Wednesday , 22 January 2025

முதல் பாதி Stress.. அடுத்த பாதி பிளாக் பஸ்டர்.. “மதகஜராஜா” திரைவிமர்சனம்..!

யாருமே எதிர்பார்க்காத சமயத்தில் 13 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரைக்கு வந்த மதகஜராஜா திரைப்படம் எப்படி இருந்தது என்று எந்த தரை விமர்சனத்தில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

தமிழ் திரை உலகில் ஒரு அளப்பரிய சாதனை புரியக்கூடிய திரைப்படமாக கிட்டத்தட்ட 13 ஆண்டு இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் மதகஜராஜா திரைப்படம் இருக்கும். 

ஏனெனில் பல்லாயிரக்கணக்கான திரைப்படங்கள் இன்னும் வெளியாகாமல் இருக்கின்ற சமயத்தில் நடிகர் விஷாலின் திரைப்படமான இது இனி வெளிவராது கதை முடிந்து விட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது மீண்டும் நான் வருகிறேன் என்று மதகஜராஜாவில் வந்திருக்கிறார் நடிகர் விஷால். 

இந்தப் படத்தைப் பொறுத்தவரை கதாநாயகனின் மூன்று நண்பர்கள் அவருடைய பள்ளி ஆசிரியரின் மகளுடைய திருமணத்திற்காக ஒன்று சேர்க்கிறார்கள். மூன்று நண்பர்களில் ஒரு நண்பர் தன் மனைவியை விவாகரத்து செய்யப் போகிறார் என்பதை கதாநாயகன் தெரிந்து கொள்கிறார். 

இதனைத் தொடர்ந்து இரண்டு நண்பர்கள் தங்களுக்குள் இருக்கும் ஒரு தீர்க்க முடியாத பிரச்சனையை கதாநாயகனிடம் கூற அந்த இரண்டு பிரச்சனையை தீர்க்கும் போது சந்திக்கக்கூடிய புது புது பிரச்சனைகள் பற்றியும் அதற்கு உரிய அதிரடி திருப்புங்கள் எதிர்பார்ப்புகள் பற்றி நகைச்சுவையோடு திரைக்கதை நகர்கிறது. 

அப்படி சொல்லப்பட்ட அந்த இரண்டு நண்பர்களின் பிரச்சனை என்ன அதை கதாநாயகினால் தீர்க்க முடிந்ததா? இல்லையா? என்பது தான் திரைப்பட கதையின் மீதி பகுதி. 

தமிழ் திரைபடத்தில் வெளியிட முடியாமல் பல்லாயிரக்கணக்கான படங்கள் முடங்கிக் கொண்டிருக்கும் போது பழைய லிஸ்டில் இருந்து இந்த படம் வெளிவந்து விஷாலுக்கு பக்கபலமாக அமைந்து விட்டது. 

ஆனாலும் இந்தப் படம் பழைய லிஸ்டில் சேராமல் புத்தம் புது படமாகவே வெளிவந்து தமிழ் திரை உலகில் ஒரு சாதனையை புரிந்து விட்டது.

அதுமட்டுமல்லாமல் நமக்கு பிடித்த திரைப்படங்கள் சின்ன திரையில் ஒளிபரப்பானால் ஒரு ஆர்வம் ஏற்படும் அல்லவா? அது போல  எதிர்பார்ப்பு இந்த படத்தை காண ரசிகர்களின் மத்தியில் இருந்தது. 

அப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் இந்த படத்தின் இயக்குனர் சுந்தர் சி செயல்பட்டு இருக்கிறாரா? கதாநாயகனாக நடித்திருக்கும் நடிகர் விஷால் தன்னுடைய பீக் டைமில் இருந்த அதே நடை, உடை, பாவனை, சண்டை என அனைத்து காட்சிகளிலும் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார். 

அந்த வகையில் பழைய விஷாலை பார்க்க வேண்டும் என்பவர்களுக்கு இந்த படம் கறி விருந்தாக அமைந்துவிட்டது. படத்தில் இருந்த அதே ஸ்பீடில் அடுத்தடுத்த படங்களில் நடித்திருந்தால் சிவகார்த்திகேயனுக்கு இன்று தமிழ் சினிமாவில் இடம் கிடைத்திருக்குமா? என்று யோசிக்க வைத்திருக்கிறார். 

அதுபோல நடிகர் சந்தானத்தின் காமெடி காட்சிகள் சொல்லவே வேண்டாம். அதே டைமிங் அதே ரைமிங் டெலிவரியுடன் தன் பங்குக்கு தன் பணியை பக்காவாக செய்திருக்கிறார். 

