Wednesday , 22 January 2025

லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் குடும்பம் பற்றி தெரியுமா? தெரிஞ்சா மிரண்டுயிடுவீங்க..!

சரவணா ஸ்டோர்ஸ் குடும்ப பின்னணி குறித்து இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம். 

சிங்கார சென்னையில் எப்போதும் பிஸியாக இருக்கும் டி நகரில் பல சரவணா ஸ்டோர்கள் இருக்கும் இதில் எது உண்மையானது இதெல்லாம் யாருடையது என்ற குழப்பம் பலருக்கும் இருந்து கொண்டே தான் உள்ளது. 

இந்த சரவணா ஸ்டோர்ஸ் இந்த அளவு பேமஸ் ஆக என்ன காரணம். எப்படி உருவானது என்பது பற்றி விளக்கமாக பார்க்கலாம். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சரவணன் நாடார் தான் இந்த கடைக்கு சொந்தக்காரர்.

இவரின் மகன்கள் யோகரத்தினம், ராஜரத்தினம் மற்றும் செல்வரத்தினம் இதில் மூன்றாவது மகனான செல்வ ரத்தினம் முதலில் சென்னைக்கு வந்தார். 

இதை அடுத்து ஆரம்பத்தில் ஒரு சிறு வியாபாரத்தை ஆரம்பித்து வாடகை சைக்கிள் சுக்குமல்லி காபி விற்பனை செய்து வந்ததை அடுத்து தனது பிசினஸ் வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார்.

நாள் செல்ல செல்ல இவருடைய கடின உழைப்புக்கு பலன் கிடைக்க ஆரம்பித்தது. அவருடைய தொழில் வளர வளர அவருக்கு ஆட்கள் அதிகமாக தேவைப்பட்டது. அதிலும் நம்பகமான ஆட்கள் தேவை என்பதால் இரண்டு அண்ணன்களையும் சென்னைக்கு அழைத்தார் செல்வரத்தினம். 

இதன் மூலம் அவர் சகோதரர்கள் மீது வைத்திருந்த பாசத்தை நீங்கள் புரிந்து கொள்ளலாம். தற்போது ஒட்டுமொத்த நாடும் மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவு இவர்களது வியாபாரம் கிடுகிடு என வளர்ந்துள்ளது. 

இவர்களின் வியாபாரத்தில் நகை கடை, துணிக்கடை, எலக்ட்ரானிக் ஸ்டேஷனரி என அனைத்து துறைகளிலும் தங்களுடைய கால் தடத்தை பதித்து விட்டார்கள். 

இந்நிலையில் சிறந்த உழைப்புக்கு சொந்தக்காரரான செல்வ ரத்தினம் ஒரு காலகட்டத்தில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ பலன் அளிக்காததால் மரணம் அடைந்தார். 

தன்னுடைய உழைப்பால் என்று உயர்ந்திருக்கக் கூடிய தன்னுடைய சகோதரர்கள் மற்றும் அவருடைய குடும்பம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கொடுக்க வைத்தது செல்வ ரத்தினம் தான். ஆனால் இவருக்கு நடந்த சோகம் தான் ஒரு சரவணா ஸ்டோர்ஸ் பல பெயர்களில் பிரிய காரணமாக அமைந்துவிட்டது.

இந்த மூன்று சகோதரர்களின் மகன்கள் தான் தற்போது டி நகரில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். யோகரத்தினத்தின் மகனும் ராஜரத்தினம் மகனும் சரவணா ஸ்டோர்ஸ் என்ற கடையை நிர்வகித்து வருகிறார்கள். 

இவர்களோடு இணையாமல் செல்வரத்தினத்தின் மகன் சரவணன் தன்னுடைய மச்சான் கூட சேர்ந்து சரவணா செல்வரத்தினம் என்ற பெயரில் தன்னுடைய சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொண்டார். 

ஹோலிவுட் கனவுக்கன்னிகள் ஆன ஜோதிகா, சினேகா ஆகியோர் சரவணா ஸ்டோர் விளம்பரங்களில் நடித்த காலமெல்லாம் போய் நானே இறங்குகின்றேன் என்ற வகையில் இறங்கி விளம்பரத்திற்கான ட்ரெண்டிங்கை மாற்றியவர். 

ஆரம்பத்தில் விளம்பரத்தில் நான் மட்டும் நடிக்க மாட்டேன் என்னோடு தற்போது இருக்கும் டாப் ஹீரோயின் களையும் நடிக்க வேண்டும் என்று அடம் பிடித்து கோடிகளை செலவழித்து அந்த நடிகைகளை தன்னுடைய விளம்பரத்தை நடிக்க வைத்தார். 

இதைப் பார்த்து இவரை ஆரம்பத்தில் பல கேலி கிண்டலும் செய்தார்கள். ரசிகர்களின்  கனவில் ஆடும் கனவு தேவதைகளோடு நிஜத்தில் ஆடிக்கொண்டிருக்கிறாரே இந்த மனுஷன் என்ற புகைச்சல் ஏற்பட்டது. 

இதையெல்லாம் ஓரம் கட்டி விட்டு தொடர்ந்து தன்னுடைய கடை விளம்பரத்தில் தானே தோன்றி புதிய டிரெண்டு உருவாக்கி சாதித்து காட்டினார் லெஜெண்ட் சரவணன்.

அது மட்டும் அல்லாமல் விளம்பரங்களோடு நின்று விடாமல் திரைப்படங்களிலும் ஹீரோவாக நடிப்பேன் என்று கூறிய போது அனைவரையும் இந்த விஷயத்தை விளையாட்டாக நினைத்தார்கள். ஆனால் லெஜென்ட் என்ற படத்தில் நடித்து அசத்தினார்.

இவர்கள் வியாபாரம் களைக்கட்ட ஆரம்பித்ததை அடுத்து மெட்ரோ சிட்டிக்களாக விளங்கும் டெல்லி, மும்பை, பெங்களூர், கொல்கத்தா என விரிவாக்கம் செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். 

உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தங்களுடைய சாம்ராஜ்யத்தை நிறுவிய நிறைய இவர் நெல்லையில் தனது சொந்த மண்ணில் ஒரு கடையை அண்மையில் தான் திறந்திருக்கிறார்கள். 

இவரைப் பார்ப்பதற்கு இளைஞர் போல காட்சி அளித்து இருந்தாலும் இவருக்கு இரண்டு பெண்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள். 

ஒரு மிகச் சிறந்த தொழில் அதிபராகவும் குடும்ப தலைவராகவும் விளங்கும் லெஜெண்ட் சரவணன் தமிழ்நாட்டையே விரட்டி வரும் அற்புதம் மனிதன் என்று சொல்லலாம். புதிய படம் ஒன்று வெளிவர உள்ளது. 

Summary in English: The Legend Saravanan has quite an intriguing history that many might not be aware of! It all started back in the early days when a small group of passionate individuals came together with a dream to create something extraordinary. Picture this: a handful of dreamers, fueled by their love for entertainment and community, brainstorming ideas late into the night.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.