Anchor Archana’s daughter, Zaara, recently took to social media and absolutely slayed the haters with her epic comebacks! After sharing some fun and vibrant photos that showcased her personality, she was met with a flood of not-so-nice comments.
சின்னத்திரையில் தனது அற்புதமான திறமையால் ரசிகர்கள் பலரையும் பெற்றிருக்கும் விஜே அர்ச்சனா பற்றி அதிகளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் சூப்பர் மாம் நிகழ்ச்சியில் தன்மகள் சாராவோடு இணைந்து கலக்கியவர்.
இவர்கள் அடித்த லூட்டிகளை பார்த்து அதிகளவு ரசிகர்களைப் பெற்ற இவர்கள் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து தன்னுடைய புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிடுவார்கள்.
சிவப்பு விளக்கு ஏரியா..? ஒன் ஹவருக்கு என்ன ரேட்..?
இந்நிலையில் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரவு நேரத்தில் தெருவோரத்தில் கருப்பு நிற ட்ரான்ஸ்பரன்ட் புடவையை அணிந்து கொண்டு ஹேண்ட் பேக் உடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கினார்.
இதை அடுத்து இந்த புகைப்படங்களுக்கு மோசமான கமாண்டுகளை சில நெட்டிசன்கள் பதிவிட்டதை அடுத்து அதற்கான பதிலை அர்ச்சனாவின் மகள் பக்குவமாக தெரிவித்திருக்கிறார்.
அதில் அவர் பதிவு செய்த விஷயம் என்னவென்றால் சிகப்பு விளக்கு ஏரியா..? ஒன் ஹவருக்கு என்ன ரேட்.. பைபாஸ் ரோட்டை உங்களுக்கு நினைவு படுத்துகிறதா?
அத்தோடு என்கூட படுப்பியா? இன்னும் எவ்வளவோ கமெண்ட்கள் அதைப்பற்றி நான் பேச விரும்பவில்லை. இவை அனைத்தும் என்னுடைய சமீபத்திய பதிவுகளுக்கு கிடைத்த பேட் கமெண்ட்ஸ்.
கூட படுப்பியா..? அர்ச்சனா மகளின் பதில்..
இந்த கமெண்ட்களை படித்த பிறகு என் இதயம் நொறுங்கி, ஜீரணிக்க முடியாத அளவு மனது சோகத்தால் திணறியது. சுதந்திரம் பெற்று எவ்வளவு ஆண்டுகள் ஆகியும் ஒரு பெண்ணை எவ்வளவு மோசமாக பேசுகிறார்கள் என்று பாருங்கள்.
பெண்களை எப்போதும் ஒரு எளிமையான பொருளாக எண்ணி ஏளனமாக பார்க்கிறார்கள். நான் வெளியிட்டிருந்த அந்த புகைப்படங்களை படம் பிடித்து என்னுடைய அப்பா தான்.
என் அப்பா பணியாற்றக்கூடிய இடத்தில் நடந்த இரவு விருந்துக்காக நாங்கள் சென்றதை அடுத்து அந்த சாலையில் தான் இந்த புகைப்படங்களை அந்த சூழ்நிலையில் எடுத்தோம்.
எனினும் தற்போது இதை நான் விரிவாக சொல்ல வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் சொல்லுவதற்கு வேதனையாகவும் உள்ளது.
ஏனென்றால் இன்றைய சமுதாயம் ஒவ்வொரு பெண்களின் ஆடையை பார்த்து அது பற்றி விமர்சனம் செய்வதோடு மட்டுமல்லாமல் தர குறைவாக பேசுகிறது.
இன்னும் சொல்லப்போனால் நான் புடவை அணிந்து கொண்டு தான் அந்த விருந்துக்கு சென்றதை அடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இருந்தேன். இந்நிலையில் தாறுமாறான தரக்குறைவான விமர்சனங்கள் வந்துள்ளது.
மேலும் ஒரு பெண் புடவை அணிந்து ஹேண்ட் பேக் கையோடு கூந்தலை விரித்து விட்டிருப்பது ஒரு பிரச்சனையா? மேலும் சமூக வலைத்தளங்களில் நான் வெளியிடுகின்ற புகைப்படங்கள் மற்றும் நான் அணியும் உடை இவை எல்லாம் என் சுதந்திரத்திற்கு உட்பட்டது. இதை என்னை உண்மையாக நேசிப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.
ஆனால் முகம் தெரியாத ஜீரணிக்க முடியாத இது போன்ற கமெண்ட்களை தரக்கூடிய ஆட்கள் இன்னும் இந்த உலகத்தில் இருப்பதால் குடும்பத்தில் இருக்கக்கூடிய பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
எனக்கு இன்று வரை உண்மையான அன்பை கொடுத்து இருக்கக்கூடிய அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். இது மாதிரியான வேண்டாத கமாண்டுகளை செய்பவர்களை கட்டாயம் கட்டுப்படுத்த வேண்டும் என்று பதிலடி பதிலை தந்திருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
Summary in English: Anchor Archana’s daughter, Zaara, recently took to social media and absolutely slayed the haters with her epic comebacks! After sharing some fun photos that showcased her vibrant personality and style, she was hit with a barrage of not-so-nice comments. But instead of letting the negativity get to her, Zaara decided to clap back in the most amazing way.