நடிகர் வினு சக்கரவர்த்தி குறித்து சில சுவாரஸ்ய உண்மைகள்.
நடிகர் வினுசக்கரவர்த்தி குறித்து உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் திரை உலகில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் வந்து அனைவரையும் மிரட்டியதோடு பெரும் ரசிகர் படையை வைத்திருந்தவர்.
பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்க கூடிய இவர் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசத்தி விடுவார்.
வினு சக்கரவர்த்தி ஒரு நடிகர்.. தெரிந்த உங்களுக்கு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை பூர்வீகமாகக் கொண்ட வினு சக்கரவர்த்தி கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே நாடகம் எழுதுவதில் வல்லவராக திகழ்ந்தவர்.
இதனை அடுத்து இவர் பல நாடகங்களை எழுதி இயக்கி இருப்பதோடு மட்டுமல்லாமல் கல்லூரி படிப்பை முடித்ததும் காவல்துறையில் ஆய்வாளராக வேலை செய்த விஷயம் பலருக்கும் தெரியாது.
காவல்துறையில் ஆறு மாதங்கள் வேலை செய்த பிறகு தெற்கு ரயில்வே துறையில் மூத்த அதிகாரியாக பொறுப்பேற்று அங்கு சுமார் நான்கு வருடங்கள் வரை பணியாற்றியவர்.
அவரைப் பற்றிய இந்த விஷயம் தெரியுமா?
அரைக்காசு என்றாலும் அரசாங்க உத்தியோகம் வேண்டும் என்று நினைப்பவர்களின் மத்தியில் இவர் அரசு பணியில் உயர் அதிகாரியாக இருந்தாலும் சினிமாவில் மீது கொண்டிருந்த காதலால் தனது வேலையை ராஜினாமா செய்தார்.
இதை அடுத்து நாடகத்துறையில் கதாசிரியராக தன் பணியை துவங்கிய இவர் பல மொழி படங்களில் நூற்றுக்கணக்கான வேடங்களை ஏற்று நடித்து அனைவரையும் கவர்ந்தவர்.
இவருடைய மகள் அமெரிக்காவில் பேராசிரியராகவும் மகன் லண்டனில் மருத்துவராகவும் பணி செய்து வருகின்ற விவரம் பலருக்கும் தெரிந்திருக்கலாம்.
இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் நடிகர் வினுசக்கரவர்த்தி இறைவனடி சேர்ந்தார். ஒருவேளை இவர் அரசு பணியை ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால் திரைத்துறைக்கே வந்திருக்க மாட்டார். தமிழ் திரை உலகம் ஒரு நல்ல நடிகரை பார்த்து இருக்காது.
Summary in English : Actor Vinu Chakravarthy is one of those fascinating personalities in Indian cinema whose journey is nothing short of inspiring. Many fans might not know that before he became a beloved actor, Vinu made a bold move by resigning from his government job to chase his passion for acting.