Big news for all the fans of actor Vijay! It looks like he’s stepping into a whole new arena with plans to star in a brand-new TV channel, likely named Vaagai TV.
நடிகர் விஜய் தன்னுடைய அரசியலில் அடுத்த கட்ட நகர்வாக புது டிவி சேனல் ஒன்றை தொடங்க இருக்கிறார் என்ற தகவல்கள் கசிய தொடங்கி இருக்கிறது.
பொதுவாக அரசியல் கட்சி தொடங்கும் நடிகர்கள் உடனடியாக தங்களுக்கென தனி டிவி சேனல் ஒன்றை தொடங்குவது வழக்கம்.
என்ன காரணம் என்றால் சொல்லக்கூடிய செய்திகளை எந்த ஒரு திரிபும் இல்லாமல் தங்கள் சொந்த சேனல் மூலம் மட்டுமே கொண்டு செல்ல முடியும் என்பது தான்.
அந்த வகையில் நடிகர் விஜய்யும் புதிய டிவி சேனல் ஒன்றை தொடங்க இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மேலும் இதற்காக புதிய விண்ணப்பம் எதுவும் அவர்கள் செய்யப் போவதில்லை. ஏற்கனவே சேனலை வைத்திருக்கும் வேறு ஏதாவது ஒரு நிறுவனத்தில் இருந்து வாங்கி அதனை புதிய பெயரில் பயன்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
முதற்கட்டமாக இந்த சேனலுக்கு வாகை டிவி என்று பெயர் வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தை அறிந்த ரசிகர்கள் இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.
அதே நேரம் இதுகுறித்து இதுவரை நடிகர் விஜய் தரப்பிலிருந்தோ..? அல்லது தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தரப்பிலிருந்தோ..? எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜயின் இந்த அதிரடி அரசியல் நகர்வுகள் இவர் 2026 ஆம் ஆண்டு ஆட்சியை பிடிப்பது எந்த அளவுக்கு துடிப்புடன் இருக்கிறார் என்பதை காட்டுவதாக இருக்கிறது.
மேலும் தன்னுடைய அடுத்த படமான தளபதி 69 படப்பிடிப்பை விரைவாக முடிக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார் என்றும் அதனை தொடர்ந்து முழு நேர அரசியல் களத்தில் நடிகர் விஜய் பார்க்க முடியும் என்றும் கூறுகிறார்கள் விவரம் அறிந்து வட்டாரங்கள்.
Summary in English : While details are still under wraps, the buzz around Vaagai TV is already creating quite a stir. Whether it’s going to feature shows, movies, or maybe even some behind-the-scenes content about Vijay’s life and career remains to be seen. But one thing’s for sure: if anyone can make waves in the television industry, it’s definitely him! Stay tuned as we keep an eye on this unfolding story—who knows what surprises Vijay has up his sleeve!