சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மெகா கிட் சீரியல் ரோஜா தொடரில் நடித்த சீரியல் நடிகை பிரியங்கா பற்றி விரிவாக இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
இல்லத்தரசிகள் விரும்பும் சீரியல்களை அள்ளித் தருவதில் சன் டிவிக்கு நிகர் சன் டிவி என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை சுமார் 1316 எபிசோடுகள் வெளிவந்த ரோஜா சீரியலில் நடித்த நடிகை தான் பிரியங்கா.
இவர் இந்த சீரியலில் தனது கணவரை அர்ஜுன் சார்.. அர்ஜுன் சார் என்று கூப்பிட்டு பல்லாயிரக்கணக்கான தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்த இவர் பற்றி சில சுவாரசியமான தகவல்களை நீங்கள் இனி படிக்க தெரிந்து கொள்ளலாம்.
ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர் ஹைதராபாத்தில் தான் பிறந்து வளர்ந்திருக்கிறார். தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை ஹைதராபாத்தில் படித்து முடித்து விட்டார்.
மேலும் சிறு வயதிலிருந்தே முறையாக நடனம் கற்றுக் கொண்டிருக்க கூடிய இவர் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே தெலுங்கு மொழியில் வெளியான அண்டாரி பந்துவையா என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்த நடிகை பத்மபிரியாவிற்கு தங்கையாக நடித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த தீயாய் வேலை செய்யணும் குமாரு திரைப்படத்தில் திவ்யா ஸ்ரீ என்ற கதாபாத்திரத்தில் ஹன்சிகாவின் தோழியாக நடித்து அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து பல சினிமா வாய்ப்புகள் இவருக்கு வர ஆரம்பித்ததை அடுத்து நடிப்புக்கு கொஞ்சம் இடைவெளியை விட்டுவிட்டு டிப்ளமோ இன் இன்டீரியர் டிசைனிங் படிப்பை படித்து முடித்தார்.
அதுமட்டுமல்லாமல் வீடுகள், அலுவலகங்கள், ஹோட்டல்கள் போன்றவற்றில் இருக்கும் இன்டீரியர் டிசைனை பக்காவாக செய்வதில் கைதேர்ந்தவர் ஆக பிரியங்கா விளங்குகிறார்.
தன் படிப்பு முடிந்த கையோடு மீண்டும் நடிப்பதில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். ஆனால் இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் இவர் நடிக்கும் படங்களில் எல்லாம் ஹீரோயினிக்கு தங்கையாகவோ, தோழியாகவோ நடிக்கக் கூடிய வாய்ப்புகள் மட்டும் தான் கிடைத்தது.
சீரியல்களை பொருத்தவரை 15 க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து இருக்கக்கூடிய ரசிகர்கள் மத்தியில் அடையாளம் காட்டி பேமஸ் ஆக்கியது ரோஜா சீரியல் தான்.
இவருக்கு மிகச் சிறப்பாக டான்ஸ் ஆட தெரிவதால் சீரியலில் இடைவேளை சமயத்தில் சக நடிகைகளோடு இணைந்து நடனம் ஆடி ரீல்ஸ் வீடியோ எடுப்பதை பொழுதுபோக்காக வைத்திருக்கிறார்.
மேலும் சீரியல்களில் சக நடிகைகளுடன் நட்பாக பழகியதின் காரணத்தால் சினிமா வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது. அதன்படி நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா படத்தின் மூன்றாவது பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
அத்தோடு நடிகர்கள் லாரன்ஸின் நடனத்திற்கு மிகப்பெரிய விசிறியாக விளங்கும் இவர் காஞ்சனா 3 படப்பிடிப்பு தளத்தில் தன்னுடைய நடன திறமையை லாரன்ஸ் மாஸ்டரிடம் வெளிப்படுத்தி பாராட்டுதல்களை பெற்றிருக்கிறார்.
ஆரம்பத்தில் தமிழ் சீரியல்களில் நடிக்கும் போது நீளமான வசனங்களை பேச சிரமப்பட்ட இவர் நாள் செல்ல செல்ல தமிழ் மொழியை கற்றுக்கொண்டு பெரிய வசனமாக இருந்தாலும் அசால்டாக பேசி அசத்தி விடுவார்.
இவர் தன்னுடைய காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிக்காத காரணத்தால் வெளிநாட்டில் தன்னுடைய காதலனுடன் சென்று அங்கு எளிமையான முறையில் சில நண்பர்கள் முன்னிலையில் கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது ரோஜா சீரியல் இரண்டாம் பகுதியில் ஹீரோயினியாக நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். இந்த சீரியலின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதை அடுத்து இந்த சீரியல் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.
Summary in English: If you’ve been scrolling through social media or catching up on the latest buzz in the entertainment world, you might have stumbled upon the name Roja Serial Priyanka. So, who is she exactly? Well, Priyanka is one of the standout stars from the popular TV serial “Roja,” which has captured the hearts of many viewers with its gripping storyline and vibrant characters.