நடிகை வாணி போஜன் சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் ஒருவர் தன்னிடம் தொலைபேசியில் ஒரு கதையை சொல்லி நடிக்க கேட்டதாகவும் அது குறித்து அவர் கூறிய விஷயங்கள் பற்றியும் இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.
வாணி போஜனிடம் சொன்ன அந்த கதை அவருக்கு செட்டாகாது என்று கூறி நடிக்க மறுத்திருக்கிறார். அதன் பிறகு அவருடைய தோழி ஒருவர் அவரிடம் தொடர்பு கொண்டு அந்த இயக்குனரிடம் கதையைக் முழுமையாக கேட்க வேண்டும். அப்படி கேட்காமல் ஏன் ரிஜெக்ட் செய்தாய் என்று கேட்டிருக்கிறார்.
மேலும் அந்த கதை மிகவும் அற்புதமான கதை என்றும் வேண்டுமென்றால் மீண்டும் ஒருமுறை கேட்டுப்பார் என்று கூறுகிறார். இதனை அடுத்து இயக்குனருக்கு போன் செய்து சார் நீங்க சொன்ன கதையை நேரில் வந்து சொல்ல முடியுமா? என்று கேட்டு இருக்கிறார்.
அந்த இயக்குனரும் நேரில் வந்து கதையை விரிவாக சொல்லியிருக்கிறார். அவர் போனில் சொன்னதை விட நேரில் இன்னும் தெளிவாக விளக்கி கூறியிருக்கிறா.ர் கதை மிகவும் நன்றாக இருந்தது உடனே நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டார்.
அப்போது அந்த இயக்குனர் அவரிடம் ஒரு விஷயத்தை கூறினார். நான் இன்று வேறொரு நடிகை அட்வான்ஸ் கொடுக்க இருந்தேன். நீங்கள் ஒப்புக்கொண்டதால் உங்களை வைத்து அந்த படத்தை இயக்க உள்ளேன் என்று கூறினார்.
இதை அடுத்து அட்வான்ஸ் கொடுக்க இருப்பதாக இருந்த நடிகை யார் என்று கேட்டபோது ரித்திகா சிங் என்று கூறிய போது எனக்கு தூக்கி வாரி போட்டது. சத்தியமா அவர் ரித்திகா சிங்கிடம் தான் கதை சொன்னார் என்று எனக்கு முன்பு தெரியாது.
இதை அடுத்து நான் அவரிடம் நீங்கள் ரித்திகா சிங்கை வைத்து படம் செய்வது என்றால் தாராளமாக செய்யுங்கள். அவருடைய வேலையை கெடுத்தது போல் ஆகி விடப்போகிறது என்று சொன்னதோடு ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க என்றும் சொன்னேன்.
அத்தோடு அந்த கதையை ரித்திகா சிங்கை வைத்து நீங்கள் எடுப்பதாக இருந்தால் நீங்கள் அவரை வைத்து எடுங்கள் இந்த கதை அவருக்கு பொருத்தமாக இருக்கும் என்று கூறினேன்.
ஆனாலும் அந்த இயக்குனர் என்னையே அந்த படத்தில் நடிக்க வைத்தார். இப்போது வரை ரித்திகா சிங் இதனால் என்னிடம் பேசவே இல்லை என்று சொல்லி இருக்கிறார்.
Summary in English: Vani Bhojan recently opened up about her feelings regarding Ritika Singh, and it’s definitely a topic that’s caught the attention of fans. Vani expressed how sad she feels about the situation, shedding light on the ups and downs that come with being in the public eye. It’s tough when friendships face challenges, especially in such a competitive industry.