Wednesday , 22 January 2025
university

இரண்டு ஆண்டுகளாக துணைவேந்தர் இல்லை.. பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களின் சிக்கல்?

கோவையில் இருக்கும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகளாக துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. 

கோவையில் இருக்கும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக செயல்பட்டு வந்த காளிராஜ் ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அந்த பணியிடம் தற்போது வரை நிரப்பப்படவில்லை. 

இதனால் இந்த பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்கள் மட்டுமல்லாமல் மாணவர்களும் உயர்கல்வியை தொடர விரும்பும் பலரும் கவலைக் கொண்டு இருக்கிறார்கள். 

இதைத் தொடர்ந்து துணைவேந்தர் பதவி நிரப்பப்படாமல் இருப்பதற்கு என்ன காரணம் இதனால் அங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது போன்ற கேள்விகள் எழுந்து வருகிறது. 

பாரதியார் பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை இங்கு மொத்தம் 44 துறைகளில் 240 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள் 3000 திற்கும் அதிகமான முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கல்வி கற்று வருகிறார்கள். 

என்னுடைய தான் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி முதல் இன்று வரை துணைவேந்த பதவி நிரப்பப்படாமல் உள்ளது. இந்த துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் பல்கலைக்கழகத்தின் வேந்தரான ஆளுநர் தான் செய்ய வேண்டும். 

இந்த விஷயத்தை பொருத்தவரை ஆளுநர் தாமதம் காட்டுகிறார் என்று ஒருபுறம் ம் சொன்னாலும் மறுபுறம் இந்த பதவியை முதலமைச்சர் தான் நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. 

எனவே இந்த விஷயத்தை பொருத்தவரை மாணவர்களின் கல்விக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாமல் முடிவினை எடுப்பது சிறப்பாக இருக்கும் என்று சொல்லுவதோடு துணைவேந்தர் இல்லாததால் கல்வித்தரம் குறைந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. 

தற்போது பாரதியார் பல்கலைக்கழகம் A++ என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ள நிலையில் தரவரிசையில் 0. 56 புள்ளிகள் குறைந்துள்ளது என்ற உண்மையையும் ஒப்புக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது துணைவேந்தர் இல்லாத காரணத்தால் கல்லூரிகளுக்கான பாடத்திட்டம் குறித்து குழப்பம் ஏற்பட்டு மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் வசம் தெரிவித்திருக்கிறார். 

மேலும் துணைவேந்த பணியிடம் மட்டுமல்லாமல் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து 8 ஆண்டுகளாக பதிவாளர் படை இடமும் காலியாக இருக்கிறது இதைத் தவிர 70% மேலாக ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் காலியாக உள்ளது என்று விவரங்களும் வெளிவந்துள்ளது. 

எனவே எந்த ஒரு தாமதமும் இல்லாமல் மாணவர்களின் நலம் கருதி துணைவேந்தர் நியமனத்தில் ஏற்படும் தாமதம் குறித்து ஆளுநர் ஆர் என் ரவி உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

Summary in English: It’s been quite a ride at Bhartiyar University over the past couple of years, especially when it comes to the vice chancellor position. You’d think that after all this time, they would have filled the role, but nope! The university has been running without a permanent vice chancellor, which has raised quite a few eyebrows and sparked some conversations among students and faculty alike.

Check Also

குடிக்கு அடிமையான ராகுல் டிக்கி.. கடைசியாய் வாங்கி கொடுத்தது.. மனைவி சொன்ன திடுக்கிடும் தகவல்..!

In a recent open talk, Rahul and Ticky dove into some pretty personal topics, and one that stood out was Rahul's drinking habits.