இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் கே இ ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெளி வந்திருக்கும் பிரம்மாண்டமான திரைப்படம் தான் கங்குவார் இதில் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார்.
இந்தத் திரைப்படமானது பாகுபலி,ஆர் ஆர் ஆர் வரிசையில் பிரம்மாண்டமான பேன் இந்திய திரைப்படமாக உருவாகி திரையரங்குகளில் வரக்கூடிய சூழ்நிலையில் 14ஆம் தேதி வெளியாகும் என தெரிகிறது.
பொன்னியின் செல்வனுக்குப் பின் வரலாற்றுப் பின்னணியில் உருவாக இருக்கும் பிரம்மாண்டமான இந்த திரைப்படம் பாலிவுட் பிரபலங்களான பாபி தியோல், திஷா பதானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படமானது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம், போஜ்புரி, கன்னடம் என மொத்தம் 35 மொழிகளில் வெளிவர உள்ளது.
கங்குவா உலகம் முழுவதும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரை அரங்குகளில் வெளிவர உள்ள நிலையில் இந்தப் படம் நிச்சயம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவிக்கும் என படத்தின் தயாரிப்பாளர் நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார்.
மேலும் அது பற்றி ஞானவேல் ராஜா கூறும் போது அவர்களின் இலக்கு 2000 கோடி என்றும் ஆயிரம் கோடி என்பது ஒரு மினிமம் கணக்கு தான் என்று சொல்லி இருக்கிறார்.
இந்த படத்தை பார்த்தால் கண்டிப்பாக இரண்டாம் பாகம் பற்றிய எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறிருக்கும் என்று சொல்லி இருக்கிறார்.
அதற்கு ஏற்றது போல் நடிகர் சூர்யாவும் மேடை நிகழ்ச்சி ஒன்றில் கங்குவா திரைப்படத்தை பார்க்கும் போது அனைவரும் வாய்ப்பிழந்து கொண்டு தான் பார்ப்பார்கள் என்று பேசி இருக்கிறார்.
இதை அடுத்து படம் பற்றி ஓவர் ஹைப் கொடுப்பது சரியா என்று சிலர் கேள்விகளை அடுத்து படம் வெளிவந்த பிறகு தான் அதன் உண்மை நிலை என்ன என்பது தெரியவரும்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளிவர உள்ள நிலையில் படத்தின் பிரமோஷன் வேலைகள் படு வேகமாக நடைபெற்று வருவதோடு பட குழு முழுமையாக அதில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் கங்குவார் திரைப்படத்தின் பிரீ புக்கிங் துவங்கப்பட்டுள்ள நிலையில் வசூல் வேட்டையை அது துவங்கிவிட்டது என சொல்லலாம். படத்தின் தணிக்கை குழு யூ ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது.
அத்தோடு படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 34 நிமிடங்கள் என்று சொன்னதோடு படத்தைப் பார்த்த சென்சார் குழுவினரை படத்தை மனதார பாராட்டு இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படத்தை பார்க்கவில்லை என்று சொல்லக்கூடிய அளவு படம் இருக்கும் என பட குழு சார்பில் தகவல்கள் வேகமாக வெளி வந்துள்ளது.
பிரம்மாண்டமான திரைப்படமாக அமைந்திருக்கும் கங்குவா திரைப்படம் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த கூடிய வகையிலும் நடிகர் சூர்யாவின் வெற்றி படங்களில் ஒன்றாகவும் இருக்கும்.
இப்படி எல்லாம் சென்சார் குழு படத்தை புகழ்ந்து தள்ளி இருப்பதை அடுத்து இந்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு படத்தைப் பார்க்க எகிரி உள்ளது என்று சொல்லலாம்.
Summary in English : The recent review of the Kanguva movie by the Censor Board has totally taken social media by storm! It’s like everyone’s got something to say about it, and the debates are heating up across various platforms. Fans are buzzing with excitement, while critics are diving deep into what they think works and what doesn’t.