நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கத்தில் நேற்று வெளிவந்த வணங்கான் திரைப்படம் மக்கள் மத்தியில் எத்தகைய மார்க்கினை பெற்றுள்ளது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் வணங்கான் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முதல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
இந்தத் திரைப்படம் காலை ஒளிபரப்பில் சில சிக்கல்கள் ஏற்பட்டதை அடுத்து கடைசி நேரத்தில் கேடிஎம் வழங்குவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 9 மணி மற்றும் 10 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டு ரசிகர்களை ஏமாற்றியது.
இதனைத் தொடர்ந்து 11 மணி அளவில் இந்த பிரச்சனை சரியான பிறகு திரையரங்குகளில் இந்த பட காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்தப் படத்தை பொறுத்தவரை அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை ரோஷினி பிரகாஷ் நடித்திருந்தார். மேலும் படத்தில் சமுத்திரக்கனி, மிஸ்கின், அருள்ராஜ், சரத்குமாரின் முதல் மனைவி சாயா சரத்குமார் நடித்திருந்தார்கள்.
இந்தப் படத்தில் சுனாமியால் பெற்றோர்களை இழந்த அண்ணன் தங்கையாக கதாநாயகனும் அவருடைய சகோதரியும் கதையில் வருகிறார்கள். வழக்கம் போல கதாநாயகனை கதாநாயகி துரத்தி துரத்தி காதலிக்கிறார் அவர் வீட்டருகே இருக்கக்கூடிய ஒரு பெண்.
அதுமட்டுமல்லாமல் வாய் பேச முடியாத காது கேட்காத கதாநாயகன் தனக்கு நடக்கக்கூடிய அநியாயங்களை தட்டிக் கேட்பதை அடுத்து அவனை துரத்தி துரத்தி காதலிக்கும் பெண்ணை காதலிக்க மறுத்து ஒரு கட்டத்தில் காதல் வயப்படுகிறான்.
எந்த வேலையும் இல்லாத காரணத்தால் அடிதடி என்று சுற்றி வரும் அவன் நிரந்தர வேலை பார்க்க வேண்டும் என்று அவனுடைய நலம் விரும்பிகள் முடிவு செய்து மாற்றுத்திறனாளிகள் தங்கி இருக்கக்கூடிய ஆதரவு இல்லத்தில் பணிக்காக சேர்த்து விடுகிறார்கள்.
அந்த இடத்தில் பணிக்கு சேர்ந்த பிறகு இரண்டு கொலைகள் செய்ய வேண்டிய கட்டாயத்தில் கதாநாயகன் தான் அந்த கொலையை செய்தேன் என்று நீதிமன்றத்தில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டதோடு கொலை செய்வதற்கான காரணத்தை சொல்ல மாட்டேன் என்று விடாப்பிடியாக இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து எதை சொல்லவும் மறுக்கக் கூடிய அவர் இன்னொருவரை கொலை செய்ய வேண்டும் என்று துடிக்கிறார். கதாநாயகனின் இந்த கொலைவெறிக்கு காரணம் என்ன? எதற்காக கொலை செய்தார்.
மேலும் அவர் அந்த மூன்றாவது நபரை கொலை செய்தாரா? இல்லையா? அவருடைய தங்கை மற்றும் காதலி எண்ணானார்கள் என்பது பற்றிய சுவாரசியமான கதைக்களத்தோடு வணங்கான் உள்ளது.
இந்த படத்தின் முதல் பாதி மிகவும் மெதுவாக நகர்வதோடு கதையைப் பார்க்கும் போதே அதில் என்ன இருக்கும் என்று நீங்கள் யோசிக்க கூடிய அளவு இருக்கும் மேலும் கதை எதை நோக்கி பயணம் செய்கிறது என்பது நீங்கள் எளிதில் அறிந்து கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல் இடைவேளைக்கு ஐந்து நிமிடங்களுக்கு பின்பு கதை என்ன? எதை நோக்கி செய்கிறது என்பதை இரண்டாம் பகுதியில் பார்க்கும் போது திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் விதம் படு ஸ்பீடாக செல்லும்.
இந்த திரைக்கதையானது பரபரப்பான அமைப்போடு இயக்குனர் பாலாவுக்கு உரிய ஜனரஞ்சகமான காட்சி அமைப்புகளோடு உள்ளது. இந்த படத்தின் முக்கிய பிளஸ் நடிகர் அருண் விஜய் தவிர படத்தில் இருக்கக்கூடிய புது முகங்களை சொல்லலாம்.
ஒருவேளை இந்த படத்தில் கதாநாயகனாக சூர்யாவோ, கதாநாயகியாக கீர்த்தி செட்டி அவர்களின் தங்கையாக மமிதா நடித்திருந்தால் கதையின் சாயல் மாறி இருக்கும்.
இவ்வளவு சிறப்பாக படம் வந்திருக்குமா? என்றால் கேள்விக்குறிதான் புது முகங்கள் என்றால் கூட அவர்களுடைய நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் இயக்குனர் பாலாவுக்கு சபாஷ் போட்டு இருப்பதோடு அவரின் ரசிகர் பட்டாளமும் முழுமையான திருப்தியை அடையக்கூடிய விதமாக வணங்கான் திரைப்படம் அமைந்துள்ளது. எனவே தைரியமாக தியேட்டர் சென்று அனைவரும் இந்த திரைப்படத்தை பார்க்கலாம்.
Summary in English: If you’re thinking about catching “Vanangaan,” buckle up for a wild ride! Now, let’s be real—the first half of the movie moves at a pace that can only be described as tortoise-like. Seriously, it feels like you’re watching paint dry in slow motion. But hey, don’t let that throw you off completely!