பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சுனாமி ஏற்படுவதற்கு முதல் நாள் இரவு தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அது பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
சுனாமி ஏற்படுவதற்கு முன்பு முதல் நாள் இரவு அறிந்தும் அறியாமலும் படத்தில் திதி கொடுக்க வேண்டிய ஒரு காட்சி இடம் பிடித்திருந்ததாக சொன்னவர் அந்த காட்சியை படமாக்க ஈசிஆரின் ஒரு கடற்கரையில் ஏற்பாடுகள் செய்து இருந்ததாக சொன்னார்.
மேலும் முதல் நாள் இரவு என் மனதுக்குள் ஏதோ சஞ்சலம் ஏற்பட்டு ஒரு விதமான சலனம் மனது முழுவதும் இருந்தது. அது என்ன என்று என்னால் குறிப்பாக வெளியே சொல்ல முடியாத நிலையில் நான் இருந்தேன்.
இதை அடுத்து திடீர் என்று அந்த இடத்தில் வேண்டாம் வேறு இடத்தில் திதி கொடுக்கக்கூடிய காட்சியை வைத்துக் கொள்ளலாம் என்று என் மனம் தொடர்ந்து சொன்னதை அடுத்து அதே ஈசிஆரில் பிரகாஷ்ராஜ் உடைய கடற்கரை பங்களா ஒன்று உள்ளது. அங்கு சூட்டிங் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்தேன்.
இதை அடுத்து உடனடியாக என்னுடைய மேனேஜருக்கு போன் செய்து இந்த விஷயத்தை கூறியதை அடுத்து சார் நீங்கள் ஏற்கனவே சொன்ன இடத்தில் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. ஏன் திடீர் என்று மாற்ற சொல்கிறீர்கள் முக்கால்வாசி வேலை முடிந்து விட்டது என்று அவர் கூறினார்.
எனினும் நான் வேண்டாம் அந்த இடத்தில் வேண்டவே வேண்டாம் பிரகாஷ் சார் வீட்டின் முன் எடுக்க முடியுமா? என்று கேளுங்கள் அங்கே இடம் இருந்தால் அங்கேயே சூட்டிங் வைத்துக் கொள்ளலாம் என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டேன்.
இதனைத் தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அடுத்த நாள் அங்கே படப்பிடிப்புக்கு செல்கிறோம். எல்லோரும் கடல் பொங்குது கடல் பொங்குது ஓடி வாருங்கள் என்று சத்தம் போட்டார்கள் எனக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை.
அப்போது அருகில் இருந்த ஆர்யா டேய் மச்சான் அங்க ஏதோ கடல் பொங்குது வாடா பாத்துட்டு வரலாம் என்று கூறினான். அப்போது டேய் நாயே ஊரே அலறிட்டு இருக்கு நீ சரியான தொல்லை புடிச்சவன் வாடா என்று உரக்கக் கூறினேன்.
எனினும் அப்போதும் கடல் பொங்குகிறது என்று கூறுவது எனக்கு சரியாக புரியவில்லை. பைக்கை எடுத்துக் கொண்டு கடற்கரை நோக்கி சென்றோம். கடல் நீர் முழுவதும் ஊருக்குள் வந்திருக்கிறது அப்புறம் அங்கிருந்து தப்பித்தால் போதும் என படக் குழுவினரோடு நான் கிளம்பி விட்டேன்.
ஒருவேளை நான் முந்தைய நாள் நிச்சயம் செய்திருந்த இடத்தில் படப்பிடிப்பை நடத்தி இருந்தால் மிகப்பெரிய சிக்கலை சந்தித்து இருப்போம் சுனாமி வரும் போது சட்டு என்று அங்கு கிளம்ப முடியாதபடியான இடம் அது.
நல்ல வேலையாக இடத்தை மாற்றியதின் காரணத்தால் அந்த இடத்தை விட்டு எல்லோரும் தப்பி பாதுகாப்பான இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டோம். இல்லையென்றால் அன்று மிகப்பெரிய பிரச்சனையாய் அது உருமாறி இருக்கும் என்று தனது அனுபவத்தை அழகான முறையில் எடுத்துச் சொன்னார்.
Summary in English: Vishnuvardhan, the talented filmmaker, is back in the spotlight with his latest project, “Arindhum Ariyamanlu.” The buzz around this film has everyone talking! Recently, the shooting kicked off, and fans are super excited to see what he has in store.