தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமான தளபதி 69 படம் குறித்து தற்போது இணையத்தில் பல்வேறு செய்திகள் பரவி வருகிறது. குறிப்பாக இந்த படத்தின் தலைப்பு பற்றி பேச்சுக்கள் சில வந்துள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
அரசியலில் களம் இறங்கும் நோக்கத்தில் சினிமாவை விட்டு விலகுவதாக தளபதி விஜய் அறிவித்ததை அடுத்து அவரது கடைசி படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்க இருக்கிறார்.
இந்த திரைப்படத்திற்கு தளபதி 69 என்று பெயரிடப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்திற்கான தலைப்பு நாளைய தீர்ப்பு என வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வேகமாக பரவி வருகிறது.
இதை அறிந்து கொண்ட விஜயின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருப்பதோடு குழப்பத்தையும் அவர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று தெரியுமா?
ஏற்கனவே 1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு என்ற திரைப்படமானது எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்து அந்த திரைப்படத்தில் விஜய் நடித்திருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.
எனவே அதே தலைப்பை தளபதி 69 வைத்தால் அது விஜய் ரசிகர்களுக்கு ஒரு Nostalgic அனுபவமாக இருக்கும் என்று கருத்துக்கள் பல்வேறு வகைகளில் வந்துள்ளது. மேலும் இது ஒரு யுக்தியாக கூட இது இருக்கலாம் என்று பேசப்படுகிறது.
இருப்பினும் இந்த தலைப்பு வெறும் வதந்தியா? அல்லது உண்மையா? என்பது குறித்து பட குழுவின் அதிக பூர்வமான அறிவிப்பு வந்த பின்பு தான் உறுதியாக சொல்ல முடியும்.
இதுவரை படக்குழுவினர் எந்த ஒரு தலைப்பு குறித்தும் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை என்பது இங்கு நாம் அவசியம் சுட்டிக்காட்ட வேண்டும்.
எனவே ரசிகர்கள் பலரும் அந்த உறுதியான அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கக் கூடிய நேரத்தில் தளபதி 69 திரைப்படம் அரசியல் பின்னணியைக் கொண்ட அதிரடி திரைப்படமாக உருவாகி வருவதாகவும் இது விஜயின் அரசியலுக்கு வலு சேர்க்கும் விதத்தில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஏற்கனவே இயக்குனர் எஸ் வினோத் அஜித்தின் வலிமை திரைப்படத்தை இயக்கியவர் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். எனவே இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எதிரி உள்ளது.
ஆக மொத்தத்தில் நாளைய தீர்ப்பு என்ற தலைப்பு வெறும் தகவல் மட்டுமே அதிகாரப்பூர்வமாக என்ன தலைப்பு என்பதை உண்மையாக அறிந்து கொள்ள நாம் அனைவரும் காத்திருக்க வேண்டும்.
Summary in English: Hey there, Thalapathy fans! Exciting news is buzzing around the film industry with the announcement of “Thalapathy69,” unofficially titled “Naalaiya Theerpu.” If you’re as pumped as we are, you’ll want to know what’s in store for this much-anticipated movie.