நடிகர் சூரியா சினிமாவில் நடிக்க வந்த காரணம் என்ன என்று சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார். இதனை கேட்ட ரசிகர்கள் பெற்ற தகப்பனை இதைவிட யாராலும் கேவலப்படுத்த முடியாது.. என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.
தன்னுடைய தாயின் 25 ஆயிரம் ரூபாய் கடனை அடைப்பதற்காகவே சினிமாவில் நடிக்க வந்ததாக நடிகர் சூர்யா தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூர்யா தன்னுடைய சினிமா பயணம் என்பது திட்டமிடப்படாத ஒன்று என சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
சினிமாவில் நடிப்பதற்கு முன்பு இவர் ஜவுளி தொழிற்சாலையில் பணிபுரிந்து இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
ஆனால், தன்னுடைய தாயின் கடனை அடைப்பதற்காக சினிமாவில் நடிக்க வந்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் நான் மூன்று ஆண்டுகள் பணிய நிறுவனத்தில் வேலை பார்த்தேன். மாதம் 8000 ரூபாய் சம்பளம்.
அதே சமயத்தில் தனது தந்தை பத்து மாதங்களுக்கு மேலாக வேலையில்லாமல் இருந்தார். அந்த நேரத்தில் இயக்குனர் மணிரத்தினத்தின் படத்தயாரிப்பு நிறுவனத்திலிருந்து தொடர்ந்து எனக்கு அழைப்புகள் வந்தன.
அதுதான் அனைத்தையும் மாற்றியது. என்னுடைய தாயின் கடனை அடைக்க உதவியது என கூறியிருக்கிறார். சூரியாவின் தந்தை சிவக்குமார் எத்தனையோ படங்களில் கதாநாயகனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து சம்பாதித்துள்ளார்.
ஆனால், சூர்யா நான் தான் என் அம்மாவின் 25,000 ரூபாய் கடனை அடைத்தேன் என கூறியுள்ளார். பெற்ற தகப்பனை இதைவிட யாராலும் கேவலப்படுத்த முடியாது.. என்று சூரியாவின் இந்த பேச்சை கேட்ட ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் மத்தியில் அடுத்த மாதம் 14ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.