நேற்று வெளிவந்த வணங்கான் திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்கி இருந்தால் ஆரம்பத்தில் இந்த படத்தில் நடிகர் சூர்யா நடிப்பதாக இருந்தது இதை அடுத்து இந்த படத்தில் இருந்து விலகி விட்டார். தற்போது நெட்டிசன்கள் ஏன் இந்த படத்தில் சூர்யா நடிக்கவில்லை என்பது போல கலாய்க்கும் விஷயங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளது அது குறித்து பார்க்கலாம்.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவர வேண்டிய வனங்கான் திரைப்படம் திடீரென நின்று போனதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை கீர்த்தி செட்டி மற்றும் மமீதா பைஜூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. சூர்யா விளக்கிய பிறகு இந்த இரு நடிகைகளும் படத்திலிருந்து விலகி விட்டதாக கூறினார்கள்.
இதனை அடுத்து அருண் விஜய் ஹீரோவாக வைத்து நடிகை ரோஷினி பிரகாஷை ஹீரோயினியாகவும் புதுமுக நடிகையான ரீதா என்பவரை தங்கையாகவும் இயக்குனர் பாலா நடிக்க வைத்திருந்தார்.
இந்தப் படம் நேற்று வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருப்பதோடு முதல் பாதி மெதுவாக சென்றாலும் இரண்டாம் பாதியில் ஒட்டுமொத்த படத்தையும் தூக்கி வைக்க கூடிய வகையில் பாலாவின் கைவண்ணத்தில் இந்த படம் அனைவரையும் கவர்ந்து விட்டது.
பொங்கலுக்கு குடும்பத்தோடு சென்று பார்க்கக்கூடிய நல்ல திரைப்படத்தின் வரிசையில் இடம் பிடித்திருக்கக்கூடிய இந்த படத்தில் சூர்யா நடிக்க மாட்டேன் என்று மறுத்திருப்பது போல தெரிகிறது என ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இதற்கு என்ன காரணம் என்றால் கதைப்படி கதாநாயகனுக்கு வாய் பேசவும் காது கேட்கவும் முடியாது நடிகர் சூர்யாவிற்கு நல்ல சத்தான கெத்தான வசனங்கள் காதை கிழிக்கக்கூடிய அளவு பேசக்கூடிய வகையில் இருந்திருந்தால் நடித்திருப்பார்.
மேலும் அவரால் வாய் பேச முடியாதவராய் நடிப்பது மிகவும் கஷ்டமான விஷயமாக கலாய்த்து இருப்பதோடு அண்மையில் வெளிவந்த கங்குவார் திரைப்படத்தில் காது கிழிய கத்தி கட்டி நடிகர் சூர்யா வசனம் பேசியதை நினைவு கூறக்கூடிய வகையில் இந்த கலாய்ப்பு இருந்தது.
மேலும் பொதுவாக நடிகர் சூர்யா படங்கள் என்றாலே அவரது வசனம் விண்ணை மட்டும் அளவுக்கு சத்தமாக இருக்கும் என்று கருத்துக்களை தெரிவித்து இருக்கக்கூடிய ரசிகர்கள் சிங்கம் உள்ளிட்ட படங்களில் சூர்யா தேவை இல்லாமல் கத்தி,கத்தி வசனம் பேசி இருப்பதையும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
Summary in English: Fans have been buzzing lately about actor Suriya’s surprising decision to step away from the movie “Vanangaan.” It’s been quite the topic of conversation, and you know how fans can be—they’re not holding back! Some are playfully trolling him, joking that he’d never turn down a role if it meant delivering those iconic loud dialogue scenes that he’s famous for.