Wednesday , 22 January 2025

தல அஜித்தின் விடா முயற்சி டீசர்..! அதில்  இதை கவனிச்சிங்களா?

தல அஜித் குமாரின் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தயாராகி வரும் விடாமுயற்சி படத்தின் டீசர் வெளி வந்துள்ளது. அது குறித்த தகவலை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

தமிழ் திரை உலகில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் தன் சொந்த உழைப்பால் நட்சத்திர நாயகனாக உயர்ந்திருக்கும் தல அஜித் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. 

அந்த வகையில் தல அஜித்தின் நடிப்பில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் பல வருடங்களாக தயாரிக்கப்பட்டு வருவதை அடுத்து இணையங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளி வந்தது. 

தல அஜித்தின் விடா முயற்சி டீசர்..

அந்த வகையில் ஒரு கட்டத்தில் இந்த படத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டதின் காரணத்தால் படப்பிடிப்பு பணிகள் முடங்கிப் போயிருந்ததை அடுத்து இந்த படம் வெளிவருமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது.

அதுமட்டுமல்லாமல் ஒரு கட்டத்தில் இந்த படம் டிராப்பாகி விட்டது என்றெல்லாம் கூட இணையம் முழுவதும் விஷயங்கள் வைரலான நிலையில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. 

இது குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தல நடிப்பில் எந்த ஒரு படமும் வெளிவரவில்லை. அது மட்டுமல்லாமல் அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. 

இதைத்தொடர்ந்து தற்போது வெளிவந்திருக்கும் விடாமுயற்சி பட டீசரை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருவதோடு மட்டுமல்லாமல் தல அஜித் பற்றி எப்போதும் போல புகழ் பாட ஆரம்பித்து விட்டார்கள். 

அந்த வகையில் தல அஜித் படங்களுக்கு நேர் மாறாக ஒரு புது முயற்சியாக இந்த விடா முயற்சி படம் அமைந்திருக்கிறது என்பது டீசர் பார்க்கும் போதே அனைவருக்கும் புரிந்து விட்டது.

அதுமட்டுமல்லாமல் படத்தின் கதை டீசரை பார்த்ததுமே மேலோட்டமாக புரிந்து கொள்ள முடிவதாக பலரும் சொல்லி வரக்கூடிய நிலையில் இந்த படத்தில் நமக்கு நெருக்கமான யாரோ ஒருவர் இல்லாதது போல இருப்பதோடு மட்டுமல்லாமல் அந்த நபர் கடத்தப்பட்டிருக்கிறார் என்ற விஷயம் எளிதாக தெரிகிறது. 

அதில்  இதை கவனிச்சிங்களா..

அப்படி கடத்தப்பட்ட அந்த நபரை தேடும் முயற்சியில் நடிகர் அஜித் ஈடுபடுகிறார். இதில் அவர் எதிர்கொள்ள கூடிய கடுமையான சிக்கல்களையும் சவால்களையும் தான் கதையாக கோர்த்து இருக்கிறார்கள். 

அத்தோடு தனி ஆளாக தல அஜித் தன் முயற்சிகளை பக்காவாக மேற்கொண்டு இருப்பதால் படம் அருமையாக இருக்கும் என்று யோசிக்க முடிகிறது. மேலும் இங்கே முக்கியமான விஷயம் என்னவென்றால் அஜித்துடன் அவர்களுடைய நண்பர்கள் அல்லது அவருடைய குழு என எதுவும் காட்டப்படவில்லை. 

எனவே டீசர் முழுவதும் அஜித் சோலோவாக காட்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல் படத்தின் மீது எந்தவித எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாத வண்ணம் டீசர் நகர்ந்து உள்ளது. இதுதான் இன்றைய சினிமா ரசிகர்களுக்கும் தேவையாக உள்ளது.

இந்நிலையில் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லரில் எக்கச்சக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு இருக்க கூடிய இந்த படம் உச்சகட்ட எதிர்பார்ப்புடன் திரையரங்கிட்டு வரும்.அப்படி வரும் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் இருக்கும் போது தான் படம் தோல்வி படமாக மாறிவிடுகிறது. 

எனவே இது போல பல்வேறு படங்களை பார்த்திருக்கிறோம் அதனை உணர்ந்து கொண்ட படக்குழு படத்தின் மீது எந்தவிதமான அனாவசிய எதிர்பார்ப்பையும் ஏற்றி விடாத வண்ணம் டீசரை கட் செய்து வெளியிட்டு இருக்கிறது இந்த ட்ரீசர் தற்போது ரசிகர்களின் மத்தியில் வைரலாகிவிட்டது. 

Summary in English: The buzz is real, folks! The highly anticipated teaser for Ajithkumar’s upcoming film, “Vidamuyarchi,” has officially dropped, and fans are absolutely losing it online. If you haven’t seen it yet, you’re in for a treat! The teaser gives us just a glimpse of what’s to come, and let me tell you, it’s got all the right vibes.

Check Also

முதல் பாதி Stress.. அடுத்த பாதி பிளாக் பஸ்டர்.. “மதகஜராஜா” திரைவிமர்சனம்..!

If you’re a fan of Tamil cinema, you’ve probably heard about the latest flick, "Madhagajaraja," directed by the talented Sundar C and featuring the charismatic Vishal in a lead role.