பெண் முன்னேற்றம் பெண் சுதந்திரம் பற்றி வாய் கிழிய பேசி வரும் இயக்குனர் வெற்றிமாறன் பேட் கேர்ள் என்ற திரைப்படத்தை தயாரித்து இருக்கிறார். அந்த திரைப்படம் குறித்து வெளிவந்திருக்கும் சில சர்ச்சையான விஷயங்கள் பற்றி இனி பார்க்கலாம்.
இந்த பேட் கேர்ள் திரைப்படத்தை பெண் இயக்குனரான வர்ஷா என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் டீசர் வெளிவந்து பொதுமக்களின் மத்தியில் மிகப்பெரிய அளவு சர்ச்சையையும் போராட்டங்கள் ஏற்பட காரணமாக்கிவிட்டது.
பள்ளிக்குச் செல்லக்கூடிய சிறுமி தன் பெற்றோர்களின் கட்டுப்பாட்டை மீறி தன் விருப்பப்படி தான் வாழ்வேன் என்று ஆண் நண்பர் ஒருவரை வைத்துக்கொண்டு மது குடிப்பதும் புகைப்பிடிப்பதும் அவரோடு உறவு கொள்வதும் இதுதான் என் சுதந்திரம் இதை தடுத்தால் இந்த உலகில் உயிர் வாழ மாட்டேன் என்று கூறுகிறாள்
அதுவும் அந்தப் பெண்ணைத்தான் கதாநாயகியாக காட்டி இருப்பதோடு அந்த பெண் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணாக காட்டியிருப்பதை அடுத்து பல்வேறு கருத்து மோதல்கள் இணையம் முழுவதும் ஏற்பட்டு பொதுவெளியில் சர்ச்சைகளை கிளப்பி விட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் வர்ஷா மேடையில் பேசும் போது பெண்கள் என்றால் பூ, பத்தினி என்ற உருவகப்படுத்தி வைத்திருக்கிறார்கள். உண்மையில் பெண்கள் அப்படி இருக்கத் தேவையில்லை என்று கூறி இருக்கிறார்.
இதனைக் கேட்ட இயக்குனர் வெற்றிமாறன் குலுங்கி குலுங்கி சிரிக்க இப்படிப்பட்ட வீடியோ காட்சிகளை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பிரபலம் ரம்யா மோகன் என்ற ஒரு பெண் ஒரு சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
அதில் அவர் அந்த இயக்குனர் பேசுவதற்கு எதற்காக அவர் சிரிக்கிறார். அப்படி என்றால் உங்களுடைய பொண்டாட்டி பத்தினி இல்லையா? என வெற்றிமாறனிடம் கேள்வி எழுப்பும் விதமான ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
அப்போ திருமதி ஆர்த்தி வெற்றிமாறன் பத்தினி இல்லைனு சொல்லுதா இந்த பைத்தியம்? அவனும் உக்காந்து சிரிக்கிறான்.🤔pic.twitter.com/xBW0qXjd2O
— Ramya Mohan (@_Ramya_mohan_) January 27, 2025
இப்படி ஒரு பக்கம் படத்தின் மீதான கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் மறுபக்கம் இயக்குனர் பா ரஞ்சித் படத்தை வரவேற்று இருப்பதோடு ட்விட்டர் பக்கத்தில் தனது பாராட்டுதல்களை பதிவு செய்திருக்கிறார்.
Summary in English: The “Vetrimaran Bad Girl” issue has been making waves lately, and it’s hard not to get caught up in the buzz! If you’re wondering what all the fuss is about, let me break it down for you. Vetrimaran, known for his unique storytelling style and compelling characters, has created a character that’s both fascinating and controversial.