அப்படியே பத்து வருடங்களுக்கு முன்பு நான் எப்படி இருந்தோமோ அந்த அனுபவத்தை இந்த படம் நமக்கு நிச்சயமாக கொடுத்துவிடும். 

மதகஜராஜாவை பொருத்த வரை காமெடி கலவரமாக இருக்கின்ற இந்த படம் தியேட்டரில் அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. சுந்தர் சி படம் என்றாலே கொஞ்சம் கிளாமரும் காமெடியும் இருப்பது இயல்புதான். 

மேலும் இந்த படத்தை பொறுத்த வரை நடிகை அஞ்சலி நடிகை வரலட்சுமி வரும் காட்சிகள் அனைத்தும் எக்கு தப்பாக கிளாமரில் தாறுமாறாக காட்சி சிலரது முகத்தையும் கூச வைத்துள்ளது. 

ஆனால் அதே சமயம் சுந்தர் சி படங்களில் கிளாமர் இருக்கும் என்று நம்பி செல்லும் ரசிகர்களை ஏமாற்றாமல் முழு கமர்சியல் திரைப்படமாக ரசிகர்களின் மனதை இந்த திரைப்படம் கவர்ந்து விட்டது என்று சொல்லலாம். 

அதிலும் நடிகர் விஷால் முழு ஆக்சன் ஹீரோவாக சித்தரித்திருக்கும் எந்த திரைப்படம் சந்தானத்தின் காமெடியை பார்த்துக் கொண்டிருக்கும் போதே இந்த மனுஷன் எதுக்கு ஹீரோவா போனாரு என்று யோசிக்க கூடிய வகையில் உள்ளது.

 காமெடியன் சந்தானத்தை நாம் தற்போது மிஸ் பண்ணி விட்டோம் சந்தானம் இல்லையே என்ற உணர்வு நமக்குள் ஏற்படும். அந்த அளவு காமெடியில் சந்தானம் கலக்க இருக்கிறார்.

மேலும் மனோபாலா, சந்தானம், விஷால் காமெடி காட்சிகள் திரைப்படத்தில் உச்சகட்ட ரகளை என்று சொல்லலாம். படத்தின் மைனஸ் பாயிண்ட் என்று பார்த்தால் படத்தில் இருக்கக்கூடிய கிளாமர் காட்சிகள் மட்டும் தான். இந்த இடத்தில் கிளாமர் வேண்டுமா? என்று கேட்கும் அளவுக்கு கஞ்சத்தனம் பார்க்காமல் அள்ளித் தெளித்து விட்டார்கள். 

மேலும் படத்தில் ஆங்காங்கே வரக்கூடிய லாஜிக் ஓட்டைகள் சிந்திக்க வைக்கிறது. மொத்தத்தில் 13 வருடம் கழித்து படம் திரைக்கு வந்திருந்தாலும் ரசிகர்களை கவரக்கூடிய படமாகவே உள்ளது. 

எனவே வெற்றி படம் எப்போது வெளியானாலும் அது வெற்றிப்படம் தான் என்பதை மதகஜராஜா திரைப்படம் நிரூபித்துள்ளது. இந்த படத்துடன் வந்த ஏனைய படங்கள் கலவை ரீதியான விமர்சனங்களை பெற்றிருக்கக் கூடிய நிலையில் மதகஜராஜா நல்ல வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அது மட்டுமல்லாமல் ஜெமினி ஃபிலிம் தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்த படம் ஒரு கம்பேக் படமாக இருக்கும். அடுத்தடுத்து தயாரிப்புகளில் இறங்குவதற்கு இது பக்கபலமாக இருக்கும் என்று பலரும் பேசி வருகிறார்கள்..

Summary in English: If you’re a fan of Tamil cinema, you’ve probably heard about the latest flick, “Madhagajaraja,” directed by the talented Sundar C and featuring the charismatic Vishal in a lead role. This film brings together a mix of humor, action, and drama that keeps you entertained from start to finish.

Check Also

ஃபர்ஸ்ட் ஹாஃப் ஆமை வேகம்..! செகண்ட் ஹாஃப் ரொம்ப ஸ்பீட்.. “வணங்கான்” திரைவிமர்சனம்..! 

If you’re thinking about catching “Vanangaan,” buckle up for a wild ride! Now, let’s be real—the first half of the movie moves at a pace that can only be described as tortoise-like.