதான் கேட்போம் என்றால் அவர்களே சொந்த செலவில் அவர்களுக்கு சூனியம் வைத்துக் கொள்கிறார்கள் என்று அர்த்தம். 

அந்த வகையில் பல முன்னணி நடிகர்களின் ஜோலியை முடித்த பெருமை அவர்களின் மேனேஜர்களுக்கு உண்டு. கதை பிடிக்கிறது இல்லை பிடிக்கவில்லை இயக்குனர் பெரியவரோ, சிறியவரோ கதை சொல்லும் போது நடிகர் அந்த இடத்தில் கண்டிப்பாக இருப்பது அவசியம். 

prasanth

அப்படி இல்லாத நடிகர்களுக்கு எதிர்கால சினிமா கேள்விக்குறியாக மாறும் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம். எனவே தான் தற்போது சுந்தர் சி சொன்ன காரணத்தை புரிந்து கொண்ட நான் கதை சொல்ல வருவதாக இருந்தால் நானே நேரடியாக உட்கார்ந்து கதை கேட்க ஆரம்பித்து விட்டேன் என்று கூறுகிறார். 

இந்த விஷயத்தை கேள்வி பட்ட ரசிகர்கள் அனைவரும் ஒரு காலத்தில் விஜய் ரேன்ஜ்க்கு இருந்தவர்கள். நீங்கள் அப்போதே இந்த விஷயத்தை செய்திருந்தால் என்று முன்னணி நடிகராக மாறி இருக்கலாம் என்று பதிவிட்டு வருகிறார்கள்.

Summary in English :Actor Srikanth’s journey in the film industry is a fascinating tale that highlights just how important the right management decisions can be for an actor’s career. Starting out with a bang, Srikanth quickly made a name for himself with his charming performances and relatable roles. However, like many actors, he faced his fair share of ups and downs.

Check Also

“மேலே மேலே நான் போகிறேன்..” ஹீரோயின் யார்..? குஷ்புக்கு இவர் என்ன உறவு தற்போது எப்படி இருக்காங்க..!

If you’re a fan of Tamil cinema, you’ve probably heard of "Naan Pogiren Mele Mele," and if you haven’t, let me fill you in! This film features a heroine who’s not just a pretty face but also brings depth and charisma to her role.