சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலு பேசும் போது தனக்கு எப்படி வடிவேலு என்று பெயர் வந்தது என்ற உண்மையை பதிவு செய்திருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் விரிவாக படிக்க தெரிந்து கொள்ளலாம்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த நடிகர் வடிவேலுவை பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இவர் பெயரைச் சொன்னாலே சிரிக்கின்ற ரசிகர்கள் என்றும் பலர் இருக்கிறார்கள்.
காமெடியன் வடிவேலு படங்களில் செய்திருக்கும் காமெடியை பார்த்து சிரித்து வயிற்று வலி ஏற்படாத ரசிகர்களே இல்லை என்று சொல்லக்கூடிய அளவு தன்னுடைய நகைச்சுவை திறனால் அனைவரையும் கட்டி போட்டவர்.
இவர் இடையில் அண்மை பேட்டி ஒன்றில் அவர் தனக்கு ஏன் வடிவேலு என்ற பெயர் வந்தது என்ற கதையை பதிவு செய்திருக்கிறார். இது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் வடிவேலு ஆரம்ப காலங்களில் திரையுலகில் நடித்துக் கொண்டு இருக்கும் போது வருடத்திற்கு 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தியவர். இதனை அடுத்து டாப் ஹீரோக்களுக்கு இல்லாத டிமாண்ட் இவருக்கு ஏற்பட்டது.
ஆனால் இவரது கூடாத நட்பு கேடாய் முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இவர் வாழ்க்கை அதுவும் சினிமா வாழ்க்கை தடம் மாறி போய்விட்டது.
இதற்கு காரணம் சில நண்பர்களின் பேச்சை கேட்டுக்கொண்டு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அரசியலில் குறிப்பிட்டு நடிகர் பழிவாங்கும் நோக்கில் நுழைந்து தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டார்.
மேலும் யானை தன் தலையில் மண்ணை வாரி இறைத்து கொள்வது போல நடிகர் வடிவேலுவின் வாழ்க்கையிலும் அவரே தன் வாழ்க்கைக்கு சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டார்.
இதை அடுத்த தற்போது சில படங்களில் நடித்து வரும் இவர் அண்மை பேட்டியில் தனக்கு வடிவேலு என்று பெயர் எப்படிப்பட்டது என்ற கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார்.
அந்த பதில் தன்னுடைய அண்ணன் நான் பிறப்பதற்கு முன்பே தவறிவிட்டார். அப்போது மீண்டும் எனக்கு மகன் பிறந்தநாள் வடிவேல் என்று பெயர் வைப்பதாக திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் என் அம்மா வேண்டிக் கொண்டார்
அதனை அடுத்து அவர் வேண்டுதல் நிறைவேற கூடிய வகையில் நான் ஆணாக பிறந்ததை அடுத்து எனக்கு வடிவேலு என்று பெயர் வைத்தார்கள். இன்று அந்த பெயர் உலகம் முழுவதும் ஒலிக்கும் பெயராக மாறிவிட்டது.
இப்படியெல்லாம் நான் புகழ்பெருவேன் என்று என் அம்மா எதிர்பார்த்து இருக்க மாட்டார். இவ்வளவு ஏன் நானும் எதிர்பார்க்கல டா சாமி. இதைவிட எனக்கு வேறு என்ன சந்தோஷம் வேண்டும் என்று கண்ணீர் தழும்ப நான் தழுதழுக்க பேசியிருப்பது பலரையும் கவர்ந்துள்ளது.
Summary in English: Legendary comedy actor Vadivelu has a pretty amusing story about how he got his unique name! It all goes back to a heartfelt promise made by his mom at the Thiruparankundram Murugan Temple. She was there praying for a baby boy, and in a moment of devotion, she promised that if her prayers were answered, she’d name him after the beloved deity Vadivelu.