இன்று நாம் 2024 ஆம் ஆண்டின் இறுதி நாளில் இருக்கிறோம். இந்த ஆண்டு பல தமிழ் திரைப்படங்கள் வெளிவந்து நம்மை மகிழ்வித்தது. அதில் எந்த ஹீரோயினி நமது கவனத்தை ஈர்த்தார் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
முதலில் வரவிருக்கும் 2025 வரவேற்பதோடு மட்டுமல்லாமல் ஸ்டார்டேசி நேயர்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை அட்வான்ஸ் ஆக தெரிவித்துக் கொள்கிறோம்.
2024 வது ஆண்டில் சிறிய பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை ரசிகர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டு ரசிக்கப்பட்ட படங்கள் பல உண்டு . அதில் பல கதாநாயகிகள் நடித்திருந்தார்கள்.
இதில் இந்த ஆண்டு டாப் நடிகைகளின் பட்டியலில் இடம் பெறக்கூடிய நடிகைகள் யார்? யார்? என்பது குறித்து பார்க்கலாம்.
அந்த வகையில் சிறப்பு நாயகிகளாக சொல்லப்படக்கூடிய அந்த நடிகைகள் யார் என்றால் அரண்மனை 4 படத்தில் நடித்து கோலிவுட் ரசிகர்களை கவர்ந்த நடிகை தமன்னா கடந்த ஆண்டு காவலா பாடலில் பெருத்த கவனத்தை ஈர்த்தார்.
இவரைப் போலவே மலையாள லேடி சூப்பர் ஸ்டார் ஆக விளங்கும் மஞ்சு வாரியார் வேட்டையன், விடுதலை 2 போன்ற படங்களில் தனது அபார திறமையை காட்டி ரசிகர்களின் மத்தியில் தனது ரீஎன்ரியை சக்சஸ் ஆகி உள்ளாக மாற்றிக் கொண்டார்.
அடுத்ததாக கவனம் ஈர்த்த நடிகைகளில் ஒருவராக நடிகை சாய் பல்லவி விளங்குகிறார். 90-களில் நடிகை சிம்ரனுக்கு எப்படி ஒரு பெருத்த வரவேற்பு கிடைத்தது போல் அதைவிட ஒரு மடங்கு அதிகமாகவே சாய் பல்லவி அனைவரையும் கவர்ந்து இழுத்து இருக்கிறார்.
இவர் நடிப்பில் வெளிவந்த அமரன் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெருத்த கவனத்தை ஈர்த்ததோடு இவரை நடிப்பு அரக்கி என்று சொல்லக்கூடிய வகையில் அமைந்துவிட்டது.
மேலும் கம்பேக் கொடுத்த நடிகைகளின் வரிசையில் பிரியா பவானி சங்கர சொல்லலாம். அது போல தங்களான் படத்தில் நடித்திருந்த மாளவிகா மோகனனும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்து இருந்தார்.
அது மட்டுமல்லாமல் லவ்வர் திரைப்படத்தின் மூலம் ஸ்ரீ கௌரி ப்ரியா சிறப்பான என்ரீயை தமிழ் திரை உலகுக்கு கொடுத்திருக்கிறார். அது போலவே லப்பர் பந்து படத்தில் நடித்த சுவாசிகா, சஞ்சனா போன்றவர்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க இருக்கிறார்கள்.
மேலும் வாழை படத்தின் மூலம் நிகிலா விமல், திவ்யா துரைசாமி ரசிகர்களின் மத்தியில் பெருத்த கவனத்தை ஈர்த்திருப்பதோடு சூரியுடன் கருடன் படத்தில் இணைந்து நடித்த ஷிவதா மற்றும் கொட்டுக் காளி படத்தில் நடித்திருக்கும் அன்னா பென் போன்ற நடிகைகள் அனைவருமே இந்த ஆண்டு ரசிகர்களின் மனதை தொட்டவர்களின் லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறார்கள்.
Summary in English: As we dive into 2024, Kollywood is buzzing with some amazing heroines who are taking the spotlight and stealing our hearts! From fresh faces to seasoned stars, this year is all about powerful performances and captivating stories.