தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்க பட்டது குறித்தும் அதனால் கிடைக்கும் சலுகைகள் பற்றி இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ள கொள்ளலாம்.
அண்மையில் நடிகர் அஜித்குமார் பத்மபூஷன் விருது அறிவிக்க பட்டதை அடுத்து மேலும் 12 தமிழர்களுக்கு இந்த விருது கிடைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.
பொதுவாகவே பத்ம விருதுகள் மற்றும் பாரத ரத்னா விருதுகளின் கௌரவம் அவற்றோடு தொடர்புடைய உரிமைகள் கட்டுப்பாடுகள் பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
எனவே அது குறித்து விரிவான தகவல்கள் பற்றியும் அதனால் ஏற்படும் சலுகைகள் பற்றியும் இனி பார்க்கலாம்.
பொதுவாக பத்ம விருதுகள் பத்ம விபூஷன், பத்மபூஷன் விருதுகள் அழைக்கப்படுகிறது. இந்த பத்ம விருதுகள் கௌரவத்திற்காகவும் நாட்டின் உயரிய சேவைக்காகவும் வழங்கப்படுகிறது.
இது எந்த அரசுத் துறையிலும் சலுகைகள் மற்றும் உரிமைகள் பெறுவதற்காக வழங்கப்படுவது இல்லை. விருது பெற்றவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் பத்ம விபூஷன் பத்மபூஷன் அல்லது பத்மஸ்ரீ என விசிட்டிங் கார்டு லெட்டர் பேட் பத்திரிகைகள் போஸ்டர்கள் போன்ற ஊடகங்களில் பயன்படுத்தக் கூடாது.
அப்படி பயன்படுத்துவது அறியப்பட்டால் விருது திரும்பப் பெறப்படும். விருதுடன் ஒரு பதக்கம் வழங்கப்படும் விருது பெற்றவர்கள் அரசு விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும்போது விருப்பப்பட்டால் அந்த பதக்கத்தை அணிந்து கொண்டு செல்லலாம்.
இந்தப் பதக்கத்தை அணிவதற்கும் பயன்படுவதற்கும் விதிமுறைகள் சொல்லப்பட்ட நிலையில் விருது பெறுபவர்களுக்கு வழங்கப்படும்.
அந்த வகையில் பாரத ரத்னா இந்தியாவின் மிக உயரிய விருதாக கருதப்படுகிறது. இந்த விருதை பெற்றிருப்பவர்கள் இந்தியாவிற்குள் எந்த விமானத்திலும் இலவசமாக முதல் வகுப்பில் பயணம் செல்லலாம்.
அதுபோல இந்திய ரயில்வே துறையிலும் இந்தியா முழுவதும் பயணம் செய்யக்கூடிய பயண கட்டணம் இலவசமாக கிடைக்கும்.
வயது முதிர்ந்த காலத்தில் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளத்தில் பாதியை ஓய்வூதியமாக இந்த விருது பெற்றவர்கள் பெறலாம். அத்தோடு பாராளுமன்ற கூட்டத்தொடர்களில் கலந்து கொள்ளலாம்.
இவர்கள் அனைவருக்குமே மத்திய அமைச்சருக்கு இணையான மரியாதை கிடைக்கும் விருப்பப்பட்டால் இசட் பிரிவு பாதுகாப்பை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவார்கள் இந்தியாவின் மிக முக்கிய நபராக கருதப்படுவார்கள்.
எனினும் பத்ம விருதுகள் கௌரவத்தை மட்டும் தான் குறிக்கிறது. ஆனால் பாரத் ரத்னா விருது கௌரவத்துடன் சில சிறப்பு சலுகைகளையும் வழங்குவது தான் இந்த இரண்டு விருதுகளுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
Summary in English: Actor Ajith Kumar, fondly known as Thala by his fans, is making headlines once again! This time, it’s for receiving the prestigious Padma Award. If you’re a fan of Tamil cinema, you know that Ajith has been a powerhouse of talent and charisma for years. His journey from a young actor to a beloved superstar has been nothing short of inspiring